அமைதிக்கான நோபல் பரிசு

மெரிக்காவில் நிறவெறிக்கு எதிராகவும் அரச வன்முறைக்கு எதிராக வன்முறையற்ற வகையில் பாடுபட்டதற்காகவும் 1964 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு மார்ட்டின் லூதர் கிங்குக்கு வழங்கப்பட்டது. அந்தப் பேச்சு இங்கே:

ப்பிரிக்க-அமெரிக்க மக்களுக்கு அமெரிக்காவில் வாக்குரிமைகள் இருந்தும், அவர்களால் வாக்களிக்க முடியாத நிலை அமெரிக்காவில் நிலவியது. அந்த இழிநிலையை மாற்றுவதற்காக செல்மா என்ற இடத்திலிருந்து மாண்ட்கோமரி என்ற இடம் வரை சுமார் ஐம்பது மைல் தொலைவிற்கு ஊர்வலம் நடத்த கருப்பின மக்கள் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், காவல்துறையினர் தடியடி நடத்தியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் இந்த போராட்டத்தை அப்போது முறியடித்தனர். இதனைத் தொடர்ந்து, மீண்டும் அதே பகுதியில் மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் அதே ஆண்டு மற்றொரு பிரும்மாண்ட ஊர்வலம் நடத்தப்பட்டது. அந்த நிகழ்வையும், அதனைத்தொடர்ந்து, அமெரிக்க அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவுகளையும் ‘செல்மா’ எனத் திரைப்படமாக்கியுள்ளனர். அதன் முன்னோட்டம்: