[stextbox id=”info” caption=”ஞயம்பட வரை”]
ப்ரதிலிபியும் அகம் மின்னிதழும் இணைந்து கட்டுரைப்போட்டி ஒன்றினை நடத்தவிருக்கிறோம்.
போட்டி விபரங்கள் :
அ) தலைப்பு : “இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன? அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்?” – பதில் காண முயல்வோம்.
ஆ) கட்டுரைகள் 1500 வார்த்தைகளுக்கு மேலும், 2500 வார்த்தைகளுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
இ) உங்கள் கட்டுரைகளை ஒருங்குறி வடிவில், மைக்ரோசாஃப்ட் வோர்டு கோப்பாக மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கவும்.
ஈ) பரிசுத்தொகை : முதல் பரிசு – 15000, இரண்டாம் பரிசு – 10000, மூன்றாம் பரிசு – 5000.
உ) அனுப்பவேண்டிய கடைசி நாள் – 15/01/2016.
ஊ) கட்டுரைகளை tamil@pratilipi.com மற்றும் balaji@agamonline.com ஆகிய இரண்டு முகவரிகளுக்கும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புக்கு: சங்கரநாராயணன் – 09789316700; பாலாஜி – 09940288001.
http://www.pratilipi.com/event/gnayam-pada-varai
[/stextbox]
[stextbox id=”info” caption=”இ. மயூரநாதனுக்கு இயல் விருது – 2015″]
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வருடா வருடம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது ( இயல் விருது ) இம்முறை தமிழ் விக்கிப்பீடியா என்னும் இணையத்தளக் கலைக்களஞ்சிய கூட்டாக்கத் திட்டத்தை தொடங்கி வெற்றிகரமாக இயக்கிவரும் திரு இ.மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 17வது இயல் விருது ஆகும்.
இலங்கையில் வண்ணார்பண்ணை என்னுமிடத்தில் பிறந்த திரு மயூரநாதன் . கட்டடக்கலையில் முதுநிலை பட்டம் பெற்றபின்னர் கொழும்பில் 17 ஆண்டுகள் பணியாற்றினார். 1993-ல் துபாய்க்குப் புலம்பெயர்ந்தவர் தமிழ் அறிவியல் துறையில் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். 2001ம் ஆண்டு ஆங்கிலத்தில் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டபோது, அதன் பின்னணியில் உள்ள தொழில்நுட்பம் கொடுக்கும் ஆற்றலையும், அறிவு உருவாக்கத்தில் அதன் மகத்தான பங்களிப்பையும் உணர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவை 2003ம் ஆண்டிலேயே தொடங்கினார்.. முதல் 12 மாதங்கள் தனியாளாக அதன் அடிப்படை வசதிகளைச் செய்து வலுவான தளமாக அமைப்பதற்கு உழைத்தார். பின்னர் சிறிது சிறிதாக இணையத்தளத்தை விரிவாக்கி திறமையான பங்களிப்பாளர்களை இணைத்து மிகச் சிறப்பாக இயங்கும் ஒரு கூட்டுக்குழுமமாக அதை நிறுவினார்.
தமிழ் விக்கிப்பீடியாவே முதன்முதலாக அனைத்துலக பங்களிப்பாளர்கள் கூட்டாக இயங்கி ‘’Web 2.0’’ என்னும் முறையில் உருவாக்கப்பட்ட மாபெரும் படைப்பு. இதில் ஓரளவிற்குக் கணிசமாகப் பங்களித்திருப்பவர்கள் ஏறத்தாழ 100 பேர்தான் எனினும், இன்று 88,000 பேருக்கும் அதிகமானவர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளனர். கலைக்களஞ்சியத்தில் ஏற்றப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை 83,000. இதில் 80 வீதம் கட்டுரைகளை ஒதுக்கிவிட்டாலும்கூட 16,600 தரமான கட்டுரைகள் என்பது 24 தொகுதிகள் அடங்கிய அச்சுக் கலைக்களஞ்சியத்திற்கு சமமானது. இம்மாபெரும் படைப்பில் மயூரநாதன் மட்டுமே முதல் கட்டுரையிலிருந்து இன்றுவரை 4200-க்கும் மேற்பட்ட தரமான கட்டுரைகளைத் தொடங்கி உருவாக்கியுள்ளார். இவற்றை அச்சிட்டால், குறைந்தது 500 பக்கங்கள் கொண்ட எட்டு நூல்களாக அமையும். இந்தத் திட்டத்தை இவ்வளவு நேர்த்தியாக முன்னெடுத்துச் சென்றதிலும், கூட்டுழைப்பையும் நல்லுறவையும் மேம்படுத்துவதிலும் இவருடைய இடையறாத உழைப்பும் நல்லறிவும் உதவியிருக்கிறது என்பது உண்மை. இன்று தமிழ் விக்கிப்பீடியா மாதந்தோறும் 3.5 மில்லியன் பார்வையாளர்களை எட்டும் பிரபல தளமாகவுள்ளது. உலகப் பன்மொழி திட்டத்தில் இன்று 291 மொழிகளில் விக்கிப்பீடியாக்கள் இயங்குகின்றன. இதில் தமிழ் மொழியின் இடம் 61. இந்திய மொழிகளில் உள்ள விக்கிப்பீடியாவை அலசியதில், எண்ணிக்கை அடிப்படையில் தமிழ் இரண்டாவதாக வந்தாலும், தரத்தின் அடிப்படையில் பல வகைளில் தமிழ் விக்கிப்பீடியா முதலாவதாக நிற்கின்றது ( சிச்சு ஆலெக்சு Shiju Alex 2010 இல் செய்த தர ஒப்பீடு ). இப்படிப்பட்ட தமிழ் விக்கிப்பீடியாவை தனியொருவராகத் தொடங்கி வளர்த்தெடுத்த மயூரநாதன் அவர்களின் பங்களிப்பு பெரும் பாராட்டுதலுக்குரியது.
