மகரந்தம்

[stextbox id=”info” caption=”அடக்கமாக உட்காருங்கள் ஆண்களே!”]

21MANSPREADING1-articleLarge-v3

இப்போது ஆண்கள் கால்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு உட்காரவும் என்று ஆக்கினைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இது எங்கே? நியுயார்க் சுரங்க ரயில்களில்.
முக்கியமாக வற்புறுத்துவது பெண்கள்தான் என்றாலும், பொது நிர்வாகம் இப்போது ஆண்களை வற்புறுத்தக் காரணம் ரயில்களில் கூட்டம் அதிகம் நெருக்கடி முற்றுகிறது, பல ஆண்கள் பிறரின் துன்பத்தைக் கருதாமல் தம் சௌகரியத்தை மட்டும் கருதி இரண்டு இடங்களை ஆக்கிரமித்து அமர்கிறார்கள் என்பன. சில ஆண்கள் என்ன சொன்னாலும் தம் வசதிதான் முக்கியம் என்று கருதுகிறார்கள் என்பதும் செய்தியில் சொல்லப்படுகிறது. ஆனால் சிலர் இதை ஆணவத்தின் வெளிப்பாடு என்று கருதுகிறார்கள். சில பெண்கள் இதை ஆண்கள் தம் மீது செலுத்தும் மறைமுக வன்முறை, எல்லை தாண்டல் என்றும் கருதுகிறார்களாம்.
http://www.nytimes.com/2014/12/21/nyregion/a-scourge-is-spreading-mtas-cure-dude-close-your-legs.html?hp&action=click&pgtype=Homepage&module=second-column-region®ion=top-news&WT.nav=top-news&_r=0
[/stextbox]
[stextbox id=”info” caption=”சூரியன் அஸ்தமித்துக்கொண்டிருக்கும் பிரிடிஷ் ராஜாங்கம்”]

A streetlight

சூரியன் மறையாத சாம்ராஜ்யம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என்று ஒரு நூறாண்டு முன்பு கூட இங்கிலிஷ்காரர்கள் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தனர். உலகெங்கும் பரவிய நிலப்பரப்பில் பிரிட்டிஷ் ஆதிக்கம் நிலவியது. ஒரு துக்கினியூண்டு நிலப்பரப்பில் வாழ்ந்த மக்கள் இப்படி உலகெங்கும் பரவி அத்தனை பெரும் நிலப்பரப்பில் இருந்த மக்களை ஆண்டது ஒரு சாதனைதான் – அத்தனை பொய்களும், சூதும், கொலைகளும், இனவெறியும், சுரண்டலும் செய்ததை நாம் மறக்க முடிந்தால், நிச்சயம் சாதனைதான். ஒருவாறாக, அத்தனை நிலப்பரப்பிலிருந்தும்  அந்த மக்கள் துரத்தப்பட்டு, விலக்கப்பட்டு,  இனி நம்மால் சமாளிக்க முடியாது, முதலுக்கே ஆபத்து வந்துவிடும் என்று பயந்து பின்வாங்கி என்று பற்பல விதங்களில் பிரிட்டிஷ் தீவுகளுக்கே திரும்பிச் சென்றனர். ஒரு சில நிலப்பரப்பிலிருந்து பின்வாங்கத் தேவை இல்லாமல் பிரிட்டனின் முன்னாள் குடிமக்கள், காலனியையே  வேறு நாடு என்று அறிவித்துத் தம்மை ‘விடுவித்து’க் கொண்டனர் (கனடா, ஆஸ்திரேலியா, நியுஸிலாந்து இத்தியாதி). அப்போதிலிருந்து படிப்படியாக க்ஷீணித்துக் கொண்டு வருகிறது பிரிட்டன். 1970களில் நேர்ந்த கணிசமான பொருளாதாரப் பின்னடைவுக்குப் பின்- இது தீவிரமாக ஒரு காரணம் முன்னாள் காலனிப் பிரஜைகளான அரபு மக்கள் தம் கனிவளங்களைக் கொடையாகக் கொடுப்பதை நிறுத்தி, சந்தைக்கேற்ற விலையைக் கேட்கத் துவங்கியதுதான் –  லண்டனைச் சுற்றிய பகுதிகளில் பிற நாடுகளிலிருந்து கணக்குக் காட்டாமல் கொணர்ந்து பதுக்கப்படும் பெரும் பொருள் வளம் லண்டனின் நிதி நிறுவனங்களில் ஒளிந்தது. அதற்கு பிரிட்டிஷ் அரசு வரிவிலக்கு அல்லது வரிச்சலுகைகள் கொடுத்து ஒரு போலியான பொருளாதார ஊக்குவிப்பைத் தன் நாட்டில் கொண்டு வந்தது.
இந்த நூற்றாண்டில் அந்த ஊக்குவித்தலுக்கும் ஒரு முடிவு வந்திருக்கிறது. கடந்த பத்தாண்டுகளின் இறுதியில் அமெரிக்கப் பொருளாதாரம் அடைந்த திடீர்ச் சரிவு பல யூரோப்பிய நாடுகளைக் கடுமையாகப் பாதித்ததோடு, பிரிட்டனையும் வெகுவாகப் பாதித்திருக்கிறது. இதை ஏதேதோ பொருளாதாரத் தகவல்களால் நாம் காட்டி விட முடியலாம். அவை சிக்கலான கட்டுரைகள், புள்ளி விவரங்கள் ஆகியனவற்றைக் கொடுத்துத்தான் நிறுவ முடியும் என்று ஒரு கோணத்தில் தோன்றும். ஆனால் சில நேரம் சில சிறு விஷயங்கள் ஒரு நாட்டின் பொருளாதார நலன் எப்படி இருக்கிறது என்பதற்குச் சுருக்கமான் சுட்டலாக அமையக் கூடியன. அப்படி ஒரு சிறு விஷயம் கீழே உள்ள ஒரு தகவலில் நமக்குக் கிட்டும்.  பிரிட்டன் என்று பொத்தாம் பொதுவாகச் சொன்னாலும், அந்தக் கூட்டரசில் முக்கியமானதும் பெரும்பங்கு வகிப்பதும் இங்கிலாந்துதான். இதர நிலப்பரப்புகள், ஸ்காட்லாந்து, வேல்ஸ் போன்றன.
இங்கிலாந்தில் இப்போது சூரியன் உதித்து அஸ்தமிக்கிறது என்பதோடு மட்டுமல்ல, அஸ்தமித்தபின் இங்கிலாந்தின் தெருக்கள், ஊர்களில் ஒளிரும் தெருவிளக்குகளும் இப்போது மங்கி, அணையும் நிலையில் இருக்கின்றன என்று இச்செய்தி அறிக்கை சொல்கிறது. வருமானம் அதிகம் இல்லாத நிலைக்கு வந்திருக்கிற பிரிட்டிஷ் அரசு, சமீபத்தில் தன் வருடாந்தர வரவுசெலவுக் கணக்கில் துண்டு விழுவதைத் தவிர்க்கவியலாமல், ஏற்கனவே கொண்டுள்ள கடன் பளுவையும் சமாளிக்க இயலாமல், தன் செலவினங்களைக் கடுமையாகக் குறைக்க முயல்வதாகப் பாவலா காட்டுகிறது.
கடந்த சில பத்தாண்டுகளாக, பண முதலைகளின் கைப்பொம்மையாகி விட்ட பிரிட்டிஷ் அரசு, இந்தத் துண்டு விழுந்த பட்ஜெட்டுக்கு ஈடு கட்ட ஏழை பாழை, நடு ரக மக்களின் அடிமடியில் கைவைத்து இருப்பதையும் பிடுங்கிப் போகவே முயல்கிறது என்பதால், பல நகர நிர்வாகங்களுக்கான நியாயமான நிதி ஒதுக்கீட்டை வெட்டி இருக்கிறது. இந்த வெட்டால், நகரங்கள் தம் செலவுகளைக் குறைக்கும் முயற்சியில் தெருவிளக்குகளை மங்கலாக்கியும், அணைத்தும் மக்களின் வாழ்வில் இருளைப் பரப்புகின்றன. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் சூரியனும் அஸ்தமித்து, விளக்குகளும் இருளத்துவங்கி விட்டதுதான் வரலாற்றின் திருகல்களை நமக்குக் காட்டுகிறது.

http://www.theguardian.com/society/2014/dec/22/labour-critiicises-council-streetlighting-cuts-england

[/stextbox]
[stextbox id=”info” caption=”இஸ்லாமியமயமாக்கலை எதிர்க்கும் ஜெர்மனி”]

pegida.si

தம்மால் உலகத்தை வென்று விடமுடியும், மற்றெல்லா மக்களும் கோழைகள், தாம் துப்பாக்கியையும் அடங்காத கொலைவெறியையும் காட்டினால் மற்றவர்கள் எல்லாம் ஒடுங்கி ஒளிந்து பணிவர் என்று நினைப்பது இஸ்லாமியப் பயங்கரவாதிகளின் பகல்கனவு. பண்டைக்காலத்தில இதே போன்ற ஒரு மதநம்பிக்கை என்ற போர்வையில், ரத்த வெறியோடு குதிரைமீதேறி வந்து லட்சக்கணக்கான இந்துக்களைக் கொன்றுகுவித்து இந்தியாவின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக் கொடுங்கோலாட்சி செய்த அரபு, துருக்கிய, இரானியக் கொலைகாரர்களைத் தம் பெருநாயகர்கள் என்று தொடர்ந்து கொண்டாடுவதன் மூலம் இந்தியாவின் முஸ்லிம்கள் இன்னமும் தம் சுய வரலாறு என்னவென்று தெரியாத காரிருளில் மூழ்கி இருக்கிறார்கள். இதைவிடத் தம் மக்களைக் கடுமையாக வெறுக்கும் செயல் வேறென்ன இருக்க முடியும்?
அந்தக் கடும் வெறுப்பு அத்தனை பிழைகளோடும் இன்னமும் தொடர்ந்து பாகிஸ்தானின் தேசிய கீதமாகவே ஒலிக்கிறது. மொத்த இந்தியாவும் தம் சொத்து என்று பாகிஸ்தானிய ராணுவம் கருதுகிறது. அந்நாட்டின் கணிசமான மக்கள் இந்தியாவைக் கைப்பற்றி விடுவது இதோ நடக்கப் போகிறது, தம் மதத்தின் வலுவின் முன் அனைத்து இந்துக்களும் மண்டி இடுவார்கள் என்ற அபத்தக் கனவில் இன்னமும் மூழ்கி இருக்கிறதாகத்தான் அந்நாட்டிலிருந்து கிட்டும் பற்பல ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அவர்கள் அறிவில் அப்படி ஒரு அந்தகாரம், உலகை ஆளும் இஸ்லாம் என்ற பகல்கனவின் தொடர் விளைவு. அந்தக் கருத்தை எத்தனைக்கு இஸ்லாமியப் பயங்கரர்கள் பரப்புகிறார்களோ, எத்தனைக்கு அதை உலகெங்கும் சாதாரண முஸ்லிம்கள் வாழ்வுக்கே இயல்பான ஒன்றாகப் பாவித்து நடக்கிறார்களோ அத்தனைக்கு இஸ்லாமிய சமுதாயங்களின் அன்றாட வாழ்வு பயங்கரம் சூழ்ந்த ஒன்றாக இருக்கவே வாய்ப்பு அதிகம்.
கொலைகள் மூலம் பெரும் திரள் மக்களை அச்சுறுத்தி வென்று விடலாம் என்று நினைத்த ஒவ்வொரு கருத்தியலும் கடந்த நூறாண்டுகளில் திரும்பத் திரும்ப பெரும்தோல்வியையே சந்தித்திருக்கிறது. ஸ்டாலினியம் என்ற ஒரு பயங்கரக் கொலைவெறி இருந்த இடம் தெரியாமல் சுக்கு நூறாகச் சிதைந்து, அதன் துதிபாடி பஜனை செய்து கொண்டிருந்த இந்தியக் கம்யூனிஸ்டுகளின் குருட்டுத்தனத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. இன்னமும் இந்தியாவில் சில பெருமூடர்கள் ஸ்டாலின், லெனின் போன்ற மாபாதகர்களின் உருவங்களைப் பொறித்த கொடிகளைக் கையிலேந்தி உலா வருகிறார்கள் என்பது எத்தனைக்குக் காலனியம் அவர்கள் கற்பனையைக் கரையானாக அரித்திருக்கிறது என்பதையே சுட்டுகிறது.
