[stextbox id=”info” caption=”என்றும் 18 ஆக இருக்கும் இரகசியம்”]
NPR என்று சுருக்கமாக அறியப்படும் நேஷனல் பப்ளிக் ரேடியோ ஓர் அமெரிக்க ஒலிபரப்பு நிறுவனம். பெயருக்குத் தக இது தேச அளவிலான ஒரு ஸ்தாபனம் என்றாலும், நாம் சகஜமாகக் கருதக் கூடிய வகையில் இது அரசு நிறுவனம் இல்லை. அமெரிக்கா தனி முதலாளிகளின் சொர்க்க பூமியாயிற்றே. வலதுசாரிகளின் கோட்டை வேறு. அங்கு அரசின் கையில் அப்படி எல்லாம் ஒரு ஒலி/ ஒளி பரப்பு அமைப்பு இருப்பதை விட்டு வைப்பார்களா? அதனால் தனியாரில் கொஞ்சம் மத்திய நிலை அரசியலும், இடது சாரி அரசியலும் கொண்ட தன்னார்வலர்கள் சேர்ந்து அமைத்த ஒரு தனியார் ஒலி பரப்பு நிறுவனம் இந்த npr. இது துவக்கத்தில் எப்படி இருந்ததோ, இன்று ஒரு முதலீட்டாளரால் நடத்தப்படும் நிறுவனம் போல அமைப்பில் இருக்கிறது. ஆனால் இதன் பங்கீட்டாளர்கள் சாதாரண மக்களே. வருடா வருடம் சந்தா போல மக்கள் இந்த அமைப்பிற்கு நிதி வழங்குகிறார்கள். அந்தச் சந்தா, பிறகு நன்கொடைகளாகப் பெரும் நிதிக்கிழார்களிடமிருந்தும், கொஞ்சம் தாராள நோக்குள்ள அறக்கட்டளைகளிடமிருந்தும் கிட்டுகிற நிதி அளிப்புகளை வைத்துக் கொண்டு, விளம்பரங்கள் இல்லாத ஒலிபரப்புகளை இந்த நிறுவனம் கொடுக்கிறது. விளம்பரங்கள் இல்லாத என்று சொன்னாலும், நன்கொடை கொடுத்த நிறுவனங்களின் பெயர்களைக் கிட்டத்தட்ட விளம்பரம் போலத்தான் இது சொல்கிறது. விளம்பர இசை, பாடல் என்று உயிரை வாங்காமல், நேரடியாக இந்த நிகழ்ச்சிக்கு நிதி கொடுத்து உதவியவர்கள் இன்னின்னார் என்று சொல்லி விடுகிறார்கள்.
அந்த npr வெறும் செய்தி அறிவிப்புகளை மாத்திரம் கொடுத்தால் பருப்பு வேகுமா? அதனால் பல கலை நிகழ்ச்சிகளையும் கொடுக்கிறார்கள். உரையாடல்கள், பேட்டிகள், அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றிய விளக்கக் காட்சிகள், சமூக நிகழ்வுகள் பற்றிய சித்திரங்கள் என்றும், பல அறிவுப் போட்டிகள், வினா-விடை நிகழ்ச்சிகள் ஆகியனவும் உண்டு. சில ஒலிபரப்பு அலைவரிசைகளில் முழுவதும் செவ்வியல் மேற்கத்திய இசை ஒலிபரப்பு நடக்கும். சிலவற்றில் ஜாஸ் இசை நடக்கும். இப்படி பல வகைச் செயல்பாடுகள் கொண்ட நிறுவனம். இதில் ஒரு தொலைக்காட்சிப் பிரிவும் உண்டு. அது அத்தனை பரவலான தாக்கம் கொண்டதில்லை. ஆனால் பொதுவாக மிகவுமே தண்டமான, கருத்தியல் சார்புள்ள ஊடக நிறுவனங்களின் பாரபட்சம் நிறைய உள்ள ஒலி/ ஒளிபரப்பு நிகழ்ச்சிகளோடு ஒப்பிட்டால் கிட்டத்தட்ட நடுநிலை ஒலி/ ஒளி பரப்புகளைக் கொடுப்பது இந்த ஒரு நிறுவனமே.
இதில் நடந்த ஒரு பேட்டியைப் பற்றி இந்த அமைப்பின் வலைத்தளத்தில் கீழ்க்கண்ட கட்டுரையைப் பார்க்கலாம்.
