ஷியாவா? ஸுன்னியா??

Time_Islam_Muslim_Covers_Books_Magazines_SunniShia

உலகில் இருக்கும் இஸ்லாமியர்கள் ஷியாக்கள் என்றும் ஸுன்னிகள் என்றும் இருபிரிவாக பிரிந்து இருக்கிறார்கள். இந்த பிரிவு முகமது நபியின் இறப்புக்குப்பின்னர் இஸ்லாமியர்களை யார் வழிநடத்துவது என்ற பிரச்சினையில் ஆரம்பமானது.
உலகின் இஸ்லாமிய மக்கள்தொகையில் பெருவாரியோனோர் ஸுன்னி இன மக்கள், அவர்கள் உலக இஸ்லாமிய மக்கள்தொகையில் கிட்டத்தட்ட எண்பது சதவிகிதம் பேர். மீதமுள்ளோர் ஷியாக்கள் மற்றும் இன்ன பிற பிரிவுகளான அகமதியாக்கள் போன்றோர்.
இந்த இருபிரிவினரும் பல நூற்றாண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து இருந்ததுடன் இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் பகிர்ந்துகொண்டிருக்கின்றனர்.
பொது இடங்களில் ஒருவருக்கொருவர் சேர்ந்திருப்பதில்லை என்றாலும் ஈராக்கின் நகரப்பகுதிகளில் சமீபகாலம்வரை ஷியா – ஸுன்னி கலப்புத்திருமணங்கள் நடந்திருக்கின்றன. இவர்களுக்குள்ளான பிரிவு மதக்கொள்கை, சம்பிரதாயங்கள், சட்டங்கள், மற்றும் மத அமைப்புகளில் உள்ளது. இரு பிரிவுகளின் மதத்தலைவர்களும் எப்போதும் யார் சரி என்ற போட்டியிலேயே இருப்பார்கள்.
லெபனான், சிரியா,ஈராக், பாக்கிஸ்தான் நாடுகளில் இந்த இருபிரிவினருக்குள் ஏற்படும்சண்டைகளால் சமூகங்கள் பிரிந்து கிடக்கின்றன.

ஸுன்னிகள் என்போர் யார்?

ஸுன்னிகள் தங்களை பழமைவாத, பாரம்பரிய இஸ்லாமியர்கள் என அழைத்துக்கொள்கின்றனர்.
ஸுன்னி என்ற வார்த்தை ”அஹ்ல் அல் சுன்னா” என்ற அரபு வார்த்தையில் இருந்து வந்தது. அதாவது, பாரம்பரியத்தின் மக்கள் என்ற பொருள்படும். ஸுன்னிகள் குரானில் சொல்லப்பட்டுள்ள அனைத்து தீர்க்கதிரிசிகளையும் ஏற்றுக்கொள்வோர், ஆனால், முகமது நம்பியே இறுதித்தூதர் என்பது அவர்கள் நம்பிக்கை. முகமது நபிக்கு பின்வந்தோரெல்லாம் தற்காலிக நபர்களே என்பதும் அவர்கள் கொள்கை.
ஷியா பிரிவினருக்கு மாற்றாக ஸுன்னி மதகுருமார்கள் அனைவரும் குறிப்பிட்ட நாட்டின் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழேயே வருகின்றனர். ஸுன்னி பாரம்பரியம் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட இஸ்லாமிய சட்டத்தி உறுதியாக பின்பற்றுதலுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

ஷியாக்கள் என்போர் யார்?

இஸ்லாமிய சரித்திரத்தின் ஆரம்பத்தில் ஷியாக்கள் ஒரு அரசியல் கட்சிபோல செயல்பட்டவர்கள். அலியின் கட்சி என்ற பொருளில்.
முகமது நபியின் மறைவுக்கு பின்னர் நபியின் மருமகனான அலி மற்றும் அவரது வழித்தோன்றல்களே இஸ்லாமியர்களை வழிநடத்த வேண்டும் என்ற உரிமையைக்கோரினர். குடும்பச்சண்டைகளாலும், வன்முறைகளாலும், அலியும் கொல்லப்பட்டு மக்கள் மற்றும் உறவினர்களோடு சேர்ந்து அவரது காலிஃபேட் ( அவர் நடத்திய அரசாங்கம்) முழுதும் அழிந்தது
அலியின் சகோதரரான ஹுஸ்ஸைன் அவரது குடும்பத்துடன் அலி கலிஃபாவாக இருந்த குஃபாவுக்கு அழைக்கப்பட்டு (ஹுஸ்ஸைனுக்கு தங்கள் ஆதரவை தெரிவிப்பதற்காக அழைப்பதாக கூறி அழைத்திருந்தனர்) அங்கு நடந்த போரில் ஹுஸ்ஸைனும்,அவரது குடும்பத்தினரும் கொல்லப்பட்டனர். கூஃபாஎன்பது அலி நடத்திய காலிஃபேட்டின் தலைநகரம். இது இன்றைய நஜஃப் நகரத்திற்கு அருகில் உள்ளது.
இந்த நிகழ்ச்சிதான் ஷியா பிரிவு மக்களுக்கு வீரமரணம் மற்றும் துக்கம் அனுஷ்டிக்கும் பழக்கத்திற்கான ஆரம்பம். அரபயின் என இன்று ஈராக்கில் 40 நாட்கள் அனுபவிக்கப்படும் துக்கம் இமாம் ஹுசைன் இறப்பின் துக்கத்தை ஒவ்வொரு ஆண்டும் நினைவுகூறவே.
உலகம் முழுக்க கிட்டத்தட்ட 120 முதல் 170 மில்லியன் ஷியாப்பிரிவு இஸ்லாமியர் இருக்க வாய்ப்புண்டு. வேறுவகையில் சொல்வதானால், உலகம் முழுக்க இருக்கும் இஸ்லாமியர்களில் இவர்கள் 10 சதவீதம்.
ஷியாப்பிரிவு மக்கள் மெஜாரிட்டியாய் இருக்கும் நாடுகள் ஈரான், ஈராக், பஹ்ரெய்ன், அஜெர்பெய்ஜான், ஏமென்.
ஷியா மக்கள் பெரும் எண்ணிக்கையில் இருக்கும் நாடுகள் ஆப்கானிஸ்தான், இந்தியா, பாக்கிஸ்தான், கத்தார், சிரியா, துருக்கி, சவுதி அரேபியா, மற்றும் அமீரகம். ஸுன்னி இஸ்லாமியர்கள் மெஜாரிட்டியாய் இருக்கும் நாடுகளில் ஷியாக்கள் எப்போதும் வறுமைக்கோட்டில் இருப்பார்கள். அவர்கள் மீது வன்முறை ஏவிவிடப்படும். அவர்களை கொலை செய்தலை அரசே நியாயப்படுத்தும்.
ஈரானில் 1979ல்நடந்த ஷியா இஸ்லாமிய புரட்சி ஸுன்னி பிரிவினர் ஆளும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெரும் சவால் விடுவதாக இருந்தது. மேலும், ஷியா ஈரானின் கொள்கையான ஷியாப்பிரிவு இஸ்லாமியர்களின் பயங்கரவாத குழுக்களுக்கு, அரசியல் கட்சிகளுக்கு ஈரானில் மட்டுமின்றி ஈரானுக்கு வெளியேயும் ஆதரவளிப்பது ஸுன்னி பிரிவு ஆட்சியாளர்கள் ஆளும் நாடுகளை ஒன்றிணைக்க வைத்தது.
லெபனானில் நடந்த உள்நாட்டுப்போரில் ஷியாக்களின் குரல் அரசியல் அரங்கில் ஓங்கி ஒலித்தது. இதற்கு காரனம், ஹிஸ்புல்லாவின் ராணுவ நடவடிக்கைகள். பாக்கிஸ்தானிலும், ஆஃப்கானிஸ்தானிலும் அடிப்படைவாத ஸுன்னி பயஙகரவாத குழுக்களான தாலிபான் போன்றவைகள் ஷியாப்பிரிவு மத வழிபாட்டுத்தலங்கள்மீது தாக்குதல் நடத்தியது, நடத்துகிறது.
ஈராக்கிலும், சிரியாவிலும் நடக்கும் உள்நாட்டுப்போர் ஷியா, ஸுன்னி பிரச்சினையாக பார்க்கப்பட்டு இளம் தலைமுறை ஸுன்னி மக்கள் பயங்கரவாத குழுக்களுடன் சேர்கின்றனர். இதற்கிடையில், ஷியாப்பிரிவு மக்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக அல்லது அரசாங்கப்படையுடன் சேர்ந்துகொண்டு சண்டையில் ஈடுபடுகின்றனர்.
இஸ்லாத்தில் இருக்கும் இந்த இரு பிரிவினரின் பகையால்தான் உலகெங்கும் ரத்த ஆறும், பல லட்சம் மக்கள் வீடு வாசல்களை இழந்து அந்நிய நாட்டில் வாழ வகையில்லாமல் தஞம் புக நேர்ந்துகொண்டிருக்கிறது.
இந்தப் பிரிவினையின் மூலத்தை தேடினால் இஸ்லாத்தின் இறைத்தூதர் எனக்கருதப்படும் முகமது நபியின் இறப்பிற்கு பின்னர்தான் இந்தப் பிரச்சினையே ஆரம்பமாகிறது. அதற்கு முன்பு வரை குலக்குழுக்கள் இருந்தாலும் அவர்கள் இஸ்லாம் என்ற குடையின் கீழேயே வருகின்றனர்.
இறைவன் ஒருவனே, முகமது நபியே அவரின் தூதர் என்பதைச் சொல்லும் குரான் வசனம்தான் ”லா இலாஹா இல்லல்லாஹா, முஹம்மது ரசூலுல்லாஹா” என்பது.
இதை வார்த்தைக்கு வார்த்தை கடைப்பிடிப்போரே இஸ்லாத்தின் சன்னிகள் ,பிரிவை சேர்ந்தவர்கள். இறைவன் ஒருவனைத்தவிர வேறில்லை என்றும் முகமது நபிக்குபின்னர் இஸ்லாத்தில் வணங்கத்தக்க நபியோ, இமாமோ இல்லை என்பது இவர்கள் கட்சி. இந்தப்பிரிவைச் சேர்ந்தவர்தான் ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைன்.
இறைவன் ஒருவனே, அவனே அல்லா, முகமது நபியே இறைத்தூதர் என்பதை நம்புவதுடன் முகமது நபிக்குப் பின்னர் 12 இமாம்கள் முகமது நபியின் போதனைகளை கொண்டு சென்றனர். அவர்களும் வணங்கத்தக்கவர்களே என்பது ஷியாப்பிரிவினரின் நம்பிக்கை.
அல்லா ஒருவனைத்தவிர வேறு யாரையும் வணங்குவதென்பது இறைவனுக்கு இணைவைப்பதாக கருதுகிறார்கள் சன்னிகள். அவர்களால் இஸ்லாம் தூய தன்மையிலிருந்து விலகி நீர்த்துப்போவதாக கருதுகின்றனர். அதை தடுத்து நிறுத்த சன்னிகளின் கையில் இருக்கும் ஒரே ஆயுதம் இறைவனைத்தவிர வேறு யாரையும் வணங்குபவர்களை, குறிப்பாய் இறைவனுக்கு இனை வைப்பவர்களை இஸ்லாமியர்கள் அல்ல என அறிவித்து அவர்களை அழிக்கும் வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
சன்னி பிரிவு இஸ்லாமின் வன்முறை நிரம்பிய பிரிவாக முதலில் வஹாபியிஸம் வந்தது. அதன் பின்னர் வந்த ஐஎஸ் என்ற பயங்கரவாத குழு வஹாபியர்களை நல்லவர்களாக்கிவிட்டது.
இறைவன் ஒருவனே என்பதை ஏற்றுக்கொண்டுள்ளோம், அதேபோல இமாம் ஹுசைனும், இமாம் அலியும் போல முகமது நபிக்கு பின்னர் வந்த 12 இமாம்களை வணங்குவதும் எங்கள் உரிமை, அதை தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்பது ஷியாப்பிரிவு இஸ்லாமியர்களின் வாதம். அதற்காக உயிரையும் கொடுக்க தயங்கமாட்டோம் என்பதே ஷியாக்களின் நிலைப்பாடு.
ஏக இறைவனை ஒத்துக்கொள்ளும் ஷியாக்கள் பிற இமாம்களை அல்லாவை வணங்குவதுபோல இமாம்களையும் வணங்குவது சன்னிகளுக்கு எரிச்சலை தருகிறது. அவர்கள் அப்படி வணங்குவதை தடுத்து நிறுத்த அவர்கள் வணங்கும் கல்லறைகளை அடித்து நொறுக்குவது. ஷியாக்கள் வாழும் பகுதிகளில், மசூதிகளில், வெடிகுண்டுகள் மூலமும், கொத்து கொத்தாய் கொல்வதன் மூலமும் ஷியாப்பிரிவு இஸ்லாத்தை அழிக்கப்பார்க்கின்றனர். மேலும் எண்ணெய் வளமிக்க நாடுகளான சவுதியும், குவைத்தும், கத்தாரும் போல பல நாடுகள் சன்னி இஸ்லாம் பிரிவை சேர்ந்தவைகள் என்பதால் அவர்களுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு மூலம் கிடைக்கும் அபரிமிதமான பணத்தைக் கொண்டு வஹாபியிஸம் என்றழைக்கப்படும் சன்னி பிரிவு இஸ்லாத்தைப் பரப்ப ஆயிரக்கணக்கான மதரசாக்களையும், மசூதிகளையும் இஸ்லாமியர்கள் குறைவாக இருக்கும் நாடுகளில் கட்டுவதன் மூலம் ஷியாக்களின் வளர்ச்சியை தடுத்து நிறுத்துவதுடன் அவர்களை இல்லாமல் ஆக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

4 Replies to “ஷியாவா? ஸுன்னியா??”

 1. ஜெயகுமார். நல்ல முயற்சி. வ்யாசத்தில் நீங்கள் சொல்ல வரும் விஷயம் சில இடங்களில் தெளிவாக இல்லை. நாலாவது கலீஃபாவான அலி அவர்களுக்கும் பைகம்பர் முஹம்மது அவர்களுடைய மகளான ஃபாத்திமாவுக்கும் பிறந்தவர் ஹுஸைன். அலிக்குப் பிறகு யார் தலைமையேற்கவேண்டும் என்பதில் பிளவு.
  கர்பலா யுத்தத்தில் ஹுஸைன் கொல்லப்பட்டார். முஹம்மது நபி அவர்கள் தனக்குப் பின் அலியின் வம்சத்தவர்கள் இஸ்லாமியர்களின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று கட்டளையிட்டதாக ஷியாக்கள் சொல்லுகிறார்கள். முஹம்மதுநபிக்கு பின் வந்த இமாம்கள் அனைவரும் வணங்கத்தக்கவர்கள் என்பதும் இவர்களது தரப்பு.
  வ்யாசம் முழுதும் சன்னி என்று எழுதியிருக்கிறீர்கள். சரியான உச்சரிப்பு சுன்னி.
  உங்களுடைய வ்யாசம் ஷியாக்கள் மற்றும் சுன்னி முஸ்லீம்களிடையே உள்ள சச்சரவை மட்டிலும் பேச விழைகிறது.
  பரேல்வி சுன்னி இஸ்லாம் மற்றும் தேவ் பந்தி சுன்னி இஸ்லாம் இடையேயும் மிகப்பெரும் பிளவு உண்டு. முன்னது ஸூஃபி இஸ்லாம் என்ற வழிமுறையைப் பின்பற்றி அவுலியாக்களை வணங்குகிறது. முஹம்மது நபியின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. அப்படிப்பட்ட கொண்டாட்டங்களை ஏற்றுக்கொள்ளாத தேவ்பந்தி சுன்னி முஸல்மாணியர் பரேல்விகளின் நபி பிறந்த நாள் கொண்டாட்ட ஊர்வலங்களில் குண்டு வெடிக்கச்செய்து கொத்துக் கொத்தாக பரேல்வி சுன்னி முஸல்மாணியரைக் கொலை செய்திருக்கிறது.
  ஆக ப்ரச்சினை ஷியா மற்றும் சுன்னி முஸல்மாணியருக்கு இடையே மட்டிலுமல்ல. மாறாக சுன்னிகளிலும் கூட பரேல்வி சுன்னி மற்றும் தேவ்பந்தி சுன்னி இஸ்லாமியிருக்கு இடையேயும் கடும் பிளவும் சச்சரவும் இருக்கின்றது.
  http://herald.dawn.com/news/1153276
  பாக்கி ஸ்தானத்து டான் பத்திரிக்கையில் வெளிவந்த மேற்கண்ட வ்யாசம் தங்களது முயற்சிக்கு மேலும் தகவல்களைத் தரும்.

 2. //ஷியா மக்கள் பெரும் எண்ணிக்கையில் இருக்கும் நாடுகள் ஆப்கானிஸ்தான், இந்தியா, பாக்கிஸ்தான், கத்தார், சிரியா, துருக்கி, சவுதி அரேபியா, மற்றும் அமீரகம் //
  low quality editing. the first word should be Sunni.

Comments are closed.