குளக்கரை


[stextbox id=”info” caption=”சூரிய சக்தி வழி மின்சாரத்தால் உலக முதலியத்துக்கு ஆபத்தா?”]

kulakkarai1

சூரிய சக்தி உலகின் பெருந்தனக்காரர்களுக்கு அஸ்தியிலும் ஜுரத்தைக் கொணரப் போகிறதா? ஏன்? இந்தப் பேட்டியாளர் சில எளிமைப்படுத்தப்பட்ட வாதங்கள் மூலம் இப்படி ஒரு கட்சியைப் பேசுகிறார்.

இதில் எத்தனை உண்மை இருக்கிறது? எதெல்லாம் அத்தனை நம்பக் கூடிய வாதங்கள் இல்லை? வாசகர்கள் இது குறித்து என்ன நினைக்கிறார்கள்?

[/stextbox]


[stextbox id=”info” caption=”ஐரோப்பியன் யூனியனில் இங்கிலாந்தின் நிலை என்ன?”]

kulakarai2

உலகத்தின் பிணி என வருணிக்கப்படும் யூரோப் இன்று வர்த்தகத்தில் நலிவடைந்து வருகிறது. ஒரு பக்கம், கடனை அடைக்கமுடியாது திண்டாடும் கிரேக்க நாடு, யூரோப்பிய யூனியனுக்குள் இருப்பதால் சலுகைகளை எதிர்பார்ப்பதை எதிர்த்து பிரஸல்ஸில் நடக்கும் யூரோப்பிய சம்மேளனமும், மற்றொரு புறம், பிரான்சு வழியே எல்லையைக் கடந்து இங்கிலாந்துக்குள் நுழையப்பார்க்கும் அகதிகள் நடத்தும் துறைமுகப் போராட்டங்கள் எனவும் எளிதில் தீர்வு காண முடியாத தலைவலிப் பிரச்சினைகள் ஏற்கனவே வளர்ச்சியில்லாது தேங்கி வரும் யூரோப்பை மேலும் நலிவடையச் செய்கின்றன. இதற்கிடையே, வர்த்தக வளர்ச்சி மூலம் பலமாக வளர்ந்து வரும் இங்கிலாந்து,  யூரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறலாமா என பலமாக சிந்தித்து வருகிறது. உடையாத யூரோப்பை நோக்கிய பயணம் என ஜெர்மனிக்குச் சென்றிருக்கும் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனும்,  எலிசபெத் ராணியும் பிரகடனப்படுத்தினாலும், ஐரோப்பிய நாடுகளிந் ஒன்றியம் ஒப்பந்தத்தில் சில மாறுதல்களை முன்மொழியத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்பது பலரை கோபப்படுத்தியுள்ளது. அதன்படி, இங்கிலாந்துக்கு வேலை பார்க்க வரும் யூரோப்பியர்களின் வருமானத்தின் மீதான வரியை ஒழுங்குபடுத்துவதற்கும், வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கும் திட்டச் சீர்த்திருத்தம் செய்வதற்கு இங்கிலாந்து வற்புறுத்தப்போவதாக இச்செய்தி கூறுகிறது. இதனைக் கேள்விப்பட்ட பிரெஞ்சு மந்திரி ஒருவர் – ஐரோப்பிய நாடுகளிந் ஒன்றிய  ஒப்பந்தம் என்பது சந்தைக்கு எடுத்துச் செல்லும் கூடையல்ல, நமக்கு வேண்டியதை எடுத்தும் வேண்டாததை விலக்கியும் ஒரு பட்டியல் போட முடியாது. யூரோப்பிய யூனியனில் ஒருவராக அதன் கஷ்டத்தில் தோள் கொடுக்காமல் பிற சொகுசுகளை அதிகாரத்தின் மூலம் பெறப்பார்ப்பது எவ்வித பலனையும் அளிக்காது என்கிறார்.

http://www.telegraph.co.uk/news/newstopics/eureferendum/11695276/French-minister-fires-warning-shot-over-David-Camerons-EU-renegotiation.html

[/stextbox]


[stextbox id=”info” caption=”இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி நிலவரத்தின் நடுவில் சில பக்கங்களைக் காணோம்?”]

kulakkarai3

இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதி பற்றிய புள்ளி விவரங்களின் சாரத்தை கார்டியன் தினசரி வெளியிட்டிருக்கிறது. இதன்படி இந்திய ஏற்றுமதி சுமார் 142 பிலியன் (அமெரிக்க) டாலர்கள். இறக்குமதியோ 235 பிலியன் டாலர்களுக்கும் மேல்.  உலக நாடுகளுக்கு நாம் சுமார் 93 பிலியன் டாலர்கள் போலக் கடனாளிகளாக இருக்கிறோம். இது வருடாந்தர நடப்பு.

இறக்குமதியில் சீனாவிலிருந்துதான் அதிகம் பொருட்களை நாம் வாங்குகிறோம். ஏற்றுமதியில் அமெரிக்காவுக்குத்தான் நாம் அதிகம் பொருட்களை விற்கிறோம்.
ஏற்றுமதியில் பெரிய அளவு நாம் விற்பது பெட்ரோலியம் சார்ந்த பொருட்கள்தாம். [நம்ப முடிகிறதா?]

எல்லாம் சரி, இந்திய சினிமா சார்ந்த பொருட்கள் உலகெங்கும் நிறைய விற்கப்படுகின்றன என்று நாம் படித்திருக்கிறோமே, அந்தத் தகவல் இந்தப் பட்டியலில் இல்லையே, அவை ஒரு பிலியன் டாலரைக் கூட எட்டவில்லையோ?

இந்திய அரசின் வணிகத் துறை இலாக்காவின் புள்ளி விவரங்களை இங்கு தரவிறக்கலாம்.

[/stextbox]

0 Replies to “குளக்கரை”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.