மனித குலத்தின் அறிவு உருவாக்கத்தில் விக்கிப்பீடியாவின் தோற்றம் ஒரு பாய்ச்சல் எனலாம். தமிழ் மொழியை நவீன அறிவுத் தேவைகளுக்கு ஈடுகொடுக்கக்கூடிய ஒரு மொழியாக வளர்த்தெடுப்பதிலும், தமிழ் மூலமான அறிவு உருவாக்கம் பரவல் தொடர்பிலும் தமிழ் விக்கிப்பீடியாவின் முக்கியத்துவம் பல மட்டங்களிலும் உணரப்பட்டு வருகிறது. அண்மைக் காலங்களில், தமிழ்மொழி வளர்ச்சி தொடர்பான மாநாடுகளிலும், தமிழ் இணையத் தொழில்நுட்ப கருத்தரங்குகளிலும், அரசு சார்ந்த சில நிறுவனங்களின் தமிழ் வளர்ச்சிக்கான முன்னெடுப்புக்களிலும் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இன்று, தமிழ் விக்கிப்பீடியா மூலமான பங்களிப்புகள் மரபுவழியான பிற இலக்கிய முயற்சிகளுக்கு ஈடான முக்கியத்துவம் கொண்டவையாக வளர்ந்துள்ளன. அத்துடன் இது எதிர்காலத் தமிழ் வளர்ச்சிக்கான நம்பிக்கையாகவும் விளங்குகிறது. அதன் வளர்ச்சியில் முனைப்புடன் ஈடுபட்ட குழுமத்தை பாராட்டுவதுடன் விக்கிப்பீடியா நிறுவுநரான திரு இ.மயூரநாதனுக்கு வாழ்நாள் சாதனயாளர் விருதை வழங்கி கௌரவிப்பதில் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் பெருமையடைகிறது. விருது வழங்கும் விழா ரொறொன்ரோவில் 2016 ஜூன் மாதம் நடைபெறவிருக்கிறது. அப்போது இயல் விருது கேடயமும் பரிசுத்தொகைப் பணம் 2500 டொலர்களும் வழங்கப்படும்.
http://www.tamilliterarygarden.com/
[/stextbox]
[stextbox id=”info” caption=”அஞ்சலி : சார்வாகன் “]
முடநீக்கியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் சார்வாகன் என்கிற ஹரிஹரன் ஸ்ரீனிவாசன் (86), சென்னை திருவான்மியூரில் டிசம்பர் 21, திங்கள்கிழமை காலமானார். இந்திய தொழுநோய் இதழில் 12-ஆண்டுகள் ஆசிரியராகவும், உலகச் சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழுவில் 10 ஆண்டுகளுக்கும் இருந்துள்ளார். 1984-இல் பத்மஸ்ரீ விருதையும், சர்வதேச காந்தி விருது, கெளரவ டாக்டர் விருது, இலக்கியச் சிந்தனை உள்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
தமிழகத்தில் வெளியான இலக்கியச்சிற்றிதழ்கள் எழுத்து -கணையாழி – ஞானரதம் – தீபம் – தளம் ஆகியனவற்றில் எழுதியவர். சென்னை வாசகர் வட்டம் 1970 களில் வெளியிட்ட அறுசுவை குறுநாவல் தொகுப்பில் இவருடைய அமரபண்டிதர் கதையும் இடம்பெற்றது. “எதுக்குச் சொல்றேன்னா’, “சார்வாகன் சிறுகதைகள்’ என்ற சிறுகதை புத்தகங்களையும், கவிதைகளையும் எழுதியுள்ளார். இவருடைய நூல்களை தமிழ்நாடு க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
இந்திய இராணுவத்தில் உயர் அதிகாரியாக இருந்த கேர்ணல் ஹரிஹரன் – திரைப்படக்கலைஞர் டில்லி விசுவநாதன் ஆகியோரின் உடன்பிறந்த சகோதரரான சார்வாகன் – இலங்கை தமிழ் அறிஞர் கல்வி அமைச்சின் முன்னாள் வித்தியாதிபதி கி.லக்ஷ்மண அய்யரின் துணைவியார் இலக்கிய ஆர்வலர் திருமதி பாலம் லக்ஷ்மணனின்; நெருங்கிய உறவினருமாவார்.
