மகரந்தம்


[stextbox id=”info” caption=”காட்டுத் தீ பொருளாதாரம்”]

el_nino_Choking

பருவ மழை எல்-நினோ எனும் காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் தாமதத்தால், – இந்தோனேஷிய மழைகாடுகளிலிருந்து பரவும் தீஜ்வாலையைத் தடுப்பதற்கு வழியில்லாமல் இருக்கிறது. இந்தோனேஷியத் தீவிகள் தொடங்கி மலேசியா சிங்கப்பூர் முழுவதும் பரவி வருவதால் காற்றில் நச்சுத்தன்மை மிக அதிகமாகியுள்ளது. அதைப் பற்றிய கட்டுரை

http://www.bloomberg.com/news/articles/2015-10-12/haze-choking-asia-may-get-worse-as-el-nino-delays-seasonal-rain
[/stextbox]


[stextbox id=”info” caption=”புவி வெப்பமயமாக்கலும் பில் கேட்ஸும்”]

முதலியத்தின் முடியரசனான மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தலைவர் பில் கேட்ஸின் தொண்டு நிறுவனம் வழியாக செயல்பட்டுவருவது செய்தியல்ல. பல்லாண்டுகளாக அவரது பில் கேட்ஸ் மெலிண்டா கேட்ஸ் நிறுவனம் எயிட்ஸ் ஆராய்ச்சி முதல் ஆப்ரிக்க குழந்தை நலன் வரை பல காரியங்களுக்குக்காகப் பணம் கொடுக்கிறார்கள். ஆனால், இப்போது முதலியம் மட்டுமே உலகப்பிரச்சனைகளுக்கு முற்றானத் தேர்வாக இருக்க முடியாது எனும் முடிவுக்கு பில் கேட்ஸ் வந்திருப்பதாகத் தெரிகிறது. தனியார் மையம் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகவைத்திருக்கும் கெடுபிடியான இடம் எனும் தெளிவுக்குப் பிறரும் வரலாமோ?

http://www.salon.com/2015/10/29/bill_gates_the_private_sector_is_completely_inept_partner/
[/stextbox]


[stextbox id=”info” caption=”எட்டாயிரம் ஆண்டு பழமையான புது கண்டுபிடிப்பு”]

Crop_Circles_Aerial_Images_Earthworks_KAZAKHSTAN_Asia_Culture_Heritage_NASA_Space

மண்ணுக்கு அடியில் அகழ்வாராய்ச்சியாளர்களுக்குக் கிடைக்கும் பண்டங்களைக் கொண்டு பண்டைய மனித நாகரிங்களை அறிய முனைவது போல நூற்றுக்கணக்கான மைல்கள் உயரத்தில் வானத்திலிருந்து பார்ப்பதில் தரையில் பலவித வடிவங்களை கண்டடைந்து மனிதக்கூட்டம் சென்ற பாதையை கணிக்க முயல்கிறது. ஜியோக்ளைஃபிஸ் என்பவை மண்ணில் உருவாகும் வடிவங்கள். கணித சூத்திரத்தின்படி கச்சிதமாக உருவாக்கப்படும் இந்த அமைப்புகள் பண்டைய மனித நாகரிகம் உருவாகி மண்ணுக்கடியில் மறைந்துபோன பகுதிகளாகும். நாசா விஞ்ஞானிகளின் புகைப்படங்களைக்கொண்டு கசகஸ்தான் பகுதியில் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னர் மனிதர்கள் உருவாக்கிய அமைப்புகளை ஆய்வு செய்து வருகின்றனர். இவை தனிப்பட்ட இடங்களின் நாகரிங்களை ஒத்திருந்தாலும், மனிதத்திரளின் வாழ்க்கை முறை பற்றி மேலும் பல செய்திகளை அளிக்க இயலும் என்பதாக இக்கட்டுரையில் தெரிவிக்கின்றனர்.

http://www.nytimes.com/2015/11/03/science/nasa-adds-to-evidence-of-mysterious-ancient-earthworks.html?_r=0
[/stextbox]


[stextbox id=”info” caption=”கம்பியிலி பணம் செலுத்தும் சாதனங்கள்”]

Payments-Innovation

வாடிக்கையாளர்களை தக்கவைத்தால் மட்டும் போதாது. அவர்களுடனானப் பணப்பரிவர்த்தனை துரிதமாகச் செயல்பட வேண்டும் என்பதும் அத்தியாவசியம். பல்லாங்காடிகளில் முன்னெப்பதும் காணாத கூட்டம் வருகிறது. அதே சமயம் ஆட்குறைப்பு, இயந்திரமாக்கம் இத்யாதி காரணங்களால் வேலையாட்கள் குறைக்கப்படுகின்றனர். ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் கடனட்டை மூலமாகவோ அல்லது காசாகவோ அளிக்க வேண்டியுள்ளது. இங்கிலாந்திலிருப்பது போல சிப் அண்ட் பின் முறையில், ரகசிய எண்ணை சேர்த்துவிட்டு சில நொடிகள் காத்திருக்க வேண்டியுள்ளது. பல நேரங்களில் மின்னணு இயந்திரங்கள் பழுதானாலோ, மெதுவாக வேலை செய்தாலோ வாடிக்கையாளர்கள் பணத்தை அளிக்க அதிக நேரம் கழிக்க வேண்டியிருக்கிறது. இன்றைய பல்லங்காடிகளின் மிகப்பெரிய சிக்கலாக இது உருவாகி வருவதால், பலவிதமான தீர்வுகளும் யோசிக்கப்படுகின்றன. கையில் பொருத்தப்பட்ட சிறு மின்னணு சாதனத்தை பணப்பட்டுவாடா பொறி மீது வைத்தவுடன் பணப்பரிவர்த்தனை முடிந்துவிடும்.

http://www.pymnts.com/news/2015/mobile-payments-big-leap/

[/stextbox]