பை பை MSD

எம். எஸ். தோனி டெஸ்ட் பந்தயங்களிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். இதில் ஆச்சரியப்பட பல காரணங்கள் உண்டு. ஒருதொடரின் மத்தியில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். தன் கடைசி ஆட்டத்துக்கு பின்னால் நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் அவர் இதைப் பற்றி மூச்சு கூடவிடவில்லை. மைதானத்தைச் சுற்றிய சம்பிரதாயமான ஓட்டமோ (lap of honour), சொற்பொழிவோ, கண்ணீர் மல்கிய விடைபெறுதலோ இருக்கவில்லை. செய்தியாளர்களுக்கென விடுவிக்கப்பட்ட ஒரு அறிவிப்பு மட்டுமே. இந்த முடிவின் தருணம் மற்றும் காரணங்களைப்பற்றி நாம் விவாதிக்கலாம். அவரது உடல் சோர்ந்துவிட்டதா அல்லது அவரது மனதுக்குப் போதும் என்றாகி விட்டதா? எப்படியிருந்தாலும் நமக்கு அது தெரியப் போவதில்லை. தோனி விரிவான விளக்கங்கள் கொடுப்பவரல்ல. அதற்கான அவசியம் அவருக்கு எப்போதும் இருந்ததில்லை.

MS-Dhoni-IPL-Cricket_India_Doni_Mahendra_Singh

சில எண்ணங்கள்

List_Styles_ol_li_bulletதோனியின் டெஸ்ட் வாழ்க்கை ஒன்பது வருடங்கள் நீடித்தது. டிராவிட், லக்‌ஷ்மண் இவர்களுடன்ஒப்பிடுகையில் இது சற்றே விசித்திரமாகத் தோன்றலாம். இவர்கள் இருவரும் டெஸ்ட் பந்தயங்களில் ஒன்றரை தசாப்தங்கள் வரை நீடித்தனர். கும்ப்ளே 18 வருடங்களும், கங்குலி 12 வருடங்களும் டெஸ்ட் பந்தயங்களில்விளையாடினர். (டெண்டூல்கர் மிகக் குறைந்த வயதிலேயே விளையாட ஆரம்பித்ததினால் அவரை ஒரு விலக்காகக்கருத வேண்டும்). இருப்பினும் மேற்சொன்னவர்களில் எவருக்குமே தோனி சமாளித்த அளவிலான நெருக்கடியானஆட்ட அட்டவணை இருக்கவில்லை. டெஸ்ட் பந்தயங்கள், சர்வதேச ஒருநாள் பந்தயங்கள், T20 விளையாட்டுக்கள், ஐபி எல் மற்றும் சேம்பியன் லீக் பந்தயங்கள் என அவரது ஓடு பொறி (tread mill) நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தது.தோனியும் எளிதில் தளர்பவரல்ல. அவரது வெற்றிகளையும், ஓட்ட எண்ணிக்கைகளையும், சராசரி ரன்களையும் மீறிஅவர் இத்தகைய கடுமையான வேலைப்பளுவை சமாளித்ததையே ஒரு பெரிய சாதனையாகக் கருத வேண்டும்.
List_Styles_ol_li_bulletதோனியின் டெஸ்ட் சகாப்தம் – அதனளவிலேயே குறிப்பிடத்தக்கதாயினும் – ஒருநாள் பந்தயங்கள் மற்றும் T20ஆட்டங்களில் அவருடைய அபார சாதனைகளின் பின்புலத்தில் நடந்த ஒன்று. இந்தியாவுக்கு மிக அதிகமான வெற்றிகளைப் பெற்ற அணித்தலைவர் என்றபோதிலும், ஒருநாள் பந்தயங்களிலும் T20 விளையாட்டுகளிலும் இவர் விளையாடிய அபாரமான இன்னிங்ஸ்கள்தான் இவரது சூப்பர்ஸ்டார் அந்தஸ்துக்கான அடித்தளங்கள். ராகுல் டிராவிட் பரிந்துரைத்துள்ளதுபோல், டெஸ்ட்களிலிருந்து ஓய்வெடுத்துள்ளது தோனியின் ஒருநாள் பந்தய / T20 பந்தய பங்கெடுப்பை நீட்டிக்க உதவலாம். அது கிரிக்கெட்டின் குறுகிய வடிவத்தின் மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராக அவர் நினைவில் நிற்க வழிவகுக்கலாம்.
List_Styles_ol_li_bulletஆட்டவீரர்களின் ஓய்வெடுப்பு ரசிகர்கள் மனதில் விசித்திரமான விளைவுகளை உண்டாக்கும். மெல்பர்னில்முதல் இன்னிங்ஸில் தோனியின் பேட்டிங்கை நீங்கள் சபித்துக் கொண்டிருந்திருக்கக் கூடும் – ‘இவர் ஏன் இப்படி தன்னைவருத்திக் கொள்கிறார்?’ என ஒரு நண்பர் மின்னஞ்சலில் கேட்கிறார் – சில நிமிடங்களில், அவர் விலகுகிறேன் என்றதும் உங்களுக்கு இதயம் உணர்ச்சி வசப்பட்டு குழைகிறது. அவர் ஓய்வெடுக்கையில்தான் இங்கு, இன்று என்பவற்றை மட்டுமே பார்க்காமல் அவரது முழு ஆட்டவாழ்க்கையும் நம் கண்ணில் படுகிறது – அவரது பங்களிப்பு, அவர் எத்தனை சிறந்தஆட்டக்காரர், அவரது ஊக்கத்தால் விளைந்த தருணங்கள், அணியை முதலாம் இடத்துக்கு அவர் எடுத்துச் சென்ற சமயங்கள், அவர் தவறு செய்யவே மாட்டார் என ரசிகர்கள் நம்பிய (டொமினிக்கா மாட்சுக்கு முந்தைய) காலங்கள்,ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மாட்சுகளில் மோஹாலியில் வெற்றிக்கான அதிரடிகள், நாக்பூரில் பான்டிங்கோஷ்டியை 8-1 என்ற கள அமைப்பில் மூச்சு திணறச்செய்தது, பெங்களுரில் புஜாராவை பேட்டிங் அணிவகுப்பில்3வது இடத்துக்கு உயர்த்தியது, டர்பனில் ஸ்ரீசாந்துக்கு ஆதரவாய் தெம்பளித்தது, கேப் டவுனில் அசாத்தியமாய் ஆடிய ஆட்டம், நியூஜீலாந்துக்கு எதிரான வெற்றி, இன்னும் ​சொல்லிக் கொண்டே போகலாம்.
List_Styles_ol_li_bulletடெஸ்ட் காப்டன் என்ற வகையில் தோனியின் வெற்றிகளையும் (குறைபாடுகளையும்) சூழலில் பொருத்தி நோக்கவேண்டும்: இந்திய அணியின் தலைமைப் பதவிக்கு முன்பாக அவர் எந்த அணியின் தலைவராகவும்இருந்ததில்லை. இந்திய அணியின் தலைவராவது பற்றி கனவில்கூட நினைத்ததில்லை என அவரே சொல்லியிருக்கிறார். மேலும் அவர் ஒரு விக்கெட் கீப்பர். விக்கெட் கீப்பர்கள் காப்டனாவதற்கு சரித்திரம் வெகுவாய் சாதகமாய் இருந்ததில்லை என்பதினால் அவரது பாதை எளிதாய் இருக்க வாய்ப்பிருக்கவில்லை. இவற்றுக்கெல்லாம் மேலாய், தோனி அணித்தலைமைப் பதவியை ஏற்றபோது இந்திய அணி கடினமான மாறுதல்களுக்கு ஆட்பட்டிருந்தது. கும்ப்ளேவின் ஓய்வு, ஜாஹீரின் ஆட்டத்தில் சரிவு, ஹர்பஜனின் தேக்கம் என்ற சூழலில், அணியில்இருந்த பந்து வீச்சாளர்கள். தாய்நாட்டுக்கு வெளியேயான பந்தயங்களில் தம் செயல்பாடு, சீரான உடற்கட்டு போன்ற தளங்களில் இன்னும் திண்டாட்ட நிலையிலேயே இருந்தனர்.