- அசோகமித்திரன்
- ஜெயமோகன்
- சிலிகான் ஷெல்ஃப்
- முருகபூபதி
- அழகியசிங்கர்
- சாரு நிவேதிதா: தி இந்து
- வைதீஸ்வரன்
- ஆசை
- ஏகாந்தன்
- ஆர்.பி ராஜநாயஹம்
- எழுத்தாளர் சார்வாகன் அஞ்சலி கூட்டம் – வீடியோக்கள்
[/stextbox]
[stextbox id=”info” caption=”ம.வே.சிவகுமார் அஞ்சலி”]
எழுத்தாளர் ம.வே.சிவகுமார் (61) மாரடைப்பு காரணமாக சென்னை மாடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை (ஜன. 9) காலமானார்.
சிறுகதை, நாவல், நாடகம், தொலைகாட்சித் தொடர்கள், திரைப்படம் என எழுத்தின் எல்லாத் தளங்களிலும் தன் தனித்துவத்தை நிறுவி, தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தவர் ம.வே. சிவகுமார். முதல் சிறுகதை 1979, டிசம்பர் ‘கணையாழி’ இலக்கிய இதழில் பிரசுரமாகிப் பரவலான வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து கல்கி, அமுதசுரபி, தினமணி கதிர், விகடன் உள்ளிட்ட பிரபல இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகி இவரது தனித்துவத்தை அடையாளம் காட்டின. இவரது ‘முடிகொண்டான்’ என்ற சிறுகதைக்கு 1982ன் சிறந்த சிறுகதைக்கான இலக்கியச் சிந்தனை பரிசு கிடைத்தது. 1985ல் இவர் கல்கியில் எழுதிய ‘உக்கிராணம்’ சிறுகதைக்கும் அந்த ஆண்டின் சிறந்த சிறுகதைக்கான பரிசு கிடைத்தது. கணையாழியில் இவர் எழுதிய ‘கடைச்சங்கம்’ குறுநாவல் பிரபல எழுத்தாளர்களின் பாராட்டைப் பெற்றது.
சிறுகதைகளோடு நாவலும் எழுதத் துவங்கினார். தினமணி கதிரில் இவர் எழுதிய ‘வேடந்தாங்கல்’ தொடர் இவரது எழுத்தாற்றலைப் பறைசாற்றியது. முதல் சிறுகதைத் தொகுதி ‘அப்பாவும், இரண்டு ரிக்ஷாக்காரர்களும்’ 1986ல், ஜெயகாந்தனால் வெளியிடப்பட்டது. 1987ல் வெளியான ‘நாயகன்’ சிறுகதைத் தொகுதி சிறந்த சிறுகதைகளை உள்ளடக்கியதாக இருந்தது. வங்கி சார்பாக பல நாடகங்களை எழுதியும், நடித்தும், இயக்கியும் பரிசு பெற்றார். 1992ல் ‘நவீன சிறுகதைகள்’ என்ற சிவகுமாரின் சிறுகதை தொகுப்பை கமல்ஹாசன் தலைமைதாங்கி வெளியிட்டார்.
- ‘வாத்தியார்’ சிறுகதைகள் தொகுதிக்கு ம.வே. சிவகுமார் கடைசியாக முன்னுரையாகத் தந்தது.
- கருணை மனு: ம.வே. சிவகுமார்
- தென்றல் இதழ்: அரவிந்த்
- தி இந்து: பா.ராகவன்
- முத்துலஷ்மி ராகவன்
- அழகியசிங்கர்
- சிறுகதைகள்
- குங்குமம்: சினிமாவில் வாழ்க்கையைத் தொலைத்த எழுத்தாளனின் கதை – வெ.நீலகண்டன்
[/stextbox]