வாசகர் மறுவினை

Double_small_DNA_helix_Science_Molecular_Structureஇரட்டைச் சுருள் வளைய ஆராய்ச்சியில் மிகப் பெரிய சர்ச்சை இன்று வரை, இந்த அமைப்பைக் கண்டு பிடித்தவர் யாரென்பது. 1962 –ஆம் ஆண்டு, மருத்துவ நோபல் பரிசு என்னவோ வாட்ஸன், க்ரிக் மற்றும் வில்கின்ஸ் ஆகிய மூவருக்கும் அளிக்கப்பட்டது. இதில் நான்காவது பெண் விஞ்ஞானி ஒருவர் ஒதுக்கப்பட்டு, அநீதி இழைக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டு இன்றுவரை விஞ்ஞான உலகில் உண்டு. இந்த பெண் விஞ்ஞானி, ரோஸலின் ஃப்ராங்க்லின் (Rosalind Franklin), இங்கிலாந்தைச் சேர்ந்தவர். 1962 –ல் இந்த நோபல் பரிசு வழங்கப்படுகையில் இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, இளவயதில், காலமாகியிருந்தார். நோபல் பரிசு பாரம்பரியப்படி, காலமானவருக்கு பரிசளிக்கப் படாது. இவருடைய பெயரை முன்மொழிந்திருப்பார்கள் – ஆனால், இவர் காலமாகியதால்,(1958) பரிசளிக்கப்படவில்லை என்று பரவலாக நம்பப்பட்டு வந்தது. நோபல் பரிசுப் பரிந்துரைகள், 50 வருடங்களுக்கு வெளியிடாமல் ரகசியமாகப் பாதுகாப்பதும் அந்தப் பரிசின் இன்னொரு பாரம்பரியம். 2008 –ல், இவர் காலமாகி ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் நோபல் பரிசு பரிந்துரைகளை ஆராய்ந்ததில், இவரது பெயரை யாருமே முன்மொழியவில்லை என்று தெரிய வந்தது.
வாட்ஸன் எழுதிய Double Helix என்ற வெற்றிப் புத்தகத்தில் ரோஸலின் பெயர் எங்கும் சொல்லப்படவில்லை. அப்படி என்ன செய்தார் ரோஸலின்? இந்தச் சர்ச்சைக்கு விஞ்ஞான உலகில், ’51 புகைப்படம்’, (Photo 51) என்ற பெயருண்டு. உட்கரு அமில கட்டுமானத்தை ஆராய்ச்சி செய்தவர்களில் மிக முக்கியமானவர் ரோஸலின். இவரது மேற்பார்வையில் வேலை செய்த ரேமண்ட் காஸ்லிங் (Raymond Gosling) என்பவர் உட்கரு அமில கட்டுமான எக்ஸ் கதிர் அலைவளைவு புகைப்படத்தை முதன் முறையாக 1952- ல் எடுத்தார். இதை ’51 புகைப்படம்’ என்று ஒரு கோப்பாக வைக்கப்பட்டது. ரோஸலினின் ஒப்புதலின்றி, இந்தப் புகைப்படத்தை, வில்கின்ஸ் (ரேமண்ட் காஸ்லிங் இவர் கீழே ஆராய்ச்சியாளராகச் சேர்ந்திருந்தார்) வாட்ஸனுக்கு காட்டி இருக்கிறார். மிக முக்கிய விஞ்ஞான தடயம் இந்த ’51 புகைப்படம்’ தாங்கியிருந்தது. இந்தத் தடயத்தை வாட்ஸனும், க்ரிக்கும் தானே கண்டு பிடித்ததாக உலகிற்கு அறிவித்து ரோஸலினுக்கு அநீதி இழைத்தனர் என்ற குற்றச்சாட்டு இன்று வரை தொடர்கிறது. இந்த விஷயத்தை நான் எழுதாமல் விட்டதை சுட்டிக்காட்டிய நண்பர்களுக்கு நன்றி.
இதைப்பற்றிய யுடியூப் விடியோ இங்கே:

இது சம்மந்தமான இரு முக்கிய கட்டுரைகளையையும் இங்கு படிக்கலாம:
1. The Discovery of the Molecular Structure of DNA – The Double Helix
2. Photo 51 – Wikipedia, the free encyclopedia
ரவி நடராஜன்

oOo

சிந்தனைச் சோதனைகள்சுந்தர் வேதாந்தம்

தமிழில் இம்மாதிரியான தொடர் மிக மிக மிக அபூர்வம்.அருமையான,புதுமையான தொடர்.ஆனால்,எனக்கு இரண்டு,மூன்று முறை படித்தால்தான் புரிந்துக்கொள்ள முடிந்தது.சில கட்டுரைக்களை இன்னும் திரும்ப,திரும்ப படிக்கின்றேன்.இது போன்ற தொடர்களை எதிர்பார்க்கின்றேன்.நன்றி
நரேஷ்