List_Styles_ol_li_bulletதோனியின் பேட்டிங்கும் சுழலில் பொருத்தி மதிப்பிடவேண்டிய ஒன்று: பயிற்சியின் பாற்படாத அவரது சொந்த ஆட்ட உத்திகளை டெஸ்ட் ஆட்டத்தின் தேவைகளுக்கேற்ப அவர் மாற்றியமைத்துக் கொள்ள வேண்டியிருந்தது (குறிப்பாய் ஸீமிங் பந்துகள் குதித்தெழும்பும் பிட்ச்களில்). அணியில் சேர்ந்த ஆரம்ப நாட்களில், பயிற்சியாளர்கள்அவரது ஆட்டத்தின் அணுகுமுறையை மாற்றிக்கொள்ளும்படி கூறியபடியே இருந்தனர். உள்நாட்டு பந்தயங்களில்அவரது மூன்றாம் சீஸனில், 2001-2002ல், முதல்வகுப்பு ஆட்டங்களில் ஒரே ஒரு ஆட்டத்தில் 25 ரன்களுக்குமேற்பட்டும், நான்கு ஒருநாள் ஆட்டங்களுக்குப் பின் 45 ரன்களும் இருந்தன. “அதிகமாய் காட்டடி வேண்டாம்”, “ஆட்டஉத்தியை மாற்றிக்கொள்”, ”ஸ்பின்னர்களின் பந்துகளை உயர்த்தி அடிக்காதே” போன்ற அறிவுரைகள் அவரைத் தொடர்ந்து தாக்கின. அவர் வழியில் தொடர்ந்து ஆடினால் ஆட்டத்தின் நீண்ட வடிவத்தில் அவர் பெயரெடுக்க இயலாது என்று பலரும் அவரிடம் சொன்னார்கள். ஆனால் தோனி உறுதிகுலையவில்லை.
List_Styles_ol_li_bullet2004ல், இங்கிலாந்து A அணிக்கெதிரான அவரது முதல் துலீப் கோப்பை ஆட்டத்தில், தேசீய அளவில் அவரதுமுதல் பெரிய முதல் வகுப்பு ஆட்டத்தில், ஒரு இரட்டை வேக (two paced) பரப்பில் ஆட்டத்தை துவக்க அனுப்பப்பட்டார். அவரது மண்டலத்திலேயே அவருக்குப் போட்டி இருந்தது. மோசமான ஆட்டம் அவரது வாய்ப்புகளை இழக்கச் செய்திருக்கும். முதல் இன்னிங்ஸில் அவரது மொத்த ஸ்கோரான 52ல் 48 ரன்கள் 4களாய்அடித்தவை. இரண்டாவது இன்னிங்ஸில் 29 பந்துகளை எதிர்கொண்டு 24 ரன்கள் அடித்திருந்தார். சில நாட்களுக்குப்பின் பந்தயத்தின் இறுதி ஆட்டத்தில் தோனி ஆட்டத்தைத் துவங்கினார். முதல் நான்கு ஸ்கோர்களும் பவுண்டரிகள். 26ரன்களில் 21 ரன்கள் எடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸில் வெற்றிக்கு 409 ரன்கள் தேவை என்ற கட்டத்தில் களத்தில் இறங்கினார், 47 பந்துகளில் 60 ரன்கள் அடித்து ஆட்டத்தில் அனல் பறக்க வைத்தார். இது 1970கள் அல்லது1980 களாக இருந்தால், பாட்டிங் பயிற்சியாளர்கள் தோனியை வேறே ஏதாவது விளையாட்டுப் பக்கம் போ எனஅனுப்பியிருப்பார்கள் என அவரது ஆட்டத்தைக் கண்ட ஒரு அனுபவமுள்ள பத்திரிகையாளர் சொன்னார். மற்றநிபுணர்கள் அவ்வளவு பரிவு கூட காட்டவில்லை. அவரது வெறித்தனமான பாணி ஆட்டத்தின் உயர் நிலைகளில் பயனளிக்காது என்று உறுதியாய் நம்பினர். MSதோனி டெஸ்ட்களில் 4876 ரன்கள் எடுத்தார். இவற்றில் 6 செஞ்சுரிகள், 33ஐம்பதுகள். அவரது 224, விக்கெட்கீப்பர்களிடையே மூன்றாவது சிறந்த ஸ்கோர்.
List_Styles_ol_li_bulletஎனக்கு மிகவும் விருப்பமான தோனி இன்னிங்ஸ் 2006ல் ஃபைஸ்லாபாத்தில் அவர் ஷோயப் அக்தரை எதிர்கொண்டது. வெகு வேகப்பந்து வீச்சை எதிர்கொள்வதில்அவரது முதல் அனுபவம் அதுதான். மணிக்கு 146லிருந்து152 கிமீ அளவில் ஷோயப்பின் பந்து அலறிக்கொண்டு வர, பிட்ச் தட்டையான போதிலும், தீவிர அழுத்தம்சூழ்ந்திருந்தது. ஃபாலோ ஆனைத் தவிர்க்க நிறைய ரன்கள் தேவையாய் இருந்தன. கணிக்க முடியாதபடி மாறுபட்ட துள்ளல்களைத் தரும் பிட்ச், அளவு குறைந்த வேகப் பந்துகளிலிருந்து தப்ப தலையைக் குனிந்து கொள்வதை கடினமாக்கிக் கொண்டிருந்தது. அந்த, அளவு குறைந்த வேகப் பந்துகளைத் தவிர்க்கவும் இயலவில்லை. அவரது இரண்டாவது பந்தில் ஒரு பவுண்டரி அடித்தபின், அடுத்த ஓவரில்  தகதகவென்று பற்றிக்கொண்டு வேகமாய் விழுந்த பந்துகளைக எதிர்மூலையிலிருந்து கவனித்தார். பின்னர் இந்த இன்னிங்ஸைப் பற்றி அவர் சொன்னது: “இரண்டேதேர்வுகள்தான் இருந்தன. நின்ற இடத்தில் பந்துகளைத் தடுத்து ஆடியிருக்கலாம் அல்லது பின்வாங்கி என்ஸ்ட்ரோக்குகளைஅடித்திருக்கலாம். தடுத்து ஆடுவதை விட ஸ்ட்ரோக் அடிப்பதில் நான் திறமைசாலி. அதனால் எனது தேர்வு எளிதாயிற்று.” அடுத்த ஓவரின் முதல் பந்து அளவு குறைந்து அதி வேகமாய் தோனியின்நெற்றிப் பொட்டுக்கு நேரே வந்தது. ஆனால் அதை அவர் எதிர்பார்த்தது போல் பாட் தயாராக இருந்து, விவ் ரிச்சர்டின் பாணியில் அதை விளாசி ஸ்கொயர் லெக்கிற்கு பறக்கடித்தது. அந்தப் போட்டியின் திசையையே மாற்றிய ஷாட் அது. ஷோயப் இன்னும் அளவு குறைவாக, இன்னும் வேகமாக வீச முயன்று தன் கட்டுப்பாட்டை இழந்தார். தோனியின் தன்னம்பிக்கை அதிகரிக்க, அவர் பந்து வீச்சாளர்களை சிதறடித்து இந்தியாவை வெற்றிக்கு எடுத்துச் சென்றார்.
