கண்ணாடியின்றி படிக்கும் வழி

கண் பார்வைக்கோளாறை திருத்தக் கண்ணாடி அணிபவர்களுக்கு அசௌகரியம் உண்டு. தலையில் எப்பொழுதும் இடையூறாக இருப்பது ஒரு பக்கம். அதைத் தவிர்க்க கண் வில்லை (கான்டாக்ட் லென்ஸ்) போட்டால், தூங்குவதற்கு முன் கழற்றி வேறு வைக்கும் உபத்திரவமும் உண்டு. இந்த மாதிரி கிட்டப் பார்வை, தூரப் பார்வை போன்ற பிரச்சினைகளை நீக்குவதற்கு எம்.ஐ.டி.யில் புது வழியை கண்டுபிடித்திருக்கிறார்கள்.
உங்களின் கைபேசியிலேயே ஒரு சிறிய தகட்டைப் பொருத்தலாம். அது உங்கள் கண் பார்வைக் குறையை நீக்கிவிடும். படுத்துக் கொண்டே, உறங்கும்வரை, கண்ணாடி இன்றி ஆப்பிள் ஐ-பேட் கொண்டு நூல் வாசிக்கலாம். அந்த நுட்பம் குறித்த அறிமுகம்:

இதே போன்ற பத்து புதிய வடிவமைப்புகளையும் 2014ன் தலை சிறந்த சிந்தனைகளையும் சயின்டிஃபிக் அமெரிக்கன் அறிமுகம் செய்கிறது.