[stextbox id=”info” caption=”காமிக் போட்டி”]
காமிக் புத்தகங்கள் இந்தியாவில் பல காலமாகவே பிரபலமானவை. ஆனால் இந்திய காமிக் புத்தகங்கள் பெரும்பாலும் புராணங்கள், இந்திய வரலாற்றின் நாயகர்கள், சில மர்மக்கதை/ சாகசக்கதைகள் என்ற வகையோடு நின்று விடுகின்றன. சாகச/ மர்மக் கதைகள் எக்கச் சக்கமாக விற்கின்றன என்பதைச் சமீபத்து புத்தகக் கண்காட்சியில் தெரிந்து கொண்டேன். ஒரு கடையில் அவர்கள் கொண்டு வந்த பிரதிகள் எல்லாம் தீர்ந்து அடுத்த கட்டுப் பிரதிகளுக்கு முன்பணம் செலுத்தத் தயாரானவர்கள் கூட இருந்தார்களாம், நண்பர் சொன்னார்.
[/stextbox]
[stextbox id=”info” caption=”முதலியப் பேராசை, பெரு நஷ்டம்”]
எங்கெல்லாம் இயற்கை வளங்கள் அதிகமான செழிப்பை உண்டாக்குகிறதோ அங்கெல்லாம் மனித நாகரிகம் வளர்ந்துள்ளன என்பது பாலபாடம். முதலியப் பேராசையின் விளைவால் அதே வளங்கள் மனித இன அழிப்புக்கும் தூண்டுதலாக இருப்பதை அன்று முதற்கொண்டு உலகின் பல மூலைகளில் நடப்பவற்றைப் பார்த்து வருகிறோம். பெரும் காடுகளில் சிறு குழுக்களாக புழங்கியபோது அக்குழுக்களுக்குள் இருந்த கட்டுப்பாட்டை அளவிடமுடியாத பேராசையின் விளைவால் அழித்த முதலிய அரசுகள், அவற்றுக்குப் பாதுகாப்பு கொடுக்காமல் பிரிவினையை, அவற்றில் விளையும் வன்முறையை அதிகரிப்பதைப் பேசும் கட்டுரை.
[stextbox id=”info” caption=”பரிணாமம் நம் கையிலா?”]
பரிணாம வளர்ச்சியை செமித்திய மதங்கள் ஏற்றுக்கொண்டாலும், இல்லாவிட்டாலும் பொதுமக்களிடையே பெரும் ஆர்வத்தைத் தூண்டும் பலவித விவாதங்களை விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். நாம் இன்னும் பரிணாம வளர்ச்சிப் பாதையில் இருக்கிறோமா? என்னென்ன மாற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம்? குள்ளமாகிறோமா? மனித மரபணு மாற்றத்தில் பெரும் பாய்ச்சல் நம்மை அறியாமல் நடக்கிறதாக இவர்கள் தெரிவிக்கிறார்கள்.
[stextbox id=”info” caption=”எல்லை கொண்ட நிலம்”]
எல்லைகளற்ற உலகம் அமைக்கும் லட்சியத்தை மையமாகக் கொள்ளும் கருத்துகள் பல வந்து போயிருக்கின்றன. பெரும்பாலும் தனிமனிதர்களால் எடுத்துச் செல்லப்பட்டவை. தேசியம் எனும் கருத்து தோன்றிய அதே நேரத்தில் எல்லைப் பிரச்சனைகளும் பிரிவினை கோஷங்களும் தொடங்கிவிட்டன என்கிறார் இந்த கட்டுரை ஆசிரியர். உலகின் நீண்ட எல்லையைக் கொண்டது மட்டுமல்லாது பாதுகாப்பு வீரர்களால் மிகுந்த சிக்கலுள்ளாக்கப்படுவது பங்களாதேஷ் – இந்தியா எல்லை என்கிறார். அங்கிருப்போர் மீது கட்டவிழ்க்கும் கொடுமைகளைப் பட்டியல் போட்டு காட்டுகிறது.
https://nplusonemag.com/online-only/online-only/borderlands/
[/stextbox]