List_Styles_ol_li_bulletஅடுத்தபடியாய் அவரது விக்கெட்கீப்பிங். 2003-2004ல் தேசிய அணித் தேர்வாளர்களில் சிலர் தோனி கோல்கீப்பராக இருக்க வேண்டியவர் தவறி விக்கெட் கீப்பராகி விட்டார் என்றும், அவர் தடுப்பவர், ஸ்டம்புகளுக்குப் பின்னே இயல்பாய் இழைந்து செயல்படும் திறன் அவருக்கு இல்லை என்றும் கவலைப்பட்டனர். 2005ல் தோனி ஸ்ரீலங்காவுக்கு எதிரான மூன்று மாட்ச் பந்தயத்தில் தனது விக்கட் கீபிங்குடன்  போராடினார். பல நிபுணர்களும் பார்த்திவ் படேல் அல்லது தினேஷ் கார்த்திக் இதை மேம்படச் செய்திருப்பார் என நம்பினர். முதல் வகுப்புஆட்டங்களில் சுமாரான விக்கெட் கீப்பிங்கால் சமாளிக்கலாம் டெஸ்ட் ஆட்டத்தில் மாட்டிக் கொண்டு விடுவார் என்றனர். இறுதியில் அவர் சாதித்தது 256 காட்சுகளும் 38 ஸ்டம்பிங்குகளும்
List_Styles_ol_li_bulletஅவற்றை எல்லாம் விட்டுவிடுவோம். தோனிக்கு குறையற்ற பேட்டிங் உத்தி இருந்தது என வைத்துக்கொள்வோம். அவர் பல வயது நிலைகளில் அணித் தலைவராய் தன் தகுதியை நிரூபித்திருந்ததாக வைத்துக்கொள்வோம். அப்போதும் பீஹார் அல்லது ஜார்கந்தின் எதோ ஒரு கோடியிலிருந்து வந்த ஒரு ஆட்டக்காரர் 90டெஸ்டுகள் விளையாடும் சாத்தியம் எத்தனை இருந்திருக்கும்? சபா கரீமைக் கேளுங்கள். ஹரி கித்வானியைக்கேளுங்கள். மிஹிர் திவாகரைக் கேளுங்கள். அவர்களில் ஒவ்வொருவரும் கவனிக்கப்படாத திறமை பற்றி, ஒருமோசமான இன்னிங்ஸ்சுக்குப் பின் விலக்கப்பட்ட ஆட்டக்காரர்களைப் பற்றி, கொடுக்கப்படாத வாய்ப்புக்களைப்பற்றி கதைகள் சொல்லுவார்கள்.
List_Styles_ol_li_bulletதோனி தனது முதல் வகுப்புத் துவக்கத்தை 1999-2000ல் ஆரம்பித்தார். தியோதர் கோப்பையில் 2004 வரை அவர்பெரிதாக முத்திரை பதிக்கவில்லை. 2005 வரை துலீப் கோப்பையில் விளையாடவில்லை. 6 வருடங்கள் வரை, என்றாவது கவனிக்கப்படுவோம் என்ற நம்பிக்கையில் ஆடிக்கொண்டு, ஸ்கோர்கார்டுகளில் வெறும் பெயர்களாய், அங்கும் இங்கும் ரயில்களில் பயணித்து, விளையாடி, வியர்வை சிந்தி, பயிற்சி செய்யும் பல்லாயிரக்கணக்கான கிரிக்கெட் ஆட்டக்காரர்களில் ஒருவராக இருந்தார். அணியோ அல்லது மாகாணமோ மாறிச் சென்று வாய்ப்புகள் தேட நினைக்கவில்லை. இது பற்றி, சிற்றூர்களில் கிரிக்கெட் ஆடும் ஒரு மொத்தத் தலைமுறை இளைஞர்களும் ஊக்கம் கொள்ளுமாறு அவர் பின்னர் சொன்னது : “என்னிடம் போதிய திறமை இருந்தால் வாய்ப்புக் கிடைக்கும் என்று எனக்குத் தெரியும்”
இதுதான் ஆட்டத்திற்கும் , நாட்டின் இளைஞர்களின் நம்பிக்கைக்கும் அவர் விட்டுச் செல்லும் மகத்தான கொடை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.