[stextbox id=”info” caption=”பெயரில் என்ன இருக்கிறது”]
பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பபது போல, செல்லப் பிராணி, நமது வண்டி, கைபேசி என நாம் பொருட்களை வாங்கியதும் யோசிப்பது புது பெயரைத்தான். புதுசாக இருந்தால் மட்டும் போதாது. பெயர் சட்டென மனதைக் கவரும்படி இளைய தலைமுறையினருக்கு ஏற்ப கூல் ஸ்டைலில் இருக்க வேண்டும். நிறுவனங்களது பெயர் மட்டுமல்ல அவற்றின் உற்பத்திப் பொருட்களுக்கும் இதே நியதிதான். நூறு குரங்குகள் சேர்ந்து தட்டச்சினால் என்றாவது ஒரு ஷேக்ஸ்பியர் காவியத்தைப் படைத்துவிட முடிகிற சாத்தியத்தை A Hundred Monkeys என நிறுவனத்தின் பெயராக மாற்றுவதற்கு தைரியம் வேண்டும். எப்பப்பா பொருளைக்கொடுப்பே எனக் கேட்டால், எங்களுக்கு என்ன தெரியும் அது காலத்தின் கையில் இருக்கு எனச் சொல்லாமல் இருக்க வேண்டுமே. ஆனால் விற்பனைப் பொருளின் வெற்றி வசீகரமானப் பெயரைத் தேர்ந்தெடுப்பதில் அமையும் நுகர்வு கலாச்சாரக் காலத்தில் இருக்கிறோம். இங்கே ஒருவர் பெயரைத் தேர்ந்தெடுக்கப் மேற்கொண்ட காரியங்களை மிகவும் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார். அதுமட்டுமல்லாது மொழிக்களஞ்சியத்தை விஞ்ஞான முறைப்படி அலசி பெயர் வைத்துள்ளார்.
http://www.nytimes.com/2015/01/18/magazine/the-weird-science-of-naming-new-products.html?_r=0
[/stextbox]
[stextbox id=”info” caption=”புது ரத்தத்தைப் பாய்ச்சுங்கள்!”]
இதை நாம் பல இடங்களில் கேட்டிருப்போம். அலுவலகத்தில் ஆட்குறைப்பு சமயத்தில் சொல்லப்படும் ஒரு காரணம். நஷ்டக்கணக்கு காட்டும் பல நிறுவனங்களின் மனிதவளத்துறையினரிடம் இருக்கும் ஒரே தீர்வும் இதுதான். ஹார்வர்ட் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்கள் உண்மையில் இரு எலிகளை ரத்த நாளங்கள் வழியே இணைத்து ஆராய்ந்து வந்ததில் பல ஆச்சர்யகரமான விளைவுகளைக் கண்டனர். Parabiosis எனும் இந்த முறைப்படி வயதான எலியையும் இளமையான எலியையும் சேர்த்துப்பார்த்ததில் வலு இழந்துவரும் தசைகளை புது ரத்தம் மூலம் சீர் செய்ய முடிந்திருக்கிறது. 150 வருடங்களுக்கு முன்னர் பிரெஞ்சு ஆய்வார்கள் தொடங்கியிருந்தாலும் தற்கால தொழில்நுட்பத்தைக் கொண்டு இதை வெற்றிகரமான விளைவுகளை எட்டியுள்ளனர். அல்சைமர் வியாதியுள்ள மனிதர்களுக்கும் இதைப்போன்ற சோதனையைச் செய்து குணமாக்க முடியுமா என கலிஃபோர்னியாவில் அல்காஹெஸ்ட் எனும் நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.
http://www.nature.com/news/ageing-research-blood-to-blood-1.16762
[/stextbox]
[stextbox id=”info” caption=”சும்மா கிடப்பதே சுகம்!”]
விஞ்ஞானிக்கு ஒரு வழியென்றால் அஞ்ஞானிக்கு வேறொரு வழி. மனித மனம் மூளை இரண்டையும் இணைத்துப்பார்த்துப் பேசிப்பழகிய கிழக்கு சிந்தனை முறைக்கு பதினெட்டாம் நூற்றாண்டு முதல் உச்சிமண்டையில் அடித்து ரெண்டையும் பிரித்து அலசத்தொடங்கிய பின்னர் இன்று மெகா யூ டர்ன் எடுக்கிறோம். கென்யா பகுதியில் ஒவ்வொரு முப்பது நொடிக்கும் ஒரு குழந்தை பிறந்ததும் சரியான மருத்துவ வசதி இல்லாது இறக்கிறது – அவற்றைக் காப்பாற்றுங்கள் என நிறுவனங்கள் நிதி கேட்கின்றன. உலகின் ஆதி மனிதன் தோன்றி பல்கிப் பெருகிய நாடு, பொது மருத்துவமில்லாமல் வீட்டு மருத்துவத்தை மட்டும் நம்பி காலங்காலமாக தழைத்த நாடு இன்று மருத்துவ வசதி இல்லாது குழந்தைகளை இழக்கிறது என்றால் அதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்? கீழத்திய தத்துவ மரபைக்கொண்டு மனதின் பல நிலைகளை அறிவியல் கோணத்தில் ஆராய்ந்து மனித வாழ்வை உய்விக்கும் வழி ஒன்று சுட்டியில் உள்ளது.
http://www.utne.com/mind-and-body/the-art-of-wu-wei-ze0z1402zhou.aspx?PageId=1
[/stextbox]
[stextbox id=”info” caption=”அகிரா குரோசாவாவின் வடிவவியல்”]

அகிரா தன் திரைப்பட சட்டகத்தில் கதை மாந்தர்களை பல்வேறு வடிவங்கள்(முக்கோணம், சதுரம்,..) வருமாறு அமைக்கிறார். பார்வையாளனின் கவனம் காட்சியின் ஒரு கதாபாத்திரம்(அல்லது)பல கதாபாத்திரங்கள் மீது அனிச்சையாக குவிய அது எப்படி உதவுகிறது என்று இந்த ஒளிப்படம் விளக்குகிறது. ’அடுத்த முறை உங்கள் திரை சட்டகத்தை இப்படி வடிவமைக்க முயலுங்கள்’ என்று சொல்லி முடிக்கிறார். தன் பார்வையாளனுக்கு முக்கோண வடிவத்தை காதல் காட்சிகளிலும், பூஜ்யத்தை திரை அனுபவமாக மட்டுமே காட்டும் தமிழ் சினிமாவிற்கு இதில் ஒரு செய்தி இருப்பதாகவே தோன்றுகிறது.
http://blogs.indiewire.com/pressplay/watch-the-geometry-of-akira-kurosawa-a-video-essay-20150129
பின்குறிப்பு : தமிழ் திரைப்படங்களை ”கோட்பாடு ரீதி”யாக அணுகமுயலும் பத்திரிக்கைகள் இந்த ஒரு ஒளிப்படத்தை மட்டும் பார்த்து விட்டு பல கட்டுரைகள் வெளியிட துவங்கினால் அதற்கு சொல்வனம் பொறுப்பேற்காது.
[/stextbox]
[stextbox id=”info” caption=”சவுதி அரேபியா வஹாபிஸமும் இஸ்லாமிய தீவிரவாதமும்”]
அமைதி மார்க்கம் நமக்குப் புதுப்புது செய்திகளாகக் கொடுக்கத் தவறுவதே இல்லை. வாராவாரம் பெரும் படுகொலைகள், மரணதண்டனைகள், தலைவெட்டல்கள், கசையடிகள், கடத்தல்கள், பயங்கரவாதிகள் / கொலைகாரர்களை போதிய சான்று இல்லை என்று நீதிமன்றங்கள் மூலமே விடுவித்தல், அமெரிக்காவிடம் போய் பிச்சை கேட்டு ஓடு ஏந்துதல் ஆனால் தெருக்களில் அமெரிக்காவை எதிர்த்துப் போராட்டம் என்று கபட நாடகமாடுதல். என்ன பொய்யையும் துணிந்து சொல்லலாம் என்று உலகெங்கும் பிரச்சாரத்தால் மக்களை மூழ்கடித்து பூசணிக்காயை ஒரு சோற்றுப் பருக்கைக்குள் மறைக்க முயல்தல்.
இன்றைய செய்தி- மார்க்கத்தின் பாதுகாவலர்களான தாடிக்கிழவர்களை ஒருவர் விமர்சித்தார் என்று அவருக்கு அந்த நாட்டு அரசு 1000 கசையடிகளைப் பரிசாக வழங்கி இருக்கிறது. அன்னாருடைய மனைவி ‘தனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. நீதி கிட்டும்’ என்று சொல்கிறார். பாதுகாவலத் தாடிக்கிழவர்கள் மார்க்கத்தின் புத்தகத்தை வைத்துக் கொண்டுதானே ‘நீதி’ வழங்கி இருக்கிறார்கள். அந்த ‘நீதி’தான் 1000 கசையடிகள்.
கருத்து சுதந்திரம் கேட்டுத் தெருத்தெருவாகப் போராட்டம் நடத்தும் அதி மேதாவிகளான தமிழ் அறிவு சீவிகள் நடுவே ஒரு ஜோக்கும் இருந்தது. அமைதி மார்க்கத்தின் தலைகளில் ஒருவர் பாதிக்கப்பட்ட புத்தகத்தின் ஒரு பிரதியோடு நின்று கருத்து சுதந்திரத்துக்குப் போராடுகிறதாகப் பாசாங்கு வேறு செய்கிறார். எந்த மார்க்கம் கருத்து சுதந்திரத்தைத் துப்பாக்கியால் பாரிஸில் அழிக்க முயன்றதோ எந்த மார்க்கத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவை சவுதி அரேபியா பெரும் செலவு மேற்கொண்டு உலகெங்கும் பரப்புகிறதோ, எந்தப் பிரிவினர் இன்று உலகின் பற்பல நாடுகளிலும் கொடும் கொலைகளையும், ஆள்கடத்தல்களையும் செய்கிறார்களோ அந்த மார்க்கத்தின் ஒரு தலைவர் தமிழ் நாட்டில் ஒரு எழுத்தாளருக்குக் கருத்து சுதந்திரம் வேண்டும் என்று கொடி பிடிப்போர் நடுவே நின்று மிக்க சுதந்திரத்தை நாடுகிறார். ஏனெனில் பாதிக்கும் புத்தகம் இந்து சமுதாயத்தை இழிவு செய்யவென்று முனைந்து முற்போக்கு முகாமால் எழுதப்பட்டிருக்கிறது. மார்க்கத்தின் இந்திய செயல் திட்டங்களில் ஒன்று இந்து சமுதாயத்தை ஒட்டக் கருவறுப்பதுதானே. அதுதான் காவலர் கருத்து சுதந்திரம் நாடிப் போராடுகிறார்.
இதற்கிடையில் அவருடைய தந்தை நாடான சவுதி அரேபியா 1000 கசையடிகள் வழங்கி கருத்து சுதந்திரத்தைப் பாராட்டுகிறது. இதுவல்லவா ஒன்றுபட்ட இயக்கம், உலகெங்கும் ஒருமைப்படுத்தும் மார்க்கம்!
http://www.theguardian.com/world/2015/jan/21/-sp-saudi-blogger-wife-raid-badawi-lashes
[/stextbox]