மழை பெய்த சொத சொத தரை. அந்த மண் தரையில் உறக்கம். அவரின் ஓராண்டு வயதே ஆன மகள் ஈரத்தில் கிடக்கிறாள். கிரேக்கத்தில் நுழைந்த நாளில் இருந்தே அடைமழை. அந்தக் காட்சியை உலகெங்கும் ஒளிபரப்ப ஆளில்லாமல் இயக்கப்படும் தூரயியங்கிகள் அவர்களின் தலைக்கு மேல் பறந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் 12,000த்திற்கும் அதிமான அகதிகள் காத்திருக்கிறார்கள். கிரேக்கத்தில் இருந்து மாசிடோனியா. மாசிடோனியாவில் இருந்து கிரிக்கெட் மைதானத்தை குறுக்குவெட்டாகக் கடப்பது போல் நடந்துவிட்டால், ஜெர்மனி வந்துவிடும். அதன் பிறகு சிரியாவில் இருந்து கிளம்பிய பயணம் பூர்த்தியாகிவிடும். ஆனால், இவர்களுக்கு திடீரென்று இழுத்துப் பூட்டி விட்டார்கள். மீண்டும் துருக்கிக்கே அனுப்பப்படுவார்களா? வேறு ஐரோப்பிய நாடு ஏதாவது ஏற்றுக் கொள்ளுமா? உயிர் பிழைப்பார்களா?
நாற்பத்தி நான்கு ஆயிரம் அகதிகளின் நிலை: