மொழிபெயர்ப்புக் கவிதைகள்

ஒருபக்கமாய் தலையை சாய்த்து
எதிர்பார்ப்பதுபோல்
சற்றே புருவத்தை உயர்த்தி
கேளுங்கள், உங்கள் கேள்வியை.
Dog_Talk_Listen_Intense_Puppy_Faithful_Ear_Sit_Patienceகவனமாக தேர்ந்தெடுத்தோ
தோரயாமாவோ கேட்கையில்
தலைப்பு எதாகிலும் வரும்
பதிலை எதிர்பாராமல்.
இதுவரை
நீங்கள் செய்த எல்லாவற்றையும்
மறந்தபடி கேளுங்கள். வெறுமனே,
ஒப்பீடுகள் எதுவுமின்றி.
கண்களால் கேளுங்கள்
நீங்கள் கேட்டுக்கொண்டிடுருக்கும் கதை
இதோ, இபோது
உங்கள் எதிரில் நிகழ்வதுபோல்.
சற்றும் இமைக்காமல்
வேறெந்த உடலசைவும்
உண்மையை எப்போதைக்குமாய்
பயமுறுத்தி துரத்திவிடும்
என்பது போல்.
எதையும்
குறித்துக்கொள்ளத் தேவையில்லை
காமிராவோ
ஒலிப்பதிவுக்கருவியோ
கொண்டுவரவும் வேண்டாம்.
கவனமாக கேட்டுக்கொள்ள
இதுவே வாய்ப்பு.
நீங்கள் கேட்பது
உங்கள் வாழ்க்கையே
மாற்றிவிடக்கூடும்.

How to Listen by Joyce Sutphen (Original from FIRST WORDS, Red Dragonfly Press, 2010)