வளம் – வாழ்வு – வளர்ச்சி

global warming

இந்தியாவுக்கு மட்டுமல்ல, அகில உலகத்திற்கும் இன்று சவாலாயிருப்பது வளமா? வாழ்வா? வளர்ச்சியா? என்ற கேள்விதான். சரஸ்வதி சபதம் என்ற தமிழ் சினிமாவில் (ஏ. பி நாகராஜன் இயக்கம்) டி. எம். எஸ். கல்வியா? செல்வமா? வீரமா? என்று பாடியது போல் வளம்- வாழ்வு- வளர்ச்சி மூன்றும் ஒன்றுக்குள் ஒன்று பின்னிக்கொண்டு ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை என்ற நிலையில் உள்ளதை கவனிக்கலாம். ஆனால் எது முன்னிலை பெற வேண்டும் என்ற கேள்விக்கு “வாழ்வு”தான் தக்க பதில்.
வாழ்வு தொடர வளம் சுரண்டப்படுகிறது. வாழ்வு காணவே வளர்ச்சி என்ற கருத்தில் வளம் சுரண்டப்படுகிறது. வாழ்வும் வளர்ச்சியும் இவ்வாறு வளத்தைச் சுரண்டிச் சுரண்டி மண்ணையும் பூமியையும் வானையும் கடலையும் நீரையும் காற்றையும் வாழ்வு என்ற பெயரில் மாசாக்கிவ் விட்டன. பூமியைக் கொளுத்தி விட்டோம், இப்படியே போய்க் கொண்டிருந்தால் உலகே அழிந்து விடும் என்று ஐ. நா. கவலைப்படுவது இயல்பு.

வாழ்வு கேட்பது மனிதன்.
வளர்ச்சி கேட்பது மனிதன்- ஆனால்
வளத்திற்கு வாய் இல்லை.
வாளாவிருக்குமா? பூத சக்தி
மனிதனை அழிக்கும் பெரும் சக்தி.
மனிதா, அச்சம் கொள்.
எச்சரிப்பது தெய்வமல்ல
ஐ.நா.தான். ஐ.நா. வேதான்.

உலகில் முதல்முறையாக பூமியையும் பூதசக்திகளையும் காப்பாற்ற 1992-இல் பிரேசிலில் உள்ள ரியோடி ஜெநீரோவில் ஐ.நா. உலக நாடுகளை ஒன்றுகூட்டி விவாதித்து விதிமுறைகளை வகுத்தளித்தது. சுற்றுச்சூழல் துறையின் முதல் மைல்கல் இது. வளங்களைச் சூறையாடும் வளர்ச்சிக்கு தடுப்பணை கட்டப்பட்டது. “வளத்தைச் சுரண்டுவது வாழ்வல்ல, வளத்தைக் காப்பாற்றுவதே வாழ்வு” என்ற குறிக்கோளில், பூமி வேப்பமாவதைக் குறைக்கும் வகையில் தட்பவெப்பத்தைக் கட்டுப்படுத்தும் நெறிமுறைகள் ரியோ மகானாடித்ல் வகுக்கப்பட்டன. மேலும் மேலும் புவி வெப்பமாதலைத் தடுக்கும் வகையில் நச்சுப் புகைகளான கரியமில வாயு, நைட்ரேட் வாயு, மீத்தேன் வெளியற்றம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். மேற்படி நச்சுப்புகைகளில் குளோரோ புளூரோ கார்பன் என்று பேசப்படுகிறது. புவியின் தாங்கு சக்தி அடிப்படையில், “காற்று வெளியிடை கண்ணம்மா, 450 பிபிஎம் அளவுதான் சிஎப்சி இருக்க வேண்டும். ஆனால் நாம் வெளியிடுவதோ 1000 பிபிஎம். அதாவது ஒரு லட்சத்தில் ஆயிரம் பங்கு நச்சுப்புகை வெளியேறுவதாள் பூம் வெப்பமாதலின் அளவு கூடுகிறது. இதன் காரணமாகவே, காலநிலை மாற்றம் காலநிலை தடுமாற்றமாகிறது. வளர்ச்சி வேண்டுமானால் வளம் சுரண்டப்பட்டுத் தொழில் உயர வேண்டும். தொழில் வளரவ்ரளர் நச்சுப்புகை வெளியேற்றமும் கூடும். வளர்ச்சியைக் கட்டுக்குள் வைக்காவிட்டால் உலகம் என்னவாகும்?
வளர்ச்சியின் ஆதிக்கத்தால் காலநிலை தடுமாறி பூமி கூடுதலாக சூடேற்றப்ப்படும்போது நிகழும் விபரீதங்களில் மிக முக்கியமான நிகழ்வு வெள்ளிப்பனி உருகி வெள்ளமாக மாறுவதுதான். ஆங்கிலத்தில் Glaciers என்பார்கள்.

இமயத்தில் உள்ளது வெள்ளிப்பனி.
ஆல்ப்ஸ் சிகரங்களில் வெள்ளிப்பனி.
ஆண்டஸ் சிகரங்களில் வெள்ளிப்பனி.
ஆர்க்டிக் கண்டமே வெள்ளிப்பனி.
அண்டார்க்டிகா கண்டமே வெள்ளிப்பனி.
சைபீரியாவில் வெள்ளிப்பனி.

காலநிலை மாற்றம் தீவிரம் காட்டினால் இன்னம் இருநூறு ஆண்டுகளில் இமயமலை பனிச்சிகரங்கள் எல்லாம் திருவண்ணாமலை ஆகிவிடும். உருகிய மலையிலிருந்து வெள்ளிப்பனி வெள்ளமாகி கடல்மட்டம் உயர்ந்து, ஆழி சூழும். நிலப்பகுதியில் சூரியன் சுடேரிப்பான். மனிதனின் வாழ்நிலை பாழாகிவிடும். நிலம் சூடாகும்போது திடீர் மழை, திடீர் வெள்ளம் சகஜமாகும்.

மழை பரவலாகாவிட்டால்-
விவசாயம் அழியும்…
விவசாயம் அழிந்தால்….
உண்ணச் சோறு இருக்காது
உடுக்கத் துணி இருக்காது.
வாழ்வு இருந்தும் புத்தன் நிர்வாணமானான்
வாழ்வு அழிந்து மனிதன் நிர்வாணமானான்
வாழாநிலை வாழ்நிலையாகின்
புவியைக் குளிர்விக்கும் பசுமை தேவை.
வளர்ச்சி இருந்தும் பிரச்சினை
வளர்ச்சி இல்லாமலும் பிரச்சினை
வளர்ச்சி இல்லாமல் வாழ்வு ஏது?
வாழ்நிலையின் தீர்வு வளர்ச்சிதானா?
எழுப்பப்படும் கேள்வி இதுவே-
வளத்தைச் சுரண்டாமல் வளர்ச்சி உண்டா?

இதற்கு விடைகான நாம் சற்று வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்க வேண்டும். எல்லாமே இயந்திரம் என்று மாற்றப்பட்டு விட்டதால் எனர்ஜி/ எரிசக்தி பயன்பாடு உயர்ந்துள்ளது. மனித உழைப்பு, காளை உழைப்பு, குதிரை உழைப்பு மிருகங்கள் இழுத்துச் செல்லும் வாகனங்கள் புத்துருவம் பெற வேண்டும்.
காந்தியைப் போல் எல்லாரும் வெள்ளை உடை அணிய வேண்டும். கலர் கலராக உடைகள் அணிவதால் நூலிலும் புடவை- சுடிதார் துணிகளிலும் மேல்சட்டை கால்சட்டைத் துணிகளிலும் செயற்கை சாம் போடுவதால் நீர், நிலம் மாசடைவது மட்டுமல்ல, எரிசக்தி செலவும் விரயம். தோலைப் பதன்படுத்தும் வழியில் ரசாயனம் இல்லாத மாற்று இயற்கை வழி உள்ளதா? என்று ஆய்வு செய்யலாம். தோல், துணிகளுக்கு இயற்கைச் சாயம் ஏற்புடையது.
தற்சார்பு விவசாயம் வளர வேண்டும். ரசாயன உரப்பயன்பாட்டை நிறுத்திவிட்டு இயற்கை இடுபொருட்களை விவசாயிகள் அவரவர் தோட்டங்களில் இயற்கை இடுபொருள் தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். உபரி உரங்களை முழுக்க முழுக்க அரசுத்துறை உற்பத்தி செய்து யூரியா, பாஸ்பேட், பொட்டாசியம் என்று தனியார் வழங்கலுக்கு மாற்றாக பாக்டீரியா, சூடோமோனஸ் போன்ற பாக்டீரியா காளான் உரங்களை திரவ வடிவிலோ கரிப்பொடி கலந்தோ விநியோகிக்கலாம்.
மண்ணைப் பாதுகாக்கக் வேண்டும். மண்ணைப் பாதுகாப்பதன் மூலமே வேளாண்மையை நிரந்தரமாக தக்க வைக்கலாம்.
பாரம்பரிய கட்டிடக்கலை நுணுக்கங்களைத் திருத்தி நவீனப்படுத்தலாம். புதிய புதிய கட்டுமானங்களினால் ஆற்றுமணல் சுரண்டப்படுவதால் இது எங்கு போய் முடியுமோ?
மழைநீர் சேமிப்பு மிகமிக அவசியம். வீட்டு உபயோகத்திற்கான குடிநீர் மட்டுமல்ல, கூடியவரை அவரவர் தோட்டங்களிலும் வரப்பை உஅய்ர்த்திக்கத்து நீண்ட குறுக்குப் பள்ளம் வெட்டியும் சேமித்தால் திறந்த கிணறு வற்றாது.
இந்திய நதிகளை இணைத்து- காவிரியில் கல்லணை கட்டப்பட்டது போல் பொருத்தமான இடங்களில் அணை கட்டி கங்கை- குமரி நீர்வழிச்சாலை (பொறியாளர் காமராஜ் வழங்கியுள்ள திட்டப்படி) உருவானால் வெள்ளப்பெருக்கால் கடல்மட்டம் உயராமல் காப்பாற்றப்படலாம்.
இன்று வளத்தைச் சுரண்டாமல் மாற்று எரிசக்திப் பயன்பாடு புழக்கத்தில் வந்துவிட்டது. காற்று மூலம் காற்றாலை மின்சாம சூரியனார் மூல சோலார் மின்சாரம், பயோமாஸ் (உயிர் வீண்பொருள்) மின்சாரம் என்று பல வளர்ந்தாலும்- மின்சாரப் பயன்பாட்டில் கட்டுப்பாடு வரவிழலி. வளர்ச்சியை மட்டுப்படுத்தும் சாதனமாக மாற்று எரிசக்திப் பயன்பாடு நிகழாமல் வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தும் போக்கே தொடர்வதால்…
வாழ முடிந்தவரை நாம் வாழ்ந்துவிடலாம், வரும் சந்ததியினைப் பற்றிய நினைவாற்றலையே இழந்து விட்டோம்

(தொடரும்)

பொறியாளர் காமராஜ் நீர்வழிச்சாலை விவரங்களுக்கு-
0452-3589215
office@nawadtech.com
www.nationalwaterways.com