பரபரப்பான ஊழியர்: கிவா ரோபோ

அமேசான்.காம்-இல் அதிகம் உழைப்பவர் இவர்தான். இருபத்து நான்கு மணி நேரமும் ஓய்வின்றி சுழல்கிறார். இண்டு இடுக்கெல்லாம் நுழைகிறார். கேட்டதைத் தருகிறார். கீழே போடுவதில்லை. உடம்பு சரியில்லையென்று படுத்துக் கொள்வதில்லை. தொழிற்சங்கம் துவங்கி போராடமாட்டார். ஒரு வினாடிக்கு 426 பொருள்களை விற்கும் அமேசானுக்கு உறுதுணையாக இயங்குகிறார்.