அதே போலத்தான் கோரி, கஜினி, பாபர், ஔரங்கசீஃப் போன்ற பெரும் கொலைகாரர்களைத் தம் நாயகர்கள் என்று கருதும் தென்னாசிய மக்களின் கூட்டமும் தம் புத்தியை அரித்திருக்கும் கரையான் என்ன வகைத்தது என்பதை அறியாத மக்கள்.
வரலாறு என்ற ஒரு வகைக் கதை சொல்லலை உலகில் எங்கும் பரப்பிய யூரோப்பியருக்கு வேறெது புரியாவிட்டாலும், தாம் முன்பொரு காலத்தில் மங்கோலியர் என்ற கொலைப் பட்டாளத்தால் ஆளப்பட்டது என்னவொரு அவமானம், என்னவொரு பெருஞ்சேதம் என்பதெல்லாம் மறக்கவில்லை.
தாம் பிற நிலப்பரப்புகளில் ஆக்கிரமித்து, ஆசிய, ஆஃப்ரிக்க, தென்னமெரிக்கக் கண்டங்களில் பெரும் கொலைகளையும், கொள்ளைகளையும் நடத்தியதை அவர்கள் நினைவு வைத்திருக்காமல் இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால் குறைந்த பட்சம் சுயபாதுகாப்பு என்பதையாவது அவர்கள் இன்னும் கவனத்தில் இருந்து இழக்கவில்லை.
சமீபத்து இஸ்லாமியப் போர் முயற்சிகள் (ஐசிஸ் போன்ற அமைப்புகளின் பெரும் கொலைகள்) அவர்கள் நடுவே ஒரு தற்காப்பு உணர்வைத் தூண்டி இருப்பதால் யூரோப்பின் பல நாடுகளில் முஸ்லிம்களுக்கு எதிரான இயக்கங்கள் எழுச்சி பெற்று வருகின்றன.  இது வருந்தத் தக்கதுதான்.
ஏனெனில் பல சாதாரண முஸ்லிம்கள் சொல்வது போல, கொலைகார இயக்கங்களுக்கும் சாதாரண முஸ்லிம்களுக்கும் தொடர்பைக் கற்பனை செய்து சாதாரண முஸ்லிம்களைத் தாக்குவது, நாட்டை விட்டு விரட்டுவது என்று யூரோப்பியர் துவங்கினால் அது கொடுமையாகவே இருக்கும். அதே நேரம் பல யூரோப்பிய நாடுகளிலும் தீவிர வாத இஸ்லாமிய இயக்கங்களும், ஐஸிஸ் போன்ற கொலைப்படைகளில் சேரச்சொல்லி ஊக்குவிக்கும் பயங்கரவாத நகர்வுகளும் சாதாரண முஸ்லிம்களின் நடுவிலிருந்துதான் எழுகின்றன. ஏதோ ஏழை, பாழை முஸ்லிம்களோ, படிப்பறிவோ, விவர ஞானமோ இல்லாத மக்கள் நடுவிலிருந்து அல்ல, நன்கு படித்த, மத்திய தர முஸ்லிம்கள் நடுவிலிருந்துதான் இப்படிப்பட்ட கொலைகாரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் மனிதர்கள் வெளிப்பட்டிருக்கிறார்கள். அது யூரோப்பின் பல பகுதிகளில் பெருவாரி முஸ்லிம்கள் மீது அவநம்பிக்கையைக் கூட்டி வருகிறது.
இஸ்லாமிய இயக்கங்கள் வெளிப்படையாகத் தமது உலக ஆதிக்க முயற்சியைக் கைவிட்டு விட்டதாகவும், பிற மக்களை இஸ்லாமுக்கு மாற்றும் முயற்சியையும் கைவிட்டதாகவும் அறிவித்து, உண்மையாகவே அமைதியாகவும், அந்தந்த நிலப்பரப்புகளின் சட்டங்களை மதித்து வாழத் தயாராக இருப்பதாகவும் அறிவித்து நடந்து காட்டினாலொழிய, முஸ்லிம்களுக்குப் பல நாடுகளிலும் வரவேற்பும் இராது, அமைதியான, சுகமான வாழ்வும் கிட்டாது என்பது ஒரு நேரடியான பாடம். கற்பதும் கற்காததும் இனி இஸ்லாமிய சமூகங்களின் தேர்வுதான்.
இந்தச் செய்தி ஜெர்மனியில் தீவிர வலதுசாரி இயக்கங்களும் சாதாரண ஜெர்மன் மக்களும் இணைந்து இஸ்லாமிய சமூகங்களுக்கு எதிரான கொள்கைகளை வலியுறுத்தத் துவங்கி இருக்கிறார்கள் என்று சுட்டி, கவலைப்பட வேண்டிய விஷயம் இது என்றும் தெரிவிக்கிறது. அந்தக் கவலை இரு தரப்புக்கும் இருக்க வேண்டும் என்பதுதான் நம் கருத்து.

