ஆறு நொடி ஆட்டங்கள்

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பார்க்கும்போது சில தருணங்கள் எப்போதும் மனதில் நிற்கும். பாகிஸ்தானின் மிகச் சிறந்த மட்டை வீரர்களில் ஒருவர் என்று கருதப்படும் ஜாவேத் மியன்தாத், மரபை மீறிய நடவடிக்கைகள் கொண்டவராகத் தெரிய வந்தவர் என்பதால் ஒரு அளவு பாகிஸ்தானிலும், வேறு பல நாடுகளிலும் பிரபலமானவர். இவர் ஒரு மாட்ச்சில்,  தனக்கு எரிச்சலூட்டிய இந்திய விக்கெட் கீப்பர் கிரன் மோரேயைப் பார்த்து தையத் தக்கா என்று குதித்தது பிரபலமான ஒரு காட்சி. அது அனேகர் நினைவில் இருக்கலாம். அது போல, சென்ற இதழில் பிரசுரமான அமெரிக்க கால்பந்து  சம்பந்தப்பட்ட விடியோவைப் பார்ப்பவர்களுக்கு வைன் (Vine) வீடியோக்கள் என்ற பெயர் நினைவில் பளிச்சிடும்.
மொத்த ஆட்டத்தையும் கண்கொத்திப் பாம்பாகக் கவனிக்க இயலாதவர்களுக்கு இந்த ஆறு வினாடி விழியப் பிரசுரத் தொழில்நுட்பம், மிகப் பெரிய வரப்பிரசாதம். ட்விட்டரில் 140 எழுத்துகளுக்கு மேல் ஒரு ட்விட்டில் எழுத இயலாது. அது போல், வைன் விழியங்களில் ஆறு நொடிக்கு மேல் பதிவேற்ற முடியாது. அந்த உடனடித்தனமும், குறுகத்தரித்த தரிசனமும், இந்தக் கால இளைஞர்களை மயக்கி வைத்திருக்கின்றன. அதைக் குறித்த அட்லாண்டிக் கட்டுரை இங்கே.
விளையாட்டுகளின் தொகுப்பு கீழே: