குளக்கரை


[stextbox id=”info” caption=”பாஸ்டன் குண்டு வெடிப்புகள்”]

boston_marathon

பொது இடங்களில் குண்டு வைத்து மக்களைக் கொல்பவர்களை எப்படி அனுதாபத்தோடு அணுக முடியும்? அது சரியா? என்னதான் சொந்த வாழ்வில் பிரச்சினைகள் இருந்தாலும், முகம் தெரியாத, தன் வாழ்வோடு ஒரு சம்பந்தமும் இல்லாத சாதாரண மக்களைக் கொல்பவர்களுக்கு எதற்கு அனுதாபம் காட்டுவது? இத்தகைய கேள்விகளுக்கு அவரவர் அரசியல் சாய்வுகளைப் பொறுத்து விடைகள் எழும் என்பது ஒரு பக்கம் இருக்க, இதில் ஒரு சமுதாயத்தை அழிவிலிருந்தும், பெரும் சீரழிவிலிருந்தும் காக்க ஓர் அரசு என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதும் இருக்கிறது. பொதுவாக மனிதாபிமானம் வேண்டும் என்று வாதிடுவோருக்கு இந்த தற்காப்பு நடவடிக்கை என்பது குறித்து ஒரு கவலையும் இருப்பதில்லை. அவர்கள் அரசு என்பதே வேண்டாம் என்று கருதும் கூட்டமாக இருப்பார்கள். அரசு என்பது வன்முறையின் அடையாளம் என்று வாதிடுவோருக்கு கண் பார்வையும் பெரும் குறை கொண்டது, அறிவும் பெரும் பேதலிப்பைக் கொண்டது என்று கருத நிறையவே இடமிருக்கிறது.

பொது நிர்வாகம் என்பதைச் சிறிதும் செய்து பழக்கமில்லாத அரை வேக்காட்டு அரசியல் கருத்தியலாளர்கள்தாம் இப்படி மனிதாபிமானம் என்பதன் அர்த்தத்தையே திரித்து, அரசை இழித்துப் பேசுவதை ஒரு புரட்சியாளரின் அடிப்படைத் தகுதியாக முன் வைத்துக் கொண்டிருப்பார்கள். எதிர்ப்புறம் அரசு நிர்வாகம் என்பதைச் செய்து அதன் கடும் பிரச்சினைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு தோலும் உணர்வும் தடித்துப் போனவர்கள் அரசு என்பதில் ஆழ்ந்த ஊடுருவலைக் கொண்ட ஊழல்களைப் பற்றி அதிகம் பாராட்டாத திமிர் கொண்ட பார்வையை வளர்த்துக் கொண்டிருப்பதும் சமூகங்கள் நேராக நடப்பதைத் தடுக்கும் காரணி.
இக்கருத்துகள் ஒவ்வொன்றும் ஒரு கட்டுரை கூட இல்லை, பல புத்தகங்களை நிரப்பக் கூடிய அளவு சர்ச்சைகளை எழுப்பக் கூடியவை என்றாலும் அடிப்படையில் இவை மிகச் சாதாரணமான கேள்விகள், கருத்துகள்தாம்.
பாஸ்டன் நகரத்தில் வருடாவருடம் நடக்கும் மாரதான் (நெடுந்தூர) ஓட்டப் போட்டி உலகப் பிரசித்தி பெற்றது. இதில் பன்னாட்டு ஓட்டக்காரர்கள் கலந்து கொள்கிறார்கள். பல வருடங்களாக ஆஃப்ரிக்க ஓட்ட வீரர்கள் இங்கு வென்று வருகிறார்கள். பல்லாயிரக்கணக்கானோர் இந்தப் பந்தயத்தின் போட்டியல்லாத பிரிவில் கலந்து ஓட்டத்தைப் பூர்த்தி செய்வதும் கூடவே நடக்கிறது.

http://www.theguardian.com/books/2015/may/30/why-did-boston-marathon-bombers-do-it-interview-masha-gessen
[/stextbox]


[stextbox id=”info” caption=”ஜனநாயக நாட்டின் கேவலமான சமூக நிலைமை”]

lafayette

இந்தச் செய்தி அறிக்கையின் தலைப்பே போதும், உலக நாடுகளின் தலைமை நாடு என்று தன்னைக் கருதும் ஒரு நாட்டின் சமூக நிலைமை எத்தனை கேவலமாக இருக்கிறது என்று சுட்டுவதற்கு.

