துன்பப்படுபவர்களின் துயரம் நீக்குவதற்கான வழியை காண்பிப்பதை விட்டுவிட்டு, அவர்களின் சோகத்தை ‘அன்னை தெரஸா’ கொண்டாடிக் கொண்டிருந்ததாக நியூ இண்டெர்னேஷனலிஸ்ட் சஞ்சிகையில் வெளியான கட்டுரை எழுதியிருக்கிறது. மிகச் சிறப்பான மதபோதகராக செயல்பட்ட அன்னை தெரசா, சிகிச்சை அளிப்பதிலும் சக மனிதரை உயிராக பாவித்து இரட்சிப்பதிலும் எவ்வாறு நிலைதவறினார் என்றும் விளக்குகிறார்கள்.
1994ல் லண்டனில் இருந்து எடுக்கப்பட்ட ஆவணப்படத்தில் மதர் தெரசாவின் இந்த முகத்தை முன்வைக்கிறார்கள்: