- எழுத்தாளர் பாவண்ணன் கடிதம்
அன்புள்ள நண்பருக்கு
வணக்கம். வெ.சா. சிறப்பிதழில் இடம்பெற்றுள்ள அனைத்துக்கட்டுரைகளையும் படித்தேன். இது ஒரு முக்கியமான ஆவணம் என்றே நான் கருதுகிறேன். அனைவரும் அக்கறையோடு எழுதியிருக்கிறார்கள். குறுகிய நேரத்தில் அவர்கள் இந்த அளவுக்கு எழுதிக் கொடுத்தமைக்கு சாமிநாதன்மீது அவர்களுக்கிருக்கும் அன்பே காரணமாக இருக்கவேண்டும். சொல்வனத்துக்குத் தமிழ் இலக்கிய உலகம் கடமைப்பட்டிருக்கிறது.அன்புடன்பாவண்ணன்
2. வெங்கட் சாமிநாதன் – மறக்கமுடியாத மனிதர்! பாரதி மணி
வெங்கட் சாமிநாதன் – யாரிவர்?
பாரதி மணி
வெளியுலகத்துக்கு விமர்சனப்புலியாக இருந்தவர் வீட்டில் மனைவி சரோஜாவுக்கு ரொம்பவும் பயந்தவராகத்தான் இருந்தார். அல்லது பயந்தவராக அனுபவித்து நடித்தார்! அவர் வீட்டுக்குப்போகும்போது மனைவியின் கெடுபிடிகளைப்பார்த்து ‘ஸ்வாமின்னு! நீர் வெளிலே தான் புலி….வீட்டிலே எலி தான்!’ என்பேன் சரோஜாம்மா அதை ரசித்துச்சிரிப்பார்! வீடு திரும்பும் வெ.சா மாடிப்படி ஏறும்போது கீழ்வீட்டு காலேஜ் போகும் பெண்ணிடம் நின்று பேசிவிட்டு வீட்டுக்குள் வந்தால், அந்தம்மாவின் முதல் கேள்வி “கீழ்வீட்டு கவிதாவோடெ ஏழுநிமிஷம் என்ன பேசினேள்?’ என்பதாகத்தான் இருக்கும். இவரும் கோபப்படாமல் “டெல்லி யூனிவெர்சிட்டி ஸ்ட்ரைக்கை பத்தி சொல்லிண்டுருந்தா! என்று பொறுமையாக பதில் சொல்வார்! அவருக்கு இந்த வாழ்க்கை மிகவும் பிடித்திருந்தது.