ஆண்,பெண்,மூன்றாம் பாலினம் பற்றிய கட்டுரை மனதை நெகிழ்த்தியது.
எதை நோக்கிச் செல்கிறோம் என்ற நினைவாவது உள்ளதா? மனித உணர்வுகளும், உறவுகளும் மாறி – வெறும் பணம் பண்ணும் ஜடங்கள் மட்டுமே மிஞ்சும்.
– மோனிகா மாறன்
சோழகக்கொண்டலின் கவிதை எனக்குப் பிடித்திருக்கிறது.
பறவைக்கும் பறத்தலுக்குமிடையில்கூட நீர் ஊறுகிறது.
ஊழிநீர் போல – அழுத்தமான வரிகள. வாழ்த்துக்கள.
– லாவண்யா
வணக்கம், பண்டிகை வாழ்த்துக்கள். என் சிறு கட்டுரையும் மற்றும் அனைவரின் படைப்பும் நல்ல முறையில் பதிப்பிக்கப்பட்டிருந்தது, மிக்க நன்றி.
இதுவரை படித்த்த நான்கு கட்டுரையும் நன்றாக இருந்தது. ஜெயகாந்தன் பற்றிய கட்டுரை அருமை. சிந்தனைச் சோதனைகள் கட்டுரையும் நன்றாக இருந்தது.
சில இதழ்களுக்கு முன்பு பாஸ்கர் லக்ஷ்மன் அவர்கள் ராமானுஜனின் கணிதத்தைப் பற்றி (partitions) எழுதிஇருந்தார்கள். அதுவும் நன்றாக இருந்தது. இவ்வாறான கணிதத்த்த்தைப் பற்றிய மேலும் நல்ல கட்டுரைகள் வந்தால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என எண்ணுகிறேன்.
கணித, அறிவியல் கட்டுரைகளில் கலைச் சொற்களின் ஆங்கில மூலம் அடைப்பான்களுக்குள் கொடுக்கப்பட்டால் உதவியாக இருக்கும். உதாரணம்: சார்பு (function).
வாழ்த்துக்கள். நன்றி.
– கார்த்தி
ஒரு தொழிலதிபர் இல்லத் திருமணத்தில் யாமினி அவர்களது நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சி முடிந்தவுடன் திடீரென்று என்னை நன்றி நவிலக் கேட்டனர். எனக்கு நாட்டியம் பற்றி அறிவு ஏதுமில்லை. அன்று காலை ஒரு வகுப்பில் சரோஜினி நாயுடுவின் Palanquin-bearers என்ற செய்யுளையும், வெர்ட்ஸ்வொர்தின் Daffodils செய்யுளையும் நடத்தியிருந்தேன். அச்செய்யுட்களில் இருந்த அழகியல் சொற்களைப் பயன்படுத்தி என் உரையை முடித்தேன். யாமினியின் தந்தை பேரா.கிருஷ்ணமூர்தி என்னை ஆரத் தழுவி தன் மகளது நடன நிகழ்ச்சிகளில் ஆற்றப் பட்ட நன்றியுரைகளில் ஆகச் சிறந்தது என்னுடையது என்று பாராட்டினார். அவர் ஒரு ஆங்கிலப் பேராசிரியர்.
– ச.சீ.இரா