வறுமையின் ஒழுங்கின்மை
உவப்பிக்குமென்னை, புதுச்செங்கற் குடியிருப்புகளினிடையே
உள்ளொடுங்கி நிற்கும் மஞ்சள் நிறத்த
மரக்கட்டைகளாலான பழம்வீடொன்று.
அல்லது வார்ப்பிரும்பு மாடமுகப்புகளில்
இலைகள் அடர்ந்திருக்கும் கருவாலிக் கிளைகளை
காட்டி நிற்கும் சட்டகங்கள். குழந்தைகளின் ஆடைகளுக்கு
அவை பொருத்தமாகவே இருக்கின்றன
அவசியத்தின் வழக்கத்தை
அதன் ஒவ்வொரு கட்டத்திலும் பிரதிபலித்துக் கொண்டு —.
புகைப்போக்கிகள், கூரைகள், வேலிகலற்ற
யுகத்தில் கிட்டத்தட்ட எதையுமே பாதுகாக்காத
மர உலோக வேலிகள்:
கம்பளிச் சட்டையும் மிருதுவான தொப்பியும்
அணிந்திருக்கும் கிழவனொருவன்
பத்தடிக்குள்ளான அவனுக்குமட்டுமே உரிதான நடைபாதையை
பெருக்கிக் கொண்டிருக்கையில்
விட்டுவிட்டு அடிக்கும் காற்று
அவனிருக்கும் மூலை திரும்பி
நகரம் முழுவதையும் அலைக்கழிக்கிறது.
