குவாண்டம் கணி

தற்போதைய கணினிகளில் எல்லாம் இருமையான நிலைகளைக் கொண்டவை – உண்டு (1) அல்லது இல்லை (0) என்னும் நிலையில் இருப்பவை. இப்பொழுது துளித்துளியாக, தொடர்ச்சியான மாற்றநிலைகளை அடிப்படையாகக் கொண்ட துளிமம் (க்வாண்டம்) கணினிகள் ஸ்திரமான, பொது பயன்பாட்டிற்கு வரத்தொடங்கியுள்ளன. அலைகள் போல் மாறும் பல்வேறு கூறுகளுக்கு எப்படி நிரலி எழுதுவது? நிச்சயமற்ற தன்மையை தன் சேமிப்பு வங்கியாகக் கொண்ட கருவிக்கு எவ்வாறு நினைவகம் அமைப்பது? க்விப்பர் (Quipper) நிரல்மொழி குறித்தும் துளியன் கணி குறித்தும் இந்த வீடியோ அறிமுகம் செய்கிறது: