[stextbox id=”info” caption=”இராக் – இரான் – ஐஸிஸ்”]
அமைதி மார்க்கத்தின் முக்கியப் புனிதத் தலங்கள் என்று கருதப்படுவன இருக்கும் நாடுகளில் ஆட்சியில் இருப்பது எதுவும் ஜன நாயகம் என்ற சொல்லுக்கே எதிரியான கருத்தியல். இதில் இஸ்லாம் என்பதற்கும் ஜன நாயகம் என்பதற்குமே ஒவ்வாமை என்றும் சொல்வாருண்டு. எப்படி இஸ்லாமிசத்தின் உலக மகாத் துணையான மார்க்சியம் ஜன நாயகம் என்பதை யோசிக்கவும் திராணியற்றதோ அதே போலத்தான் இஸ்லாமிசமும் ஜன நாயகம் என்பதை அண்டவும் சக்தியற்றது. இரு கருத்தியல்கள் ஆளும் எந்த நாட்டிலும் கவனித்தால் ஜன நாயகம் என்பது இராது, இருந்தால் அது அனேகமாக முல்லாக்கள், அல்லது ராணுவ அதிகாரிகள் அல்லது உதிரிப்படைகள் எனப்படும் குண்டர் படைகளின் ஆட்சியில் உள்ள ஜன நாயகமாகத்தான் இருக்கும்.
இது இந்தியாவில் இருக்கும் நமக்கும் ஓரளவு பழக்கமானதுதான். மத்திய இந்தியாவில் சகஜமாகப் பள்ளிகள், தொலைத் தொடர்பு கூண்டுகள், ரயில் நிலையங்கள், ரயில் பாதைகள், பஸ்கள், காவல் துறையினரின் வண்டிகள், காவல் நிலையங்கள் என்று எதெல்லாம் மக்களுக்கு அரசுடன், மேலும் பரந்த உலகுடன் தொடர்பு கொடுக்குமோ அதையெல்லாம் அழிப்பதைத் தம் மையக் கருத்தியலாகவும், அரசியலாகவும் கொண்ட குற்றக் கும்பல்கள் உலவுகின்றன. இவை அனேகமாக மார்க்சிய லெனினியம் என்ற 19ஆம் நூற்றாண்டின் உளுத்து உதிர்ந்து போன ஒரு கருத்தியலை இன்னமும் கட்டி மாரடிக்கும் மூடக் கும்பல்கள். உலகில் எந்த நாட்டிலும் மக்களுக்குத் துன்பத்தையும் வறுமையையும், கொடும் கொலைகளையும் தவிர வேறெதையும் கொணராத ஒரு கருத்தியலுக்குத் தினம் வணங்கித் தெண்டனிடும் குருட்டு பக்தர்கள் இவர்கள். இவர்களின் ஒரு மையச் செயல்பாடு, அதான் ‘புரட்சி’ என்பதன் சாரம்- தம்முடைய கட்டைப் பஞ்சாயத்து ஒன்றைத் தவிர வேறெந்த சட்டமோ, நீதி மன்றமோ, கல்விச் சாலை மூலம் கிட்டும் அறிவுத் திரட்டோ கிட்டாமல் மக்களை இருண்ட ஒரு குண்டர்கள் உலகில் நிறுத்தி வன்முறையாலும் துப்பாக்கியாலும் ஆட்சி செய்வதுதான். அதை முற்போக்கு என்று போதிக்கப் பல்கலைகளில் எல்லாம் பேராசிரியர்கள் உண்டு. ஊடகங்களில் பத்தியாளர்கள் உண்டு. இந்தப் பத்தியாளர்களில் பலரும் மேற்கின் முதலிய ஜன நாயகம் தரும் வசதிகளை அனுபவித்துக் கொண்டு அங்கிருந்து இந்தியர்களுக்குப் புரட்சி, மார்க்சிய லெனினியத்தின் மகிமை ஆகியன பற்றித் தினம் பிரவசனம் செய்து மகிழ்பவர்கள். இந்து இயக்கங்கள் என்றால் பாசிசம் என்று காலும் கையும் உதறக் குரல் கொடுக்கும் புத்திசாலிகள் இவர்கள்.
இவர்கள் மட்டுமல்ல இந்தியாவின் குற்றக் கும்பல் அரசியல் நடத்துவோர். பல மா நிலங்களில் ஆட்சி செய்யும் கட்சிகள், குறிப்பாக மானில சுயாட்சி, தனி நாடு என்று பொய்களை அவிழ்த்து விட்டு, குறுந்தேசியத்தைத் தூண்டி வெறியை விதைத்து, நாட்டை உடைப்பதே தம் முதல் கடமை என்று கருதும் கருத்தியலை பழம் பண்பாடு என்று பிரச்சாரம் செய்து அன்னிய ஏகாதிபத்தியங்களின் நெடு நாளைய கனவான இந்தியாவை அழித்து நிர்மூலமாக்குவது என்ற குறிக்கோளை நிறைவேற்றும் முதல் வரிசைக் காலாட்படைகள் இவர்கள். இந்தக் குற்றக் கும்பல்கள் பலவும் தம்மை முற்போக்கு என்று முத்திரையோடும், சிறுபான்மையினரின் காவல்படை என்ற அறிவிப்போடும் இந்தியப் பெரும்பான்மையினரான இந்துக்களை எதிர்த்த அரசியலை ஆட்சியில் நிறுத்தி இருக்கின்றனர். இந்தக் கட்சிகள் பலவும் குண்டர் படைகள் இல்லாது ஆட்சியில் நீடிக்கச் சக்தி அற்றவை.
இதே குண்டர் படை ஆட்சி இஸ்லாமிசம் பரவியுள்ள மேற்காசியாவில் எங்கும் இன்று காணக் கிடைக்கும் காட்சி. இத்தனை அமைதியான அரசியலை ஏற்கனவே கடும் சிக்கலில் இருக்கும் இந்தியாவுக்கு இறக்குமதி செய்து இந்துக்களை எல்லாம் மதம் மாற்றி விட்டால் நாடு அமைதிப் பூங்காவாகி விடும் என்று பிரச்சாரம் செய்யும் ஒவைசி போன்றாரும் இப்போது பிரபலமாகி வருகிறார்கள். மேற்காசியா என்னவொரு கொலைக் களமாகி விட்டது என்று படியுங்கள்.
www.thedailybeast.com/articles/2015/03/01/the-u-s-anti-isis-strategy-s-true-cost.html
[/stextbox]
[stextbox id=”info” caption=”சட்டம் என் கையில்”]
அமெரிக்க காவல்துறைக்கு துப்பாக்கி என்றால் கொள்ளை ஆசை. ட்ராஃபிக் ஸ்டாப் என்று சொல்லப்படுகிற சாதாரண போக்குவரத்து விதி மீறலுக்காக நிறுத்தும் போது கூட இடுப்பில் உள்ள துப்பாக்கியில் கை வைத்தபடிதான் கார்/ மோட்டர் சைக்கிள் ஆகிய வாகனங்களை நெருங்குவார்கள். பொது ஜனத்தின் மேல் அத்தனை நம்பிக்கை.
