[stextbox id=”info” caption=”சவுதி அரேபியா குறித்த ஆவணப்படம்”]
குற்றங்களுக்குத் துணை போவதும் குற்றம் செய்யத் தூண்டிவிடுவதும் பெரிய குற்றமே எனும் நீதியமைப்பின் மூலகர்த்தாக்கள் என அறியப்படும் இங்கிலாந்து அரசு தனது வெளியுறவுக்கொள்கைகளில் எந்தளவு மனிதாபிமானத்தைக் கைகொண்டிருக்கிருக்கிறது எனும் கேள்வி சமீப காலமாக எழும்பிவருகிறது. சிரியா நாட்டு உள்நாட்டு கலவரங்களில் ஈடுபடும் பிரித்தானியப் பிரஜைகள் நாடு திரும்பும்போது எப்படிப்பட்ட தண்டனையை வழங்க வேண்டும் எனக்கலந்தாலோசிக்கும் வேளையில், மத்திய கிழக்கு நாடுகளில் தண்டனை எனும் பெயரில் நடைபெறும் கொடூரக்கொலைகளை கண்டும் காணாமல் போவதோடு அந்நாட்டு ராணுவத்துக்கு துப்பாக்கி குண்டுகள் கொடுத்து உதவுவதை என்னவென்று சொல்வது?
[stextbox id=”info” caption=”ராணுவத்தினரின் பாலியல் வன்முறை”]
யுத்தத்தின் போதும் உள்நாட்டு களவரங்களின் போதும் பேரிழப்பை சந்திப்பது வீரர்களோ படைகளோ அல்ல. பெண்களும் குழந்தைகளுமே பெருவாரியான கொடூரங்களுக்கும் ஆளாகிறார்கள். ஒருவிதத்தில் அது ஆக்கிரமிப்பாளர்களின் வெறியின் வெளிப்பாடு. அடிமைகளாக நடத்தப்பட்டோரின் சார்பில் இதுவரை எந்தொரு பெரிய வழக்கும் தீர்ப்பானதில்லை என்றாலும் கெளதமாலாவில் அடிமைப்படுத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைத்துள்ளதை உலகமே ஆச்சர்யத்தோடு பார்க்கிறது. கிட்டத்தட்ட குடும்பம் மொத்தத்தையும் அழித்து இப்பெண்களை அடிமைகளாக வைத்திருந்த ராணுவ அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கியதன் மூலம் மனித குலம் தோன்றிய நாள் முதல் ஆண்களால் நடத்தப்படும் யுத்தங்களுக்கு தண்டனையாக சட்டம் முதன்முறையாக விழித்திருக்கிறது என்றே தோன்றுகிறது.
http://www.theguardian.com/world/2016/mar/01/guatemala-sexual-slavery-sepur-zarco-military-officers-jailed
[/stextbox]
[stextbox id=”info” caption=”மரத்தில் இருந்து உதிர்ந்த இலைகள்”]
கிட்டத்தட்ட 270 மில்லியன் தொழிலாளர்கள் மூலம் தங்கள் வர்த்தக பலத்தை உலகுக்குக் காட்டிய சீனா இன்று அதே மக்களுக்கு வீடு அளிக்கப் பலவித வழிகளைக் கைகொண்டு வருகிறது. கடந்த இருபது வருடங்களாக 270 மில்லியன் மக்கள் தங்கள் சொந்த கிராமங்களை விட்டுவிட்டு சீனாவின் நகரப்பகுதிகளுக்கு குடிபெயர்ந்திருந்தனர். இதுகாறும் சீனாவின் தொழில்வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருந்தவர்கள் இவர்கள் தான். ஆனால், கடந்த சில மாதங்களாக சீனா பொருளாதார ரீதியில் தேக்கத்தை சந்தித்து வருகிறது. இதனால் இம்மக்கள் வீடு வாங்குவதும், வாங்கிய கடனை அடைக்கும் சக்தியும் குறைந்திருப்பதாக சீனா கவலை தெரிவித்துள்ளது. வட்டி விகிதத்தை பெருமளவு குறைக்கும்படியாக சில காரியங்களைச் செய்துவருவதன் மூலம் தங்கள் மக்களுக்கு கொஞ்சமேனும் பிரதியுபகாரம் செய்ய முடியும் எனக் காட்டியுள்ளது. இதில் மறைமுகமாகச் சுயநலம் தெரிந்தாலும் மக்கள் நலனில் அக்கறை காட்டுவது மிகவும் பயனுள்ள காரியமாகும்
[stextbox id=”info” caption=”சமைத்துப் பார்”]
சமையற்கலை புத்தகங்களுக்கு எப்போதும் மவுசு இருக்கிறது என்பதற்கு பத்மா லஷ்மி சமீபத்திய உதாரணம். இவர் மாடலாக இருப்பதும் சல்மான் ருஷ்டியின் முன்னாள் மனைவியாக இருப்பதும் விற்பனைக்கு உபரி லாபமாக இருக்கிறது. தற்போது “Love, Loss and What We Ate” (காதல், கேடு மற்றும் நாம் உண்டதும்) என்னும் தலைப்பில் 324 பக்கங்களுக்கு தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைப் புத்தகமாக்கி இருக்கிறார். அவருடைய பால்யகாலம், காதல் விஷயங்கள், வேலையில் கிடைத்த அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார். மனைவியாக வெறுமனே அந்தப்புரத்தை அலங்கரிக்காமல் முன்னேற நினைத்தது, தன்னைப் போன்ற பெண்களுக்கு வரும் உடலியல் சிக்கலுக்காக தொண்டு அமைப்பை நிறுவியது என்று தன்னுடைய வெற்றியின் பின்னணியில் உள்ள தடுமாற்றங்களையும் சொல்லி இருக்கிறார். அந்த நூல் குறித்த அறிமுகத்தை இங்கே பார்க்கலாம்.
www.nytimes.com/2016/03/10/arts/padma-lakshmi-opens-up-about-rushdie-in-memoir.html
[/stextbox]