வாதங்களும் விவாதங்களும்: வெசா ஏற்புரை

வெங்கட் சாமிநாதன் நவீன தமிழின் மிக முக்கியமான ஆளுமைகளுள் ஒருவர். 1950 களில் “எழுத்து” இதழ் மூலமாக தமிழ் கலை-இலக்கியச் சூழலுக்குள் அடியெடுத்து வைத்த வெ.சா. அவர்களின் அறுபதாண்டு கால எழுத்துக்களை இன்று திரும்பிப் பார்க்கும்போது, தமிழ் கலை இலக்கியப் பண்பாட்டுச் சூழல் மீதான அவரது செயற்பாட்டுக் களம் மிக பரந்து பட்டது என்பதை நாம் உணர முடியும். கலை இலக்கியம் தொடர்பான பொழுதுபோக்குகளுக்கு நடுவில் அவரது குரல் தனிக்குரலாகவும் எதிர்க்குரலாகவும் ஒலிப்பதை இப்போதும் கேட்கலாம். தமிழ் கலை இலக்கியச் சூழலின் அடிப்படைகளை கேள்விக்குள்ளாக்கி ஆழமான விவாதங்களை நோக்கி நம்மை அழைத்துச் சென்றவை வெ.சா.வின் எழுத்துக்கள். இலக்கியம், சங்கீதம், நாடகம், சினிமா, காண்பியக் கலைகள், நாட்டார் கலைகள் குறித்த அவரது பார்வைகள் தமிழ் விமர்சன எழுத்தின் எல்லைகளை விரிவுபடுத்தியவை. நீடித்த முக்கியத்துவம் வாய்ந்தவை.
கர்நாடக இசைக்கு எப்படி சுப்புடுவோ அப்படித் தமிழ் எழுத்துக்கு வெங்கட் சாமிநாதன். இவரது கதிர் வீச்சு விமர்சனங்கள் கண்டு கதிகலங்கிப் போனவர்கள் ஏராளம். அதைப் பொருட்படுத்தாமல் அடுத்து அடுத்து செயல்பட்டவர்களும் உண்டு. ‘மு. மேத்தாவும் எதிர்காலத்தில் என்றாவது கவிதை எழுதக் கூடும்’ என்கிற இவரது விமர்சன வார்த்தைகள் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். ஜான் ஆபிரகாம் இயக்கத்தில் வெளிவந்த ‘அக்ர ஹாரத்தில் கழுதை’ என்ற திரைப் படத்துக்கு திரைக்கதை எழுதியுள் ளார். 2003-ல் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பும், டொரொண்டோ பல்கலையும் இணைந்து இவருக்கு ‘இயல் விருது’ வழங்கின.
வெ.சா – விமர்சனங்களும் விவாதங்களும் புத்தக வெளியீட்டு விழாவில் வெங்கட் சாமிநாதன் உரையாற்றுகிறார்.

இது உரையின் இரண்டாம் பகுதி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.