மகரந்தம்


[stextbox id=”info” caption=”Heading”]

யூரோப்பியத்தின் தற்பிரமைகள் அசாத்தியமான ஆழம் ஓடும் வேர் கொண்டவை. ஜெர்மனியில் குறிப்பிடத்தக்க பத்திரிகையான டெர் ஷ்பீகல், அவ்வப்போது தன் வழக்கமான மதி நுட்பத்தை இழந்து, விசித்திரமான தலைப்புகளைக் கொண்ட செய்திக் கட்டுரைகளை வெளியிடும். மேல்பார்வைக்கு இந்தத் தலைப்புகள் எதார்த்தமானவை என்றுதான் யாருக்கும் தோன்றும். யூரோப்பியருக்கு நிச்சயம் அப்படித்தான் தோன்ற வாய்ப்பு அதிகம். ஆனால் யூரோப்பியத்தின் இரும்பு முட்களில் சிக்கி அல்லாடிய உலகின் பெரும்பாலான மக்களுக்கு இந்தத் தலைப்புகளும், கட்டுரைகளும் உலகமும், மக்களின் மனோபாவமும் எப்படி எல்லாம் கிறுக்குத்தனம் நிறைந்தவை என்றுதான் நமக்குச் சுட்டுகின்றன என்று தோன்றும்.
இந்தக் கட்டுரையின் தலைப்பு இது:

Russia_Losing_Politics_Morals_Navy_Der_Spiegel

தேசியம் என்பதை ஒரு பூதாகாரமான உருவாகக் காட்டுவது யூரோப்பிய/ வெள்ளை இனப் பத்திரிகையாளரில் கணிசமானவர்களின் பொழுது போக்கு. இந்த அபத்த வழக்கத்தையே காலனியத்தின் பக்தர்களும், வாரிசுகளுமான, இந்தியாவின் இடதுசாரிகளும், முற்போக்குகளும் கடைப்பிடிப்பது ஒரு பெரும் அபத்த நாடகம். அது இருக்கட்டும். யூரோப்பில் தேசியம் கடைப்பிடிக்கப்படாத, ஆட்சியில் இல்லாத நாடு என்று எதுவும் இராது. எல்லாமே தம் மொழி, தம் இனம், தம் மதம், தம் எல்லைக் கோடு ஆகியவற்றின் கலவையாலான தேசியத்தில் முக்குளித்து நிற்பவைதாம். ஆனால் உலகின் இதர மக்களுக்கு இந்நாடுகள் தேசியம் என்பது பயங்கரமான ஒன்று, ஃபாசிஸத்தின் முழு அகம்பாவமான உரு என்று தொடர்ந்து பாடம் நடத்துவார்கள்.
இப்போது வேகமாக இரண்டாம் உலக, மூன்றாம் உலக நாடு போல ஆகிவரும் ரஷ்யாவுக்கு ஜெர்மனியரின் பாட போதனை இந்தத் தலைப்பு. இன்னொன்று ரஷ்யா தன் அரசியல் ஒழுக்க நிலையை இழந்து வருகிறது என்பதுதான் பெரிய கேலிக் கூத்து. ஜார் அரசில் துவங்கி, உலகப் பயங்கரங்களில், மனித வரலாற்றில் ஒரு குரூரமான காலவெளியும், நிலப்பரப்புமாக ரஷ்யாவை ஆக்கிய கம்யூனிஸ்ட் சோவியத் ரஷ்யாவில் தொடர்ந்து, அதற்குப் பிறகு வந்துள்ள ரகசியப் போலிசாரும், இதர முன்னாள் சோவியத் அதிகாரிகளும் உருவாக்கிய கொள்ளையரின் கூட்டணியால் ஆளப்படும் இன்றைய புடினிய ரஷ்யாவாகட்டும், எதிலாவது ஒழுக்கம் என்பதோ, அரசியல் நேர்மை என்பதோ ஒரு போதாவது இருந்திருக்கிறதா என்ன? ஜெர்மன் பத்திரிகையின் திடீர் ஓலத்தை நாம் சந்தேகித்தால் அதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?
புடின் யூரோப்பியர், அமெரிக்கர் ஆகியோரின் மேலாட்சி முயற்சிகளைப் புறக்கணித்து ரஷ்யா என்னும் நாட்டை ரஷ்யர்களே வழிநடத்தும் விதமாக உருவாக்கி வருகிறாரோ, அதனால்தான் இப்படி இவர்கள் ஓலமிடுகிறார்களோ என்று ஐயம் கொண்டால் அதில் தவறு அதிகம் இராது.

http://www.spiegel.de/international/world/russia-recedes-into-nationalism-and-political-immorality-a-1026259.html
[/stextbox]


[stextbox id=”info” caption=”சல்மான் ருஷ்டியை பாராட்டிய பைத்தியம்”]

Zainub_Priya_ZP_Salman_Rushdie_PEN_Fatwa_Muslim_Islam_Writers_Authors_Dala

எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் ஆக்கங்கள் தனக்குப் பிடிக்கும் என ஜைனுப் ப்ரியா தலா (Zainub Priya Dala – ZP Dala) தென்னாப்பிரிக்காவில் நடந்த கருத்தரங்கில் பேசி இருந்தார். வாட் அபவுட் மீரா என்னும் நாவலை எழுதியவர் பிரிய தலா. தெற்கு ஆப்பிரிக்காவில் மருத்துவ உளவியலாளர் ஆகவும் ப்ரிய தளா பணிபுரிந்து வருகிறார். சல்மான் ருஷ்டியைப் பாராட்டிய குற்றத்திற்காக கொடூரமாகத் தாக்கப்பட்டார். டர்பன் நகரத்தில் பயணிக்கும்போது செங்கற்களால் முகத்தில் அடிக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக ப்ரியாவிற்கு மனநிலை சரியில்லை என டர்பன் நகரத்து இஸ்லாமியர்கள் சான்றிதழ் கொடுத்து, அவரை பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்கள். சிறிய குழந்தையை வீட்டில் வைத்துவிட்டு, இந்த நிலைக்கு பிரியாவை சிறைபோல் வைத்திருப்பதைக் குறித்து அமெரிக்க எழுத்தாளர் சங்கம் (PEN American Center) கண்டனம் தெரிவித்து இருக்கிறது.

http://www.pen.org/blog/pen-outraged-confinement-south-african-writer-who-expressed-admiration-rushdie
[/stextbox]


[stextbox id=”info” caption=”ஃபிராயிட் பிராடு”]

The_Last_Asylum_Books_Barbara_Taylor

ஃப்ரா(ய்)டியன் அனலிஸிஸ் என்ற ஒரு கோமாளிக் கூத்து மேற்கில் சுமாராக முக்கால் நூற்றாண்டு காலம் ஓடியிருக்கிறது. இன்று இந்த வகை மன நோய் சிகிச்சையை யாரும் நம்பத் தயாராக இல்லை. ஆனால் இந்தியாவின் அறிவு சீவிகள் இன்னும் இந்த ஃப்ராடை விடத்தயாராக இல்லை. நாம்தான் மேற்கின் அனைத்துக் கழிவுகளையும் தங்கக் கட்டி என்று தெண்டனிட்டு வாங்கி வழிபடுவோமே. அப்படித்தானே மார்க்சியமும், எவாஞ்சலியக் கிருஸ்தவமும், ப்ராடியமும் இன்னும் இந்தியாவில் வீர வழிபாட்டுக்கு உள்ளான கருத்தியல்களாக உள்ளன. இந்தக் குப்பையியத்தைப் பற்றி ஒரு புத்தகத்தை ஒரு எழுத்தாளர் எழுதியுள்ளதை இந்தக் கட்டுரை சீர் தூக்குகிறது.

http://www.bookforum.com/inprint/022_01/14365
[/stextbox]


[stextbox id=”info” caption=”Heading”]

