ஆயுர்வேதமும் அறிவியலும் – 1

ஆயுஷ் மருத்துவர்களை நவீன மருத்துவம் புரிய அனுமதிப்பதால் என்ன சிக்கல் வரும்? நவீன மருத்துவர்கள் ‘மருத்துவ தரம்’ இழிந்து போவதை குறித்து எழுப்பும் சிக்கல்கள் ஒரு புறமிருக்கட்டும், மிக முக்கியமாக அது ஆயுஷ் மருத்துவ முறைகளை மொத்தமாக அழிக்கும். நவீன மருத்துவம் புரிய அரசாங்க அனுமதியுள்ள மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் இதுவே நிகழ்கிறது. நவீன மருத்துவத்திற்குச் செல்ல செலவற்ற பின்வாசல் வழியாக இவை மாறிவிடும். உண்மையிலேயே ஆர்வம் உள்ள மருத்துவர்கள் சிறுபான்மையினராக எங்கோ ஒடுங்கிப் போயிருப்பார்கள்.