http://www.spiegel.de/international/germany/anti-muslim-pegida-movement-rattles-germany-a-1009245.html

[/stextbox]
[stextbox id=”info” caption=”ஜெர்மன் பத்திரிகை ஒன்றின் சங்கடங்கள்”]

zeitmagazin-international-issue-2-180xVar

ஜெர்மன் பத்திரிகைகள் இங்கிலிஷ் ஆட்சி செய்யும் உலகு பெரியதாகி வருவதைப் பார்த்துக் கவலை கொள்வதை விட்டு விட்டு, தம் பத்திரிகைகளின் இங்கிலிஷ் மொழிபெயர்ப்பை அளிப்பதன் மூலம் ஜெர்மன் பண்பாட்டையும், ஜெர்மன் மக்களின் மதிப்பீடுகள், தத்துவம், கலை ஆகியவற்றையும் பிற மக்களுக்குக் கொடுக்க முயலத் துவங்கி இருக்கின்றனர். அதன் ஒரு வடிவு, டெர் ஷ்பீகல் என்ற ஜெர்மன் பத்திரிகையின் பன்னாட்டுப் பதிப்பு இங்கிலிஷில் அமைந்திருப்பது. இது பல பத்தாண்டுகளாகவே கிட்டி வருவதுதான். இப்போது பிற ஜெர்மன் பத்திரிகைகளும் இந்த முயற்சியில் இறங்கி இருப்பதாகத் தெரிகிறது. Die Zeit என்ற ஜெர்மன் பத்திரிகை சமீபத்தில் பன்னாட்டுப் பதிப்பு ஒன்றைப் பிரசுரித்திருப்பதோடு, அதை இங்கிலிஷிலும் கொடுக்கிறது. அதன் மொழிபெயர்ப்பு கரடுமுரடாக இருப்பதாக ஒரு இங்கிலிஷ் மொழிக்காரர் குறை சொல்கிறார். அதை ஜெர்மன் பத்திரிகை எப்படி எதிர்கொள்கிறது என்பதை இந்தப் பக்கத்தின் வாசக எதிர்வினைப் பகுதியில் பார்க்கலாம்.
[/stextbox]

0 Replies to “மகரந்தம்”

  1. மகரந்தத்தை தொகுப்பவர் யாரோ? அருமையான தொகுப்பு, செய்தியை ஒட்டி வரும் பிளக்கங்களும் அருமை. சொல்வனத்தில் நான் மிக விரும்பும் பகுதியில் மகரந்தமே முதலிடம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.