இது ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் ஐபேட் கருவிக்கான விளம்பரம். எனினும், அதைக் குறித்து ஆர்ப்பரிக்காமல், மதியிறுக்கம் குறித்தும் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொழில் நுட்பம் எவ்வாறு உதவும் என்பதை சுட்டுகிறது. டிலன் என்பவரால் சாதாரண மனிதரைப் போல் பேச முடியவில்லை. அதனால், அவருடைய எண்ணங்கள் வெளிப்படாமல் அவருக்குள்ளேயே அடங்கிவிடாமல் இருக்க, கணினி உதவுகிறது. அவர் நினைப்பதை கணினி சொல்கிறது.
கண்ணால் பார்ப்பது பொய். மனதில் நினைப்பதை அறிய முடிவது மெய் என்பதை நிரூபிக்கும் குறும் ஆவணப்படம்: