மகரந்தம்

[stextbox id=”info” caption=”புனிதப் போரின் செலவு”]


m1

‘புனித போர்’ செலவு பிடிக்கும் விஷயமா? ”அவ்வளவு பெரிசா செலவில்ல” என்கிறார் இந்த ஆய்வாளர். பல்வேறு தீவிரவாத குழுக்களின் நடவடிக்கைகளை ஆராய்ந்து அவர்களின் நிதி திரட்டல் முறைகள், ’புனிதப் போரை’ நிகழ்த்த தேவையான பொருட்களை நினைத்த இடத்திற்கு கொண்ட செல்ல தேவையான அவர்கள் கட்டமைப்பை அலசுகிறார். இறைவனின் பெயரால் நடத்தப்படும் போருக்கு அவர்களுக்கு பெருமளவில் துணைபுரிவது எண்ணைய் வியாபாரம். இது அனைவரும் அறிந்தது. ஆனால் ஆபாச ஒளிப்படங்களை கூட விட்டு வைப்பதில்லை இவர்கள். அந்த வியாபாரத்தின் மூலம் பணம் கொட்டுகிறது. கைப்பற்றும் நாட்டின் கலைப் பொருட்களை இணையம் மூலமாக விற்று பணம் சம்பாதிக்கிறார்கள். திருட்டு வி.சி.டி. கூட இந்த பட்டியலில் இருக்கிறது. அடுத்த முறை எங்காவது குண்டு வெடித்தால் நாம் கொடுத்த முப்பது ரூபாய்க்கு எத்தனை துளி ரத்தம் சிந்தியிருக்கும் என்று நாம் யோசிக்க முற்படுவது மொத்த மானுடத்திற்கு நன்மை பயக்கும் என்று தோன்றுகிறது.

http://www.spiegel.de/international/business/terror-expert-shelley-speaks-of-islamic-state-business-model-a-1011492.html
[/stextbox]


[stextbox id=”info” caption=”உண்மையைச் சொல்! செத்துத் தொலை!!”]

m2

பாகிஸ்தானின் ஐ எஸ் ஐ, ராணுவம் போன்றன எப்படி வெறும் மாஃபியாக்கள், எப்படி பாகிஸ்தானிய மக்களை அவை அடக்கி ஆள்கின்றன என்று நியுயார்க்கரில் ஒரு கட்டுரை. இது ஒரு பயங்கர ஜோக். ஏனெனில் அமெரிக்க மக்களை அமெரிக்க தொலைக் காட்சிகளும், பத்திரிகைகளும், உளவு நிறுவனங்களும், கிருஸ்தவ சர்ச்சுகளும், இனவெறி அரசியல் நடத்தும் இரண்டு கட்சிகளும், இன்னும் ஏதேதோ பயங்கரங்களைக் கண்டுக்க ஆட்களே இல்லாமல் நடத்தும் பெரும் பன்னாட்டு (அமெரிக்க வேர் கொண்ட) நிறுவனங்களும் அமெரிக்கரை ‘அடக்கி’ ஆளவே செய்கின்றன. என்ன அடக்குதல் அங்கு மிகச் சிக்கலான வகையில் உடனே காணப்பட முடியாத வகைகளில் செய்யப்படுகிறது. அதனால்தான் அமெரிக்கர்களுக்குத் தம்மைப் பிணைத்தவை என்ன வகைச் சங்கிலிகள் என்பது குறித்து நிறையவே மனமயக்கம் இருக்கிறது. அவை சங்கிலிகளே இல்லை என்றும் மயக்கம் உண்டு. ஆனாலும் அமெரிக்கப் பிரச்சார நோக்கங்களைத் தாண்டிய ஒரு அரை உண்மை இதற்கு உண்டு.

http://www.newyorker.com/magazine/2011/09/19/the-journalist-and-the-spies?currentPage=all
[/stextbox]


[stextbox id=”info” caption=”சிக்கலாகும் ஐரோப்பிய அரசியல்”]

m3

யூரோப்பின் தொடர்ந்த சரிவு பற்றி அங்கலாய்க்கும் ஜெர்மன் இடதுசாரிகள் என்ன முயன்று கொண்டிருக்கிறார்கள்?
ஐரோப்பாவின் நாடுகளையும் ஐரோப்பிய ஒன்றிய மனநிலையையும் ஊடகங்கள் பிரதிபலிக்க வேண்டும் என்று கருதுகிறார் ஹேபர்மாஸ் (Jürgen Habermas). இவர்கள் இப்படிப் பகற்கனவு கண்டு கொண்டிருக்கையில் இஸ்லாமியத் தீவிர வாதம் (இவர்களின் அத்யந்த தோழமைக் கருத்தியலாயிற்றே அது) துருக்கியிலும், மேற்காசியாவில் கணிசமான பகுதிகளிலும் பெரும் நிலப்பரப்பை ஆக்கிரமித்துக் கொண்டு வருகிறது. இன்னும் இஸ்லாமியத் தீவிரவாதத்தை உலகப் பயங்கரம் என்று அறிவிக்கத் துணிவில்லாதவர்கள் யூரோப்பிய இடது சாரியினர். யார் அறிவிக்கிறார்கள் என்று பார்த்தால், அந்தந்த யூரோப்பிய நாடுகளில் இனவெறியும்,, யூரோப்பிய அடையாள மைய நோக்கும், கிருஸ்தவத் தீவிர வாதமும் முனைப்பாகக் கொண்ட வலது சாரிக் கட்சிகளோ அல்லது அவற்றையும் விடத் தீவிரமான ஃபாசிஸ்டுகளோதான். இந்தியாவிலோ அதே இனவெறி, அடையாள அரசியல், கிருஸ்தவத் தீவிர வாதம் ஆகியன விசித்திரமான முறையில் இடது சாரிகளோடு கை கோர்த்து இந்தியாவை உடைக்க முயன்று கொண்டிருக்கின்றன. மனித புத்தியில் என்னென்ன வக்கிரங்கள் தோன்றும் என்பதை யாரே அறிவார்?
ஏனெனில் இந்துக்களையும், இந்து சமுதாயத்தையும் ஒழிப்பதுதான் இவர்களின் முதல் நோக்கம். அதனால் நாளையப் பெரும் எதிரிகள் இன்றைய இந்தியாவில் உடன்போகும் விசித்திரத் துணைவர்கள்.

http://www.eurozine.com/articles/2014-11-21-fredriksson-en.html
[/stextbox]


[stextbox id=”info” caption=”ஐரோப்பிய அடிப்படைவாத அரசியலும் ரஷ்யப் பணமும்”]

முன்பு சீனா எப்படி ரஷ்யாவுக்கு நிதி உதவி அளித்து ரஷ்யாவின் ராணுவத்தின் தளவாட மேம்படுத்தலை ஊக்குவிக்கிறது என்று ஒரு செய்தி அளித்திருந்தோம். இங்கே ரஷ்யா எப்படி ஃப்ரெஞ்சு வலது சாரி, இனவெறிக் கட்சிக்கு நிதி உதவி அளிக்கிறது என்பது பற்றிய கட்டுரை. அது ரஷ்யாவின் ராணுவத்திற்கு ஃப்ரெஞ்சு கப்பல்களை அளிப்பதிலிருந்து ஃப்ரான்ஸ் பின்வாங்க முயல்வதைத் தடுப்பதற்காக ரஷ்யா மேற்கொள்ளும் முயற்சி என்று கட்டுரை விளக்குகிறது. அது மட்டுமல்ல, யூரோப்பில் எங்கும் தீவிர வலதுசாரி, இனவெறிக் கட்சிகளுக்கு ரஷ்யாவின் நிதி உதவி மறைமுகமாகக் கொடுக்கப்படுகிறது என்றும் சொல்கிறது.
ஒரு சிறு ஆறுதல் இதிலெல்லாம். முன்பு மூன்றாம் உலகத்தின், முன்னாள் காலனிய நாடுகளில், ஜனநாயகம் வளராமல், அந்நாடுகள் முன்னேறி விடாமல் தடுக்க என்னெவெல்லாம் சதித் திட்டம் தீட்ட முடியுமோ, என்னவெல்லாம் முட்டுக் கட்டை போட முடியுமோ அதையெல்லாம் யூரோப்பிய நாடுகள் செய்தன. கனடாவில் சீக்கியத் தீவிரவாதிகள் நிரந்தரமாகப் பாதுகாப்போடு வாழ்ந்ததோடு, அங்கிருந்து விமானங்களில் குண்டு வைப்பது, பஞ்சாபில் இருந்த பல ஆள் கடத்தல்கள், கொலைகள், ஆயுதக் கடத்தல்கள் ஆகியனவற்றுக்கு நிதி உதவி செய்து கொண்டிருப்பது தெரிந்தும் கனடிய அரசு கண்டு கொள்ளாமல் விட்டிருந்ததாக அன்று செய்திகள் வெளி வந்தன. இந்திய அரசு வழக்கம்போல கையாலாகாத அரசாகவே அன்றும் இருந்தது.
பின்னாளில் லண்டனைத் தம் தலைமை அலுவலகமாகக் கொண்டு நாகாலாந்து பிரிவினை வாதிகளும், மிஜோ பிரிவினை வாதிகளும், காஷ்மீர், பஞ்சாப் பிரிவினை வாதிகளும், தமிழ் கொரில்லாக்களும் சுதந்திரமாக இயங்கினர். இந்தியாவை உடைக்க என்னவெல்லாம் தம்மால் செய்ய முடியுமோ அதையெல்லாம் கருத்து சுதந்திரம் கொடுக்கிறோம் என்ற பம்மாத்து அரசியல் வாதத்தின் கீழ் பிரிட்டன் செய்தது. இன்று? பலநாட்டு முஸ்லிம் குடியேறிகளை எப்படி எல்லாம் கடும் சட்டத்தின் கீழ் கைது செய்து பயங்கரவாதத் தடுப்பு என்ற பெயரில் நாடு விட்டுக் கடத்தலாம் என்று பார்க்கிறது. தனக்கென்று வந்தால்தான் தெரியும் முடக்குவாதமும், வலிப்பு நோயும் எத்தனை கொடியவை என்பது. பிரிட்டன், ஃப்ரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம் என்று பல யூரோப்பிய நாடுகள் இன்று அந்தத் திருகுவலியைத் தாள முடியாமல் இனவெறிக் கட்சிகளுக்கு இடம் கொடுக்கத் துவங்கியுள்ளன.
ஆனால் இந்தியாவில் இந்துக்கள் மட்டும்? முழு செகுலரியத்தோடு எத்தனை பயங்கரத் தாக்குதல்கள் இருந்தாலும் பலபண்பாட்டிய ஜனநாயக செகுலரிய முற்போக்கு அரசு ஒன்றைத்தான் வைத்திருக்க வேண்டும். இந்து பண்பாடு என்று சொன்னாலே அது ஃபாசிசம், சிறுபான்மையினரை அச்சுறுத்தும் அடக்குமுறை அரசு. இது யூரோப்பிய இரட்டை நாக்குத் திருகுதாளம் மட்டுமல்ல, இந்தியாவின் ‘செகுலரிய’ வியாதிகளின் இரட்டை நாக்குத் திருகுதாளமும் இதேதான். இவை என்ன சுதந்திர சிந்தனையாளர்கள் கொண்டவையா? இல்லை ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ் ஒலித்தட்டுகள்தாமே?

http://www.slate.com/blogs/the_world_/2014/11/26/from_russia_with_cash.html
[/stextbox]


[stextbox id=”info” caption=”அக்மார்க் அறிவியலும் கர்ண பரம்பரை கதைகளும்”]

’உன் பாட்டன் வாயில் வந்ததையெல்லாம் வைத்து வரலாறு சமைக்காதே. அதெல்லாம் எங்களுக்கு வேண்டாம். தரவு! அறிவியல் ஆய்வு!! இதெல்லாம் வேண்டுமய்யா!!!” என்று மேற்குலகம் பிற நாடுகளின் வரலாற்றையும் பண்பாட்டையும் இகழத் துவங்கி, பின் sub-altern என்று பேசத் துவங்கி இன்று ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் முன் கொண்டு செல்ல வேண்டிய திசை குறித்து ஏகக் குழப்பம். இதில் சிலர் கர்ண பரம்பரை கதைகளையெல்லாம் அக்மார்க அறிவியல் ஆய்வாக முன்வைக்கிறார்கள் என்று சொல்கிறது இந்தக் கட்டுரை.

http://sss.sagepub.com/content/44/4/638.full
[/stextbox]


[stextbox id=”info” caption=”மொழியல் ஆய்வுகள்”]

m4

தன் இறுக்கமான நம்பிக்கைகளை பொது மக்கள் முன் வைத்துக் மக்களை இம்சிப்பது ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற அமைப்புகள் மட்டுமல்ல, சமகால அறிவியலும் தான் என்று இந்த கட்டுரை சொல்கிறது. மொழி உருவாக/வாழ சொற்கள் மட்டும் போதுமா? போதும் என்பது சில பெரும் மொழியியல் விஞ்ஞானிகளின் முடிவு. ஆனால் அதை உபயோகிக்கும் மக்கள் குழுவை, அவர்களின் உணர்வுகள் அந்த மொழியை பாதிக்கும் முறையை இவர்கள் கணக்கிலேயே எடுப்பதில்லை என்று சொல்கிறது இந்த கட்டுரை. எவ்வளவு தான் திட்டவட்டமாக ஒரு மொழியை நீங்கள் வரையறை செய்தாலும், அந்த மொழியின் ஆகிருதி வளரவே செய்யும். ஏனெனில் மக்கள் தங்கள் வழக்காடலில் புதிய விஷயங்களை கொண்டு வருவர். அதனால் மக்கள் பேசும் மொழியை வெறும் கணிணியின் மொழியாக கற்பிதம் செய்வது அறிவியல் மக்களுக்கு செய்யும் துரோகம் என்கிறார்.

http://www.babelsdawn.com/babels_dawn/2014/11/grumble-mumble-rumble.html
[/stextbox]


[stextbox id=”info” caption=”மனிதவியமும் மேற்கத்திய அரசியலும்”]

இந்தக் கட்டுரையாளர் ஹ்யூமனிஸம் என்ற ஒரு பொய்க்கால் குதிரையை வைத்துக் கொண்டு நாட்டியமாடுகிறார். சொல் நாட்டியம். இந்த மனிதவியம் மேற்கின் பல நூற்றாண்டு கிரேக்க வைக்கோல் குதிரை. உள்ளே கிருஸ்தவம் ஒளிந்து கொண்டு உலக மக்களின் பல பண்பாடுகளை ஏளனம் செய்வதற்கும், அழிப்பதற்கும் ஒரு முகப்புத்தகமாகச் செயல்பட்டது. இன்று டிஜிடல் முகப்புத்தகமும், தறுதலை வலைவெளிக் கோமாளிகளும், புர்ச்சி அழிப்பாளர்களும் உலகை எல்லாம் அழித்தது போதாது என்று சொந்த வீட்டிற்கே தீப்பந்தம் கொண்டு எரியூட்டுகிறார்கள். அதைக் கண்டு வயிற்றிலடித்துக் கொண்டு கதறுகிறார் இவர்.
காலனியத்தின் கைத்தடியாக மனிதவியம் இயங்கி, பல பண்பாடுகளைச் சீரழிக்கவும், இனவெறியை அங்கு புகுத்தவும், அவர்களை ஆழமாக அவமதித்ததோடு, பன்னெடுங்காலமாக கீழ்த்தர மனிதர் என்ற கருத்துப் பிரச்சாரம் செய்யவும் மனிதவியம் பயன்பட்டது. இது மூலஸ்தானத்திலேயே அழிந்து வருவது குறித்த செய்தி இன்னமும் கிட்டாத அரைவேக்காடு அறிவு சீவிகள் இந்தியாவிலும் வேறு நிலப்பரப்புகளிலும் இன்னும் பண்டை நாகரீகங்களை அழிக்க கிருஸ்தவத்தின் ஆயுதமாகப் பயன்பட்டு வருவதை கௌரவமாகவே நினைக்கிறார்கள், அப்படியே செயல்பட்டுக் கொண்டும் வருகிறார்கள். இவரோ தகவல் வெளியே பிரச்சாரமாகவும், போலி கணக்கு மய ஆய்வுகளால் நிரப்பப்பட்டதாகவும், வெறும் பயன்பாட்டு முக்கியத்துவம் மட்டும் கருதி எல்லாமே எடை போடப்படுவதாகவும் புலம்புகிறார். ஒரு சில நூறாண்டுகள் முன்பு மக்காலே, ஆடம் ஸ்மித், மில், மார்க் ஸ் என்ற ஒரு பட்டாளம் மனிதவியத்தின் பல முகங்கள் வழியே இந்து நாகரீகத்தை எப்படி எல்லாம் அவதூறு செய்தார்கள் இவர்கள் என்பதை எப்படி இவருக்கு நினைவுபடுத்துவது?

http://www.nytimes.com/2015/01/18/books/review/among-the-disrupted.html?_r=0
[/stextbox]


[stextbox id=”info” caption=”ட்ரொஜன் குதிரை”]

இதோ ஒரு கட்டுரை கிருஸ்தவம் எப்படி எல்லாம் ட்ரொஜன் குதிரை யுத்தத்தைத் தொடர்கிறது என்று நிரூபிக்க.

http://indiafacts.co.in/christian-inculturation-tamil-nadu-blasphemes-thirukkural/#.VK4Dw9KUci0
[/stextbox]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.