மோனே, ரெனாய்ர், டீகாஸ், மானே, பிஸாரோ போன்ற ஓவியர்களின் படைப்புகளை கண்காட்சியாக வைப்பார்கள். ஆனால், இவர்களை எல்லாம் விற்பவரின் கண்காட்சியை ஃபிலடெல்ஃபியாவில் வைக்கிறார்கள். எந்தக் கலைஞருக்குமே முதன் முதல் விற்பனை என்பது முக்கியமானது. அதை சாத்தியமாக்கியவர் பால் டியுரண்ட்-ரூல் (Paul Durand-Ruel).
ஆயிரம் மோனெ ஓவியங்கள், 1,500 ரெனாயிர் ஓவியங்கள், 800 பிஸாரோ ஓவியங்கள், 400 சிஸ்லி ஓவியங்கள், 400 கஸாட் ஓவியங்கள், 200 மானே ஓவியங்கள், என ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட ஓவியங்கள் வாங்கி சந்தையாக்கம் செய்தவரை அறிமுகம் செய்கிறார்கள்: