வேற்றுலகக் கொண்டாட்டம்

வருடாவருடம் அர்ஜெண்டினாவில் வேற்றுகிரக வாசிகளுக்கான திருவிழா எடுக்கிறார்கள். கெப்பிலா டெல் மாண்டே என்னும் இடத்தில் கொர்டொபா (Capilla del Monte, Cordoba) என்னும் நகரத்தில் முப்பதாண்டுகள் முன்பு பறக்கும் தட்டு வந்ததைப் பார்த்தவர்கள் தொடங்கி வைத்த வைபவம். இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக அறிவியல் கருத்துப் பரிமாற்றமாகவும் ஆன்மிக விழாவாகவும் மாறிவருகிறது.
இந்த ஒன்றுகூடலின் போது வானத்தில் இருந்து மின்னல்வெட்டியதை ஒளிப்படமாக பார்க்கும்போது அறிபுனை ஆக்கம் படிப்பது போல் ஏதோவொன்று இடித்தது:

Lightning_Capilla del Monte, Cordoba

கீழே வேற்றுகிரகவாசியாக வேஷம் தரித்தவர் உலா வருகிறார்.

alien_festival