தன்னுடைய பன்னிரெண்டாம் வயதில் துவங்கி, அகவை 28 ஆகும் வரை, பதினாறு ஆண்டுகளாக, தன்னுடையப் பெற்றோருடன் உரையாடியதை, அவர்கள் அறியாமல், ரகசியமாக பதிவு செய்கிறார் மைக் கோஹன் (Mike Cohen) என்பவர். அந்த ஒலித்துண்டுகளில் இருந்து ஒரு சிறிய பகுதியை, கோஹனினின் தோழர் ராட் பெரி (Rodd Perry) இங்கே அசைபடமாக்கி இருக்கிறார்.
தந்தையும் தனயன்களும் இப்படித்தான் இன்றும் இருக்கிறார்கள். எப்போது பார்த்தாலும் திட்டிக் கொண்டே இருக்கும் தகப்பன்கள்; ’பொறுப்பில்லாமல் காலங்கழிக்க்கிறார்களே… உருப்படுவார்களா’ என அங்கலாய்க்கும் சூழலில் வளரும் மகன்கள். வாழ்க்கையை அனுபவிக்க விடாதப் பெருசுகளின் அர்ச்சனைகக்கு நடுவே உலா வரும் பதின்ம வயதினர். கண்டதையும் சேமித்து வைத்து வீட்டை அடைக்கு குணம். 1985ன் நிகழ்வு என்றாலும், முப்பதாண்டுகள் கழிந்த பிறகும் பொருத்தமாக இருக்கிறது!
பொறுப்பு என்பது சுமாராக 25 வயது வாக்கில்தான் பலருக்கும் கொஞ்சம் தெரிகிறது. 30க்குப் பிறகுதான் சேமிப்பு என்பது அவசியம் என்று தோன்றத் துவங்குகிறது. 40க்குத்தான் உடற்பயிற்சி தேவை, எப்போதோ செய்திருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. 50க்கு அப்புறம்தான் தம் மக்களிடம் இன்னும் கொஞ்சம் இனமாக நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. 60க்கு அப்புறம்தான் தான் வாழ்ந்த வாழ்க்கை அத்தனை பயனுள்ளதல்ல என்பது தெரிந்து சரி இனியாவது ஏதாவது உருப்படியாகச் செய்யலாம் என்று தோன்றுகிறது.
அடிப்படையில் எப்போதுமே கண் கெட்ட பிறகுதான் சூரிய நமஸ்காரம். இது சராசரிகளின் வாழ்க்கை.
எதையும் முன்கூட்டி அறிந்து திட்டத்தோடு இயங்கும் சிலர் வாழ்க்கையில் வெற்றி பெறாவிட்டாலும், குறைந்தது தாம் நினைத்ததைச் செய்து விட்ட திருப்தியோடு இருப்பார்கள்.
The Brother Mike Tapes: 1985 from rodd perry on Vimeo.