oOo

மகரந்தத்தை தொகுப்பவர் யாரோ? அருமையான தொகுப்பு, செய்தியை ஒட்டி வரும் பிளக்கங்களும் அருமை. சொல்வனத்தில் நான் மிக விரும்பும் பகுதியில் மகரந்தமே முதலிடம்.
ஜெயக்குமார்

oOo

டிசம்பர் நாற்காலிகள்
உண்மையில் கச்சேரி சீசன் என ஒன்றை வைத்து அதில் விடாமல் பாடி கலை வளர்க்கும் மக்களுக்கு ஒரு வாழ்த்தைச் சொல்லிவிட்டு கட்டுரைக்கு வருவோம்.
விமர்சனம் கலக்கல். இதையெல்லாம் வாசிக்க சங்கீத ஞானம் வேண்டியிருக்கவில்லை என்பதே எவ்வளவு வசதியாய் இருக்கிறது.
மேடைகளில் பாட வாய்ப்புக் கிடைக்காத நல்ல குரல்களை தேர்வு செய்ய ஏதும் முறை வைத்திருக்கின்றனரா இந்த சபா மேலாளர்கள்.?
ஒரு டிசம்பரிலாவது இந்த சங்கீத மேடையைச் சுற்றிவர எண்ணம் உண்டு. ஆனால், வாய்ப்புதான் கிடைப்பதில்லை
ஜெயக்குமார்

oOo

கெட்ட வார்த்தை பேசுவோம்
எளிய மக்களின் அன்றாட பேச்சுவழக்கில் இந்த ‘கெட்ட சொற்கள்’ புழங்குவது மிகவும் தெரிந்ததே. கையறு நிலையில் ஒரு மேட்டுக்குடி ஒருவர் பேச்சிலும் இக்கெட்ட சொற்கள் அவரின் உணர்வுகளை வடிக்க உதவுகின்றன என்பதை நான் நேரே கேட்டிருக்கிறேன். பெரிய அரசு அதிகாரிகள் தன் சக அதிகாரி ஒருவரை இப்படி பிற அதிகாரி நணபர்களிடம் உரையாடும்போது இச்சொற்கள் வரும். ஆக, எல்லாருக்குமே இச்சொற்கள் உதவுகின்றன. அவர்களின் மேலதிகாரி ஒரு பெண்ணாக இருந்துவிட்டால், இந்த ஆண் அதிகாரிகள் – அமெரிக்காவில் படித்துவிட்டு வந்தவனாக இருந்தாலும் – அவரைப்பற்றித் திட்டிப்பேசுவது, கீழ்த்தட்டு மக்களையே பின்னுக்குத் தள்ளிவிடும். பெண்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போதும், அல்லது வயதானவுடன் இப்படி பேசுவது கேட்கலாம்.
சிறுவயதில் நான் தொழிலாளிகள் நிறைந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தபின், அவர்கள் நிற்குமிடத்தில் இருந்த போது கேட்டது:

//காலைப்புண்டையிலிருந்து, மாலைப்புண்டை வரைக்கும் வேலைப்புண்டை பாத்து கூலிப்புண்டை கேட்டா கோபப்புண்டை வருது//

என்று சொல்லி ஒரு ஆள் அழுதார்.
இங்கே அந்த கெட்ட சொல் முக்கியமில்லாமல் போகிறது. அவரின் வேதனைதான் பெரியதாகிப்போகிறது. ஏன் இந்த சொல் அவருக்கென்றால், அவர் வாழும் சமூகச்சூழ்நிலை இச்சொல்லை ஒரு உணர்ச்சிகரமான சொல்லாகத்தான் பார்க்கிறது. கெட்ட்ச்சொல்லாகன்று.
ஆனால், அச்சொல்லை கெட்டச்சொல்லாகப் பார்க்கும் சமூகத்தவன், இச்சொல்லக்கேட்கும் போது அதிர்ச்சியடைவான்.
இப்படிப்பட்ட சொற்களை ஆராய்வதும் மொழி ஆராய்ச்சியே. எனினும் கூச்சப்படுவார்கள். தவிர்ப்பார்கள். எப்படி நம் வீட்டில் கக்கூஸ் அசுத்தமாக இருக்கிறதென்றால், அதற்கு நாம் முதல் கவனம் கொள்ளாமல், we don’t even like to talk about வரவேற்பறைக்கே முதலிடம் கொடுப்பது போல. வாழ்க்கையென்றால் நடிப்புதுதான். அதில் இஃதொன்று.
எனினும், இந்த ஆராய்ச்சி மனப்பக்குமடைந்த வயது மாணவர்களுக்கு – பலகலைக்கழகங்களில் – வைத்தால் நன்று. சிறார்களுக்கு வேண்டாம்.
TM

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.