Libya_Italy_Muslim_Christians_asylum_voyage-persecution

வருவது என்னவோ வாழ்க்கையில் முன்னேற்றம் நாடி யூரோப்பிற்கு. யூரோப் என்ன முக்கி முனகினாலும் இன்னும் வெள்ளையர் பிரதேசம்தான், கிருஸ்தவர்கள் பெரும்பான்மையான இடம்தான். வரும் ஆஃப்ரிக்கர்கள் அகதிகளாக, அனுமதி இன்றி, யூரோப்பில் நுழைய முயல்பவர்கள். கள்ளத் தோணி என்று ஒருகாலத்தில் இலங்கைக்குப் போக முயன்ற தமிழர்கள் சென்ற விதத்தைச் சொல்வார்கள்.
ஆனால் இந்தப் படகில் சென்ற லிபியர், இதர ஆஃப்ரிக்க மக்களில் பலர் முஸ்லிம்கள். சிலர் கிருஸ்தவர்கள். மதச் சண்டை படகில். முஸ்லிம்கள் 12 கிருஸ்தவர்களைக் கடலில் வீசி விட்டனர். இறந்த கிருஸ்தவர்களைத் தவிர இதர கிருஸ்தவர்கள் தாம் தப்பியது எஞ்சியவர்கள் கரம் கோர்த்து ஒரு மனிதச் சங்கிலியாக நின்றதால் என்று அப்படகைக் கைப்பற்றிய இதாலிய கடற்படையினரிடம் சொன்னார்களாம். தீர ஆராய்ந்தால் உண்மை வெளிவரும். ஆனால் ஆஃஃப்ரிக்காவை இப்படி உடைத்திருக்கின்றன செமித்திய மதங்கள் என்பதை இந்திய இந்துக்கள் கவனிப்பது அவசியம். இந்தியாவுக்கும் இதே கதி நேரலாம், நேர வேண்டும் என்று அன்னிய தன்னார்வ அமைப்புகளில் பலவும் இந்தியாவில் செயல்படுவதாக மத்திய உளவுத்துறை அமைப்பு அறிக்கை விடுத்திருப்பதாகச் செய்தியை நாம் படித்திருப்போம். இந்த அமைப்புகளில் பலவும் மதமாற்றம் செய்வதற்காக, இந்துக்களை செமிதிய மத மூடத்தனங்களுக்கு உட்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை. இவற்றுக்கு இந்துக்கள் செகுலரிய முலாம் பூசி மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதும், இந்திய இங்கிலிஷ் ஊடகங்களின் பெரும் ஆதரவு இந்த இந்திய எதிர்ப்பு அமைப்புகளுக்கு உண்டு என்பதும்தான் நாம் அதிகம் அறியாத செய்தி என்று பல விமர்சகர்கள் சொல்கிறார்கள். எது உண்மை? எப்படித் தெரிந்து கொள்வது?

http://www.slate.com/blogs/the_slatest/2015/04/16/muslim_migrants_throw_christians_overboard.html
[/stextbox]


[stextbox id=”info” caption=”இலத்தீன் அமெரிக்காவில் சீனாவின் ஆளுமை”]

Trade_Imports_Exports-China-Latin-America-Tie-Up_Brazil_Peru_Argentina_Chile_Hand_Shakes

சீனா 250 பிலியன் டாலர்களை லத்தின் அமெரிக்காவில் முதலீடு செய்வது ஏன் என்று அமெரிக்க வலதுசாரிப் பத்திரிகைகளில் ஒன்றான வாஷிங்டன் போஸ்ட் கேட்டுத் தன் பீதியை வெளிப்படுத்துகிறது. ஏகாதிபத்தியம் என்பது சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடிப்பது என்பதுதான் யூரோப்பியரின் போர்த்தந்திரம், வியாபாரத் தந்திரம், காலனியத் தந்திரம். இப்படித்தான் ஆசிய, ஆஃப்ரிக்க மக்களை முன்னூறு வருடங்களாகச் சுரண்டிக் கொழுத்தனர் வெள்ளை மக்கள். சீனா அதே உத்தியைப் பயன்படுத்துகிறதா, இல்லையா என்பது அமெரிக்க வலது சாரிகளுக்குப் புரிபடாத மர்மம். சீனாவின் சின்ன மீன் 250 பிலியன் டாலர் என்றால் அது எதிர்பார்க்கும் பெரிய மீன் தான் என்ன? 1 ட்ரில்லியன் டாலர்களா? இது அமெரிக்கர்களின் அஸ்தியில் கூடப் புளியைக் கரைக்கும்.

http://www.washingtonpost.com/blogs/monkey-cage/wp/2015/02/04/why-china-is-investing-250-billion-in-latin-america/
[/stextbox]