உலகின் இதர நாடுகள், குறிப்பாக இந்தியா, இதை விடப் பல மடங்கு மேலாக இருக்கிறது என்று யாரும் வாதிட்டு விட முடியாது. இந்தியாவும் இப்படித்தான் கேவலமாக இருக்கிறது என்றும் சொல்லி விட முடியாது என்றாலும், இங்கும் நிலைமை மோசமாகவே உள்ளது என்பதை நம் அனுபவங்களே நமக்குச் சொல்லும்.

ஜனநாயக அமைப்பு கொண்ட நாடுகளே இப்படி என்றால் ஒடுக்குமுறையையே அரசாகக் கொண்ட நாடுகள் எப்படி இருக்கும் என்று நினைக்கவும் பதைப்புதான் எழும்.
இத்தனை சீரழிவும் 21 ஆம் நூற்றாண்டில்தான் எழுந்திருக்கிறதா? இல்லை பன்னெடுங்காலமாக இருந்த புற்று நோய் இப்போதுதான் வெளித் தெரியத் துவங்கி இருக்கிறதா?

http://www.slate.com/blogs/xx_factor/2015/07/24/lafayette_shooter_john_russell_houser_history_of_domestic_violence_and_hatred.html
[/stextbox]


[stextbox id=”info” caption=”பயங்கரவாதிகளால் அழிக்கத்தான் முடியும்”]

IS

பயங்கரவாதிகளால் அழிக்கத்தான் முடியும். அவர்களுடைய முக்கிய நோக்கம் சூழலைத் தம் ஆதிக்கத்தில், கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, சுற்றியுள்ள மனிதர்களைத் தம் கைப்பொம்மைகளாக்குவதுதான். இதற்கு அவர்கள் பல காரணங்களைக் கொண்டு கொட்டுவார்கள். அவை எல்லாம் தம்முடைய மூளை பிறழ்வுக்கு அவர்கள் கட்டும் சப்பைக் கட்டுதான். மனித நேயம், சமத்துவம், சமூக நீதி, சோசலிசம் என்று பல புளகிதம் தரும் கருத்தியல் வார்னிஷ்/ முலாம்/ பளபளப் பூச்சுகள் பயன்படுத்தப்படும். அல்லது பழைய காடிகளான, செமிதிய மதங்களின் முத்திரைகளையும், அவற்றின் பல கவர்ச்சிப் பூச்சுகளையும் பயன்படுத்துவார்கள். கருணை மதம், அமைதி மார்க்கம் என்று பெரும் பொய்கள் அள்ளி வீசப்படும். ஏமாற்றுவதற்கு என்ன தேவை, நிறைய பணம் தேவை- முதலீடு. பின் மீன்களை வளைத்து ‘அறுவடை’ செய்ய வேண்டியதுதான். ஏமாந்தவர்கள் பின் தாம் ஏமாந்தோம் என்பதை ஒத்துக் கொள்ள முடியாத மன நிலையில் இருப்பார்கள்.

இதை ‘பான்ஸி’ திட்டம் என்று ஒரு சுரண்டல் முதலீட்டு வியாபாரத் திட்டத்திலும் காணலாம். ஒவ்வொரு புது நுழைவும் ஒரு பத்து புது நுழைவுகளைப் பிடித்துக் கொண்டு வர வேண்டும். அந்தப் பத்து பேர் மேலும் பத்துப் பத்து பேர்களைக் கொண்டு வருவார்கள். இப்படியாகத்தானே முதலில் வந்த சில பத்து பேர்கள் அதிகாரத்தில் மேலே இருப்பார்கள். பின் கீழிருந்து சிலர் அதிகாரத்துக்கு உயர்வார்கள். ஒவ்வொரு புது நுழைவுக்கும் பத்தாயிரத்தில் பத்து பேர் உயர்ந்தார்களே அவர்களே பெரும் வெற்றியாகக் காட்டப்படுவார்கள். ஆயிரம் ரூபாய் முதலீட்டில் பத்து லட்ச ரூபாய் கிட்டியது என்று புருடா விடப்படும். அதை நம்பி ஏமாற எத்தனையோ பேர் இருக்கிறார்கள். தொடர்ந்து புதுப் பலிகடாக்கள் கிட்டிய வண்ணம் இருந்தால் ‘பான்ஸி’ திட்டம் வெற்றிகரமாக ஓடும்.