இது பில் கிஃபர்ட் என்ற பத்திரிகையாளரின் சமீபத்திய புத்தகமொன்றைப் பற்றிய ஒலிபரப்பைப் பேசுகிறது. அதில் அவருடைய பேட்டி இருந்தது. கிஃபர்ட் தன் புத்தகத்தில் மனிதர் இளமையாகவும், சிரஞ்சீவியாகவும் இருக்க எத்தனை ஆசைப்படுகிறார்கள், இந்த ஆசை பேராசை என்றாலும், பற்பல நூற்றாண்டுகளாகத் தொடரும் ஒரு வினோதக் கதை என்று விளக்குகிறார். 19ஆம் நூற்றாண்டில், மேற்கில் இப்படி விரும்பியவர்கள் என்னென்னவோ வினோதமான முறைகளை எல்லாம் பயன்படுத்திப் பார்த்திருக்கிறார்கள். ஒருவர் ஆண் நாய்களின் விதைகளை இடித்துக் கூழாக்கி, அந்த விதைப்பையின் ரத்தம், விந்து ஆகியவற்றின் கலவையைத் தம் உடலுக்குள் ஊசி மூலம் செலுத்திக் கொண்டு தாம் புத்துணர்வு பெற்ற மனிதராகி விட்டதாகக் கருதியதோடு அதை ஒரு அறிவியல் மாநாட்டில் அறிவிக்கவும் செய்து பெரும் குழப்பத்தை உண்டாக்கினார். அவர் அதற்கப்புறம் ஐந்து வருடம்தான் உயிரோடு இருந்தார். அந்தப் புத்துணர்வு நிஜமானதல்ல, மனப்பிரமை என்று விளக்கும் கிஃப்ஃபர்ட், இந்த வகைச் சிந்தனை இன்று டெஸ்டொயெஸ்டரோன், எஸ்ட்ரோஜென் ஆகியவற்றைச் செயற்கையாக உடலில் சேர்த்து முதுமையைத் தள்ளி நிறுத்தும் சிகிச்சை முறையைத் தேட உந்துதலாக இருந்திருக்கலாம் என்று சொல்கிறார்.
பொதுவாக ஒவ்வொரு உயிரணுவுக்கும் ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் தொடர்ந்து செயல்பட முடியும். அதற்குப் பிறகு அவை பிளவுபட்டுப் பிளவுபட்டு மறுபடி புது உயிரணுக்களாக விரிவடையும் செயலை நிறுத்தி விடுகின்றன. மாறாக அவை ஒரு மூலையில் அமைதியாக இருக்க விரும்பும் முதியோரைப் போல ஒதுங்கி விடுகின்றன. பின் இயக்கமிழந்து மரிக்கின்றன என்கிறார். ஆனால் சில மிருகங்கள் இப்படி எளிதில் மரிப்பதில்லை. மோல்ராட் (குழி எலி) எனப்படும் ஒரு பிராணி இதர எலிகளோடு ஒப்பிட்டால் பன்மடங்கு வருடங்கள் உயிரோடு இருக்கிறது. அது மட்டுமில்லாமல் வெகுகாலம் அது உயிர்ப்பெருக்கமும் செய்யத் தக்க வாலிபம் உள்ளதாக இருக்கிறது என்கிறார்.
அந்தவகைப் பிராணிகளின் மரபணு அமைப்பை ஆய்ந்தறிய இப்போது அறிவியலாளர் முயன்று வருகிறார்கள், இதிலிருந்து மானுடருக்கு நெடுநாள் வாழ்வதற்கான மரபணு மாற்றங்கள் அல்லது மரபணுச் சிதைவைத் தடுக்க வழிகள் என்று ஏதும் கிட்டலாம் என்றும் தெரிவிக்கிறார். பேட்டியைப் படித்தாலே ஊக்கம் பெற்று விடுவீர்களோ?
[/stextbox]
[stextbox id=”info” caption=”கொசுவிற்கு விருப்பமான இரத்தம்”]
கொசுக்கள் யாரையெல்லாம் கடிக்க விரும்புகின்றன என்பதை ஒரு ஆய்வுக் குழு சோதித்திருக்கிறது. அக்குழுவின் கண்டுபிடிப்பு என்ன?
[stextbox id=”info” caption=”நோயாளி ரஷியாவின் துப்பாக்கிக் குறி”]
ஆன் ஆப்பிள்பாம் நன்கு தெரியவந்த ஆய்வாளர், ரஷ்யாவைப் பற்றி நிறைய எழுதியவர். குலாக் என்ற ஒரு புத்தகத்தில் ரஷ்யாவின் ஸ்டாலினிய காலம் பற்றி விரிவாக ஆய்ந்து எழுதியவர். வாஷிங்டன் போஸ்ட் என்கிற வலது சாரிப் பத்திரிகையில் பத்தியாளர் என்பதால் நாம் சற்றுத் தயக்கத்துடன் இவர் பேசுவனவற்றைப் படிக்க நேரலாம், என்றாலும் உலகளாவிய அளவில் ரஷ்யா பற்றிய உரையாடலில் இவர் கருத்துகள் கவனிக்கப்படுவன என்று நாம் அறிவோம். அதனால் இவர் சொல்வனவற்றைக் கவனிப்பது அவசியமாகிறது.
இவர் பெருமளவும் அமெரிக்கப் பார்வையில் இன்றைய ரஷ்யாவைப் பற்றிப் பேசுகிறார், கூடவே மேற்கு யூரோப்பியரின் நோக்கில் ரஷ்யாவைப் பற்றி யோசிக்கிறார். இந்தியாவில் ரஷ்யாவை நாம் நோக்கும் விதம் மாறுபட்டதாகத்தான் இருக்க முடியும். ரஷ்யா மேற்கு, அமெரிக்கா ஆகிய உலகக் கொள்ளையரின் ஆக்கிரமிப்பு நோக்கிற்கு எதிரான ஒரு அரணாக இந்தியரால் கருதப்படுகிறது என்பது இன்று வரை உள்ள ஒரு அரசியல் உண்மை. அது எத்தனைக்குச் சரி என்பது குறித்து இந்தியாவில் நிறைய சர்ச்சை நடந்திருக்கிறது. ரஷ்யாவுமே இந்தியாவைக் கொள்ளை அடிக்கவும் இளக்காரமாகப் பார்த்து இந்தியா மேலெழ விடாமல் சதி செய்ய முயன்றதாகவும் கருத இடமிருக்கிறது.
இந்த உரையாடலில் சமகால ரஷ்யா, புடினிய அரசின் கீழ் எப்படிச் செயல்படுகிறது என்று ஆப்பிள்பாம் விரித்துரைக்கிறார். படித்துப் பயனுறுக.
http://www.eurozine.com/articles/2015-04-22-applebaum-en.html
[/stextbox]
[stextbox id=”info” caption=”ஏகாதிபத்தியமும் சுரண்டலும்”]
இது ஒரு வியத் நாமிய எழுத்தாளரின் சமீபத்திய நாவல். இது அவருடைய முதல் நாவல், ஆனால் இந்தக் கட்டுரை வெளி வருவதற்குள் அவர் வேறெதையும் எழுதி முடித்திருக்கக் கூடும். இந்த நாவல் வியத் நாம் போரின் இறுதிக் கட்டத்தில் ஒரு வடக்கு வியத் நாமிய உளவாளி தெற்கு வியத் நாமிலிருந்து தன் நடவடிக்கைகளைப் பற்றி எழுதுவதாக அமைந்த நாவல். இதை ஒரு அமெரிக்கப் பத்திரிகை விமர்சித்து மகிழ்கிறது. இதில் ஒரு பகுதி கீழே.
“I pitied the French for their naïveté in believing they had to visit a country in order to exploit it. Hollywood was much more efficient, imagining the countries it wanted to exploit.”
[stextbox id=”info” caption=”வர்ட்ஸ் வித் அவுட் பார்டர்ஸ் – தமிழ் சிறப்பிதழ்”]
ஏப்ரல் மாத Words Without Borders தமிழுக்கான சிறப்பிதழாக வெளியாகி இருக்கிறது. சங்க காலத்தில் ஐந்திணைகளாக நிலவெளி சார்ந்து பார்க்கும் தமிழ் இலக்கியத்தில், தற்காலத்திற்கேற்ப புலம்பெயர்ந்தவர்களின் அடையாளச் சிதைவு, குடியுரிமையில்லாத் தன்மை, அந்நியப்படுதல், புலம்பெயர் வாழ்வு, சிறைப்பட்ட அயல் வாழ்க்கை ஆகியவற்றை அளிக்க முனைந்திருக்கிறார்கள். குட்டி ரேவதி, திலீப் குமார், சுந்தர ராமசாமி, மாலதி மைத்ரி, இமையம், அசோகமித்திரன், சுகுமாரன், ஷர்மிளா சயீத், க்ருஷாங்கினி, அ. முத்துலிங்கம் என கலந்து கட்டி பல தரப்பட்ட கதைகளும் கவிதைகளும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. லஷ்மி ஹாம்ஸ்டரம் மற்றும் சுபஸ்ரீ கிருஷ்ணசாமிக்கும் நன்றி தெரித்து இருக்கின்றனர்.
http://wordswithoutborders.org/issue/april-2015
[/stextbox]