பொது ஜனம் சமீப காலம் வரை காவல் துறையினர் மீது பெரிய நம்பிக்கை என்றில்லா விட்டாலும், காவல் துறை ஏதோ சட்டத்துக்குட்பட்டு நடப்பார்கள் என்ற நம்பிக்கையோடு கொஞ்சம் பதவிசாக நடந்து கொண்டிருந்தனர். திமிர் பிடித்து எதிரி மனோபாவத்தோடு காவல் துறையினரை அணுகும் நபர்கள் எந்த நாட்டிலும் உண்டு. வெறும் குற்றக் கும்பல்களின் உறுப்பினராக இருப்பாரைத் தவிர, நாட்டில் ‘புர்ச்சியைக்’ கொண்டு வந்தே தீருவோம் என்று அலையும் ‘புத்திசாலி’களும் இப்படித் திமிருடன் காவல் துறையோடு உரையாடுவது உண்டு. இந்தியாவிலோ அடையாள அரசியல், மண்ணின் மைந்தர், மொழி தேசியம், மத வெறி, கடத்தல் கும்பல் உறுப்பினராக இருத்தல், ஆளும் கட்சி/ எதிர் கட்சிக் கும்பல் உறுப்பினராக இருத்தல் என்று பற்பல அரசியல் நிலைபாடுகளால் காவல் துறையைக் கிள்ளுக் கீரையாக நடத்தும் ஆட்கள் நாடெங்கும் ஊரெங்கும் உண்டு. இவர்களிடம் சந்தர்ப்ப சூழலைப் பொறுத்து காவல் துறையினர் பதுங்கியோ, எதிர்த்தோ காலம் தள்ளுகின்றனர். அமெரிக்காவில் இடுப்பில் உள்ள துப்பாக்கியோடு அணுகுவதும், ஒருவருக்கு மற்ற காவலர் பின்னால் இருந்து பாதுகாப்பு கொடுத்தபடி அணுகுவதும், பூட்டிய கதவுகளை உடைப்பதற்கு முன் யுத்த களத்தில் இறங்குவது போன்ற ஆயத்தங்களுடன் வருவதும், சமீப காலத்தில் ராணுவத் தளவாடங்கள் போன்ற கவச வண்டிகள், குட்டி எந்திரத் துப்பாக்கிகள், கலாஷ்நிகொவ் துப்பாக்கிகள் என்று முழு ஆயுதபாணிகளாக வருவதுமாக காவல் துறையினர் தமக்கு மக்கள் மீது சிறிதும் நம்பிக்கை இல்லை என்று திரும்பத் திரும்ப நிரூபித்து வருகின்றனர். மக்களும் தம் வெள்ளையின வெறியையும் தாண்டி, ஓரளவு காவல் துறையை அப்படி நம்பக் கூடாது என்று நினைப்பதாகத்தான் தெரிகிறது.
மக்கள் தொகையில் கணிசமான சதவீதம் (சுமார் 1.5 மிலியன் மக்கள்) சிறையில் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர் கருப்பர், லத்தினோ மக்கள். சமீப காலத்தில் நிறைய பெண்களும் இப்படி அடைக்கப்படுகிறார்கள். 30 வருடம் முன்பு போல் இல்லாமல் இப்போது முணுக்கென்றால் 10 வருடம் 20 வருடம் சிறையில் தள்ளப்படுகிறார்கள். சிறு குற்றங்களுக்கும் பெரும் தண்டனை. இப்படி ஒரு நீதி முறையில் மக்களுக்கும் காவல் துறை மீது அனுதாபம் இல்லாது போனதோடு ஓரளவு எரிச்சலோடு அவர்களைப் பார்க்கும் தன்மை கூடி வருகிறது.
சிறுநகர, கிராமத்து வெள்ளையர்கள் காவல் துறையினரிடம் மிக்க அபிமானம் பூண்டிருப்பது இருக்கிறது, ஆனால் அதே பரப்பில் வாழும் சிறுபான்மை இனத்தினர் அந்தக் காவல் துறையினரைப் பார்த்துப் பயந்து வாழும் நிலை. பெரு நகரங்களில் வசதி மிக்க வெள்ளையர்தான் காவல் துறையினரிடம் அபிமானம் கொண்டவர்கள். பிறருக்கு காவல் துறையினர் என்பவர்கள் தவிர்க்க முடியாத ஒட்டுண்ணிகள் என்ற கருத்து. சமீபத்து வருடங்களில் வலது சாரி அரசியல் நாடெங்கும் பற்பல மாநிலங்களிலும் அதிகாரத்தில் உள்ளதோடு, மத்திய அரசிலும் வலது சாரிக் கட்சியே அதிகாரத்தில் உள்ளது. நாடெங்கும் பல தளத்து நீதி மன்றங்களிலும் வலது சாரி நீதிபதிகளே அதிகாரத்தில். இதனால் காவல் துறையினர் அலட்சியமாகவே தாம் விரும்பாதவர்களைச் சுட்டுத் தள்ளிக் கொன்று விடுகின்றனர்.
இது கடந்த வருடம் மிகவுமே வெளிப்படையாகத் தெரியும்படி இருந்ததாலும், இப்படிக் கொலைகளில் சம்பந்தப்பட்ட காவல் துறையினர் எவருமே தண்டிக்கப்படாததோடு, பதவியில் தொடர்ந்து இருக்கிறார்கள் என்பதும் அந்த நாடெங்கும் மிக்க கவலையைத் தூண்டி இருக்கிறது. குறிப்பாக கருப்பர், லத்தினோக்கள், ஆசியர்கள் போன்றார் காவல் துறை மீது மிக அவநம்பிக்கையோடு இருக்கிறார்கள். சமீபத்தில் மைய அரசு நடத்திய ஒரு சீர்தூக்கலில் வெளியான தகவலை இந்தச் செய்தி அறிக்கை சொல்கிறது. இதுவரை கணக்கில் காட்டப்பட்டவை தவறு, கணக்கில் வராத கொலைகள் மூன்று மடங்கு அதிகம் என்றும் வருடத்துக்கு 950 பேர் போல காவல் துறையினரால் கொல்லப்படுகிறார்கள், இது கடந்த பத்துப் பதினைந்தாண்டுகளாக நடக்கிற விஷயம், இந்தப் புள்ளி விவரங்களைத் தொகுக்க முடியாத வகையில் இவை அந்தந்த காவல் துறையினரால் பல வேறு வகைப் பிரிவுகளில் போட்டு சமர்ப்பிக்கப்படுகின்றன என்று அறிக்கை சொல்கிறதாம். ஒரு செய்தியில் சமீபத்து வருடம் ஒன்றில் துப்பாக்கிகளால் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை பல பத்தாயிரம் என்று தெரிய வந்ததை இத்தோடு சேர்த்துப் பார்த்தால், அமெரிக்கத் துப்பாக்கி உரிமையாளர் சங்கம் என்ற கடும் வலது சாரி அமைப்பு அரசியலை எத்தனை தூரம் வக்கிரமாக்கி வைத்திருக்கிறது என்பது புரியலாம்.
http://www.theguardian.com/us-news/2015/mar/04/police-killed-people-fbi-data-justifiable-homicides
[/stextbox]
[stextbox id=”info” caption=”மேஜையில் உட்கார இடம் கிடைக்குமா?”]
ஒரு வழியாக ஜெர்மனி மேற்கு யூரோப்பிய நாடுகளில் பலவற்றில் உள்ள ஒரு சட்டத்தைத் தானும் இயற்றி விட்டது. உயர் பதவிகளில் 30% இடங்களில் பெண்களுக்கு ஒதுக்கீடு கொடுக்க வற்புறுத்தித் தனியார் நிறுவனங்களையும் இதில் சேர்க்கச் செய்யும் ஒரு சட்டம் இது. இது எத்தனை தூரம் வேலை செய்யும் என்று பார்க்க வேண்டும்.
http://www.theguardian.com/business/2015/mar/06/germany-gender-quota-legislation-boardroom-law-women
[/stextbox]
[stextbox id=”info” caption=”பாப்பர் x தாமஸ் குன்”]
திறந்த சமுதாயம் வேண்டும் என்று வாதிட்ட பாப்பர், இடது சாரிக் கொள்ளி எறும்புகளுக்குக் கடுமையான எதிரி. அவரை இழித்துரைக்காத இடது சாரியினர் அன்று குறைவு. ஆனால் அவருமே ஒரு ஜெர்மன் இடது சாரிதான். உதவாக்கரை லெனினிய இடது சாரிகளுக்கு எதிராகவும், தடாலடி மார்க்சியருக்கு எதிராகவும் நின்ற பாப்பர், அறிவியல் அணுகல் என்பதை உலக அணுகலாக்க முயன்றார். அவருடைய சமகால மார்க்சிய ‘அறிஞரான’ அடார்னோ, பாப்பர் முன்வைக்கும் அறிவியல் அணுகல் என்பது சமூகவியல் ஆய்வுகள், அலசல்களில் சாத்தியமற்றது என்பதோடு, அப்படி ஒரு அணுகலைக் கொணர முயற்சித்தல் ஒருவித அடாவடி சான்றடிப்படை வாதத்துக்குக் கோவில் கட்டுவதாக அமையும் என்றும் ஆதிக்கம் செலுத்தும் சக்திகளுக்கு எதிரான முயற்சியாக அறிவியலைப் பயன்படுத்த விடாமல் போகும் என்றும் வாதிட்டாராம். தாமஸ் குன் என்பாரின் அணுகல் இவை இரண்டுக்கும் நடுவில் வேறொரு இடது சாய்வு கொண்ட அணுகலாக இருந்தது. இவை அனைத்துமே இன்று கொஞ்சம் பசலித்தனமான அணுகல்களாகக் கருதப்படுகின்றன என்றாலும் புது வழி ஒன்றும் இன்னும் உருவாகி விடவில்லை. இன்னுமே ஆய்வு முறை அணுகல்கள் சான்றடிப்படைவாதம், கருத்து மெய்ப்பிக்கும் வாதம், அடுத்தடுத்த மேம்படுத்தல் மூலம் முற்படும் கருத்துருக் கட்டு வாதம் என்ற சில முறைகளிடையே தான் அலை பாய்கின்றன.
இது சம்பந்தமாக ஒரு புத்தகம் இங்கே: Kuhn Vs Popper: The Struggle for the Soul of Science By Steve Fuller
அதனால் பாப்பருக்கு ஆதரவு தெரிவிக்கும் அனைவரும் நம்பகமானவர்கள் என்றில்லை. காட்டாக இங்கு ஒரு கட்டுரை: http://www.americanthinker.com/articles/2008/04/the_lefts_theft_of_the_open_so.html
மேற்கண்டது வலதுசாரி மனப்பிராந்திகளில் இருந்து உருவான ஒரு பிரச்சாரம். இவற்றிடையே நம் கருத்துப் படகை கவிழாமல், நொறுங்காமல் செலுத்த நாம் கடமைப்பட்டிருக்கிறோம். இவர்கள் இப்படி ரோம் பற்றி எரிகையில் ஃபிடில் வாசிக்கிற போது இஸ்லாமிசத்தின் கொலையாளிகள் என்ன செய்கிறார்கள்?
அதை ஒரு அமெரிக்கத் தளம் சொல்கிறது. இதுவும் ஒரு வகைப் பிரச்சாரம்தான். யூரோ மையப் பார்வையில் இஸ்லாமிசத்தைப் பார்க்கிற முயற்சி என்றாலும், இஸ்லாமிசம் என்பதையும் கொடும் விஷ ஜந்து என்று பார்க்காமல் இருக்கும் எந்த இந்தியனும் தண்டு சுற்றி வருகிற செக்குக்குள் தலை கொடுத்த மூடனாகத்தான் இருப்பான் என்பதையும் கவனிக்க வேண்டும்: http://www.thedailybeast.com/articles/2015/01/30/france-s-pied-piper-of-jihad.html
செக்குக்குள் தலை கொடுத்த பெருமாள்களில் தமிழக முற்போக்குகள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.
[/stextbox]
[stextbox id=”info” caption=”புத்தகங்கள்”]
ஒன்று இந்தக் கட்டுரை: http://bookforum.com/inprint/021_05/13989
இது அமெரிக்காவில் கருப்பர் சமூகத்தில் நடக்கும் கொலைகளை அமெரிக்கக் காவல் துறை புலன் விசாரணை இல்லாது நழுவ விடுவது ஏன் என்று கேட்கும் புத்தகத்தைப் பற்றிய விசாரம்.
இன்னொன்று: http://bookforum.com/inprint/021_04/13934
ஒரு கிளைத்தகவல்- ஈக்வெடார் நாட்டில் இருந்த ஷுவார் என்னும் குடியினர் மனிதத் தலையை அழுகாமல் அப்படியே சுருக்கிச் சிறிதாக்கும் ‘கலையை’க் கற்றிருந்தனர். இந்தத் தலைகள் யூரோப்பில் நல்ல விலைக்குப் போகிறதென்று தெரிந்த பின், ஷுவார் குடியினர் தங்கள் மக்களையே கொல்லத் துவங்கினராம். (அறிவாளிகள்தான்!) ஆனால் இந்தியரும் இப்படித்தான் முஸ்லிம் படையெடுப்பாளருக்கும், யூரோப்பியப் படைகளுக்கும் தம் மக்களையே காட்டிக் கொடுத்துக் பெரும் எண்ணிக்கையில் சக மனிதரை அந்தக் கொலைக் கும்பல்கள் கொன்று குவிக்கக் கருவியாக இருந்தனர். இல்லையா?
தலை வெட்டுவது என்பது கொடுமையா இல்லையா என்று புத்தகம். எழுதியவர் ஒரு பிரிட்டிஷ் மானுடவியலாளர்/ பெண்.
[/stextbox]
[stextbox id=”info” caption=”ஏழை மேலும் ஏழையாவதும் பணக்காரர் மேலும் பணக்காரர் ஆவதும்”]
ஒரு உண்மையான நம்பிக்கையாளர் – அல்லது பரம விசுவாசி; எப்படி என்ன தோற்றாலும் மார்க்ஸியமே வெல்லும் என்று நம்புவார் என்று காட்டும் விமர்சனம் இது. விமர்சகருக்கு இன்னும் வர்க்க பேதத்தையும், வர்க்கப் போராட்டத்தையும் தாண்டி ஒரு விடையும் தெரியவில்லை. சிலந்தி வலைத் துண்டுகள் போல காற்றில் எது மிதந்து வந்தாலும் அது வர்க்கப் போராட்டத்தின் இழைகள் என்று புளகித்து அவற்றை ஒட்டிக் கொடுக்கப் பார்க்கிறார். (கடைசிப் பத்தியைப் பார்க்க)
ஆனால் புத்தகம் என்னவொ ஏதும் விடை தெரியாது, ஆனால் உலக முதலியத்தின் கோட்டையாக இருந்த, இப்போது காலியான கஜானாவோடு நிற்கிற அமெரிக்காவை மையமாகக் கொண்டு எப்படி இடது சாரி அமெரிக்காவில் தோற்றுப் போய் நிராயுதபாணியாக இன்று நிற்கிறது என்று பேசுகிறது. அமெரிக்க இடது சாரியைச் சுத்தமாக அழித்தவை அமெரிக்கரின் இனவெறியும், கிருஸ்தவப் பொய்மையில் நம்பிக்கையும் என்ற இரண்டு எளிய விடைகளைத் தொடாது மற்றதை எல்லாம் பேசுகிறது. இந்த இரண்டையும் அமெரிக்க முதலாளிகளும், பிரிட்டிஷ் முதலாளிகளும் எப்படிப் பயன்படுத்தி அமெரிக்க வெள்ளையரின் உலகை இருளடித்தனர் என்பதையும் புத்தகம் பேசியதாகத் தெரியவில்லை. பாக்ஸ் நியூஸ் என்கிற பயங்கரக் காளானைத் தினம் உண்டு அது விளைவித்த மூளை அரிப்பில் அமெரிக்க வெள்ளையர் வீழ்ந்த பின் மார்க்சியமாவது இன்னொன்றாவது?
http://bookforum.com/inprint/021_05/14163
[/stextbox]