[/stextbox]


[stextbox id=”info” caption=”ஏகாதிபத்திய பேராசைக்கு ஆயிரம் வழிகள்”]

IS_images

மேற்குடைய கொலை வெறி பல நூறாண்டுகளாக ஆசிய ஆஃப்ரிக்க நிலப்பகுதிகளில் பல கோடி மக்களைக் கொன்று குவித்திருக்கிறது. இதை அந்த நிலப்பகுதி மக்கள் அறியாத வண்ணம் அந்த நிலப்பகுதிகளின் ‘வரலாறு’ இதே மேற்கின் ‘நிபுணர்களால்’ எழுதப்பட்டுள்ளது என்பதோடு, அந்த பொய் வரலாறுகள் அந்த நிலப்பகுதிகளில் இன்று ஆளும் பல காலனியத்துக்குப் பிந்தைய அரசுகளால் பயன்படுத்தப்பட்டு அந்தந்த நாட்டுப்  பல்கலைகளில் கூட இன்னும் போதிக்கப்படுகின்றன. இந்தப் பெரும் பித்தலாட்டத்துக்குத் துணை போனவர்களில் பலர் இடதுசாரிகள்- அனேகமாக மார்க்சியர்கள். இவர்களால் பல முன்னாள் காலனிய நாடுகள் நிரந்தரமாகக் காலனிய அடிமைகளான மக்களையே உற்பத்தி செய்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்னொரு கூட்டம் இரண்டு செமிதிய மதங்களான கிருஸ்தவம்/ இஸ்லாம் ஆகியவை. இவை இரண்டுமே உலக ஏகாதிபத்திய வெறி கொண்ட கூட்டங்களால் இன்று வழி நடத்தப்படும் மதங்களாகி விட்டன. அப்படி ஒரு வெறி கொண்ட கூட்டத்தால் மேற்காசியா இன்று பெரும் கொலைக்களமாகி இருப்பதோடு பல பத்து லட்சம் அரபுகளும், பிற ஆசிய மக்களும் இன்று தம் நாட்டையும், வீட்டையும் இழந்து அகதிகளாக அலைகிறார்கள். ஆனால் கொலைவெறியும், உலக ஏகாதிபத்தியப் பேராசையும் இன்னும் சிறிதும் அடங்கவில்லை.

இந்த சமயத்தில், ஐஸிஸ் என்றறியப்படும் பயங்கரக் கும்பலின் ஆதிக்கம் பெருகி வரும் கட்டத்தில், மேற்கு நாடுகளின் ‘நிபுணர்கள்’ இந்தக் கும்பலைப் ‘புரிந்து’ கொள்ள ஆய்வுகள் மேற்கொண்டு புத்தகங்கள் எழுதித் தள்ளுகிறார்கள். அந்தப் புத்தகங்களை மதிப்பீடு செய்யும் ஒரு கட்டுரை இங்கு கிட்டுகிறது.
இதன் சாரம் மேற்கின் ‘நிபுணர்களுக்கு’ இந்த இஸ்லாமியப் பேரரசு ஒன்றைக் கட்டி எழுப்ப முற்படும் பயங்கரர்களின் கும்பல் ஏன் வெற்றி பெற்று வருகிறது என்பது சிறிதும் புரியவில்லை என்பதோடு, இனி அது புரியும் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு இல்லை என்பதுதான்.  அடுத்தது என்ன?
இவர்களுக்குத் தெரியாது. அதை இப்போது ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால் இந்திய இடது சாரிகள்? அவர்கள் நிரந்தரமான ‘நாளை வரும் புரட்சி’ ஜபக் கூட்டம், அதற்கு எந்த உண்மையையும் பலி கொடுக்க அவர்கள் தயார்.
ஆனால், இந்தியாவும், இந்தியரும் இனி என்ன செய்ய வேண்டும்? மீண்டும் ஆயிரம் ஆண்டு அடிமைகளாக வாழும் நிலை இந்தியருக்கு வரப் போகிறதா? மேலை நாடுகள் தம்மைக் காப்பாற்றிக் கொள்ளுவதற்காக, இந்தியரையும், பிற ஆசிய நாட்டினரையும் காவு கொடுக்கத் தயாராகி விட்டனரா?

[/stextbox]


[stextbox id=”info” caption=”காவல் துறை கொடுமைகள்”]

troygoode

அமெரிக்க காவல் துறை நாடெங்கிலும் ஒரே வகைக் கொடுமைகளைத்தான் செய்து வருகிறது. இன்னுமொரு கொடுமை/ கொலை. இந்த முறை பலியானது ஒரு வெள்ளையர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.