ரீங்கார மகரந்தச்சேர்க்கை என்பது சில வகை செடி கொடிகளில் இருந்து மகரந்தத்தை கலைத்துப் போடுவது. அதற்கு ஒரு வகை வண்டு மட்டுமே உதவுகிறது. அந்தத் துளைபோடும் வண்டு பறப்பதை மென் நகர்வாக இங்கே படம் பிடித்திருக்கிறார்கள். இது இயற்கையாக பறக்கும் வானூர்தி. தக்காளி, கத்தரிக்காய் போன்ற காய்கறிகளை செழிப்பாக்க இது ஒன்றே சாலச் சிறந்த வழி. மலரின் மீது தன் பிஞ்சுக் கால் கொண்டு நடனமாடுவதை இங்கே பார்க்கலாம்: