மகரந்தம்

[stextbox id=”info” caption=”சீன அரசின் சகிப்புதன்மைக்கு வந்த சோதனை”]

china

சீனாவுக்குள் பல பாதாள உலகங்கள் உள்ளன. உலக வர்த்தகத்துக்காக பகல் இரவு வேஷம் போடும் ஹாங்காங் பகுதி. உலகின் முதலியத்தின் பலமுகங்களுக்கான துடுப்பு இங்கிருந்து தொடங்குகிறது. இந்த பல்லிளிப்புக்குப் பின்னால் பெரும் அசுரனாக மெயின்லாண்ட் சீனா எனப்படும் பெருநிலப்பகுதி உள்ளது. கம்யூனிச அதிகாரத்தின் பல கோரமுகங்களுக்கு இன்றும் தலைவனாக இருக்கும் இப்பகுதியில் அதிகாரம் என்பது நயவஞ்சகத்தில் தொடங்கி வன்முறையிலும், அழித்தொழிப்பிலும் முடியும் அமைப்பாகும். சீன தேசியத்தை விமர்சனம் செய்யும் பத்திரிக்காதிபதிகளும், கலைஞர்களும் தங்கள் பாதுகாப்பு கருதி இதுநாள் வரை ஹாங்காங்கில் சுதந்தரமாகத் திரிந்திருந்தனர். அந்த ஊசிமுனை சுதந்திரத்துக்கும் சீனா கண்டாமணி அடித்துவிட்டது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஐந்துக்கும் மேற்பட்ட பத்திரிக்கையாசிரியர்கள் அரசுக்கு ‘உதவும்’ பொருட்டு மெயின்லாண்ட் சீனாவுக்கு ‘கூட்டிச்’ செல்லப்பட்டிருக்கிறார்கள். ஒருசிலர் ஹாங்காங்கில் சுதந்திரமாகத் திரிந்தவர்கள், ஒருவர் விடுமுறைக்காக தாய்லாந்துக்குச் சென்றிருந்தவர். பெரியண்ணன் கண்டுபிடித்த மாயக்கடத்தி மூலம் திடுமென மறைந்தவர்களைத் தேடி அவர்களது உறவினர்களும் நண்பர்களும் தேடத்தொடங்கியபோது அரசுக்கு உதவுவதற்காகக் கூட்டிச் சென்றுள்ளதாக தொலைபேசி செய்திவந்துள்ளது. இந்த முகத்தைப் நோக்காவண்ணம் உலகின் பல நாடுகளும் சீனாவுடன் போட்டிப்போட்டு வர்த்தகத்தை வளர்க்கின்றன. அதைப் பற்றிய குறிப்பு கீழே:

http://goo.gl/Id6gyJ/

[/stextbox]


[stextbox id=”info” caption=”ஜெர்மனியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் பாதகம்”]

germany

புத்தாண்டுக்கொண்டாட்டம் உலகெங்கும் களியாட்டத்துக்கும் குழப்பங்களுக்கும் இடையே நடந்து முடிந்திருக்கிறது. ஐரோப்பாவிலும் நடந்தது அதுவே. இந்த முறை ஜெர்மனியின் கலோன் பகுதியில் நடந்த கேளிக்கையின்போது பெண்களிடம் பல குழுக்குள் தவறாக நடந்ததாகப் பெரும் சர்ச்சை நடந்து வருகிறது. பெண்களிடம் தவறாக நடந்தவர்களில் பலர் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வந்தவர்கள் எனத் தெரியவந்தபோது விஷயம் அரசியல் சிக்கலானது. கடந்த ஆண்டு சிரியா நாட்டு அகதிகளுக்கு தங்கள் கதவுகளைத் திறந்து இருகரம் கூப்பி அழைப்பு விடுத்த ஜெர்மன் நாட்டின் இக்கொள்கை மீது வழக்கம்போல பல எதிர்கட்சியினர், குறிப்பாக வலதுசாரிகள், அதிருப்தியில் இருக்கும்போது அவர்கள் மடியில் இப்படிப்பட்ட செய்தி வந்து விழுந்திருக்கிறது. அதுமட்டுமல்லாது வடக்கு  ஐரோப்பா நாடுகளான நார்வே, ஸ்வீடனில் கற்பழிப்பு நடக்கும் சதவிகிதம் அதிகரிப்பதாக செய்தி வந்துள்ளன. இது போன்ற செய்திகள் அனைத்தும் பொதுமக்களை பாதிப்பதைக்காட்டிலும் பல மடங்கு அகதிகளின் வாழ்வைக்கேள்விக்குள்ளாக்கும் என்பதில் சந்தேகமில்லை. அரசு அதிகாரத்தில் இருப்பவர்கள் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தங்கள் காவல் துறையினரிடம் மேலும் அதிக அதிகாரத்தைக் கொடுப்பார்கள் என்றாலும் அது இப்பிரச்சனையை சரிசெய்யுமா?

http://www.theguardian.com/commentisfree/2016/jan/09/the-left-must-admit-the-truth-about-the-assaults-on-women-in-cologne

[/stextbox]


[stextbox id=”info” caption=”போப் பிரான்ஸிஸ் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்?”]

pope

அயர்லாந்து நாட்டில் கதோலிக்கச் சபையின் அதிகாரத்தில் இருந்த அமைப்புகளில் நடந்த பாலியல் முறைகேடுகளுக்காகப் போர் பிரான்ஸிஸ் பகிரங்கமான மன்னிப்பு கேட்டது நினைவில் இருக்கலாம். அதேபோல அவரது பொலிவிய நாட்டுப்பயணத்தின் போது, பல நூற்றாண்டுகளாக கிறிஸ்துவத்தின் பெயரால் அங்கு நடந்த காலயாதிக்க அழித்தொழிப்புக்கு மன்னிக்குக் கேட்டார். இதைத் தொடர்ந்து ஒரு நூற்றாண்டாக திட்டமிட்டு அரசு செயல்படுத்தும் குழந்தைகள் காப்பகத்தின் வன்முறை குறித்து கனடா நாட்டுப் பிரதமமந்திரி ஜஸ்டின் ட்ரூடியூ மன்னிப்பு கேட்டுள்ளார். இதற்கு போப் பிரான்ஸிஸ் அவர்களும் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். போப் பிரான்ஸிஸுக்கும் கனடா நாட்டு அரசு அமைப்புக்கும் என்ன சம்பந்தம்? சம்பந்தம் இருக்கிறது என்கிறார் இந்த கட்டுரையாசிரியர் – கிறிஸ்துவ தேவாலயங்களால் நடந்தப்பட்ட பள்ளிகளில் பிள்ளைகளை வலுக்கட்டாயமாக குடும்பத்திலிருந்து பிரித்து காப்பகங்களில் தங்கவைத்து வன்முறை மூலம் ‘சீரமைப்பதாக’ குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

http://www.economist.com/blogs/economist-explains/2016/01/economist-explains
[/stextbox]