பெண் கவிஞர்கள்: ஆவுடையக்காள்

sv-ws-logo-2

வேதாந்த ஆச்சே போச்சே‘ விலிருந்து சில வரிகள்:
ஆசைக் கயற்றூஞ்சலாடித் திரிந்ததும் போச்சே
அசஞ்சலமான வகண்டஸ்வ ரூபமாச்சே

ஆணென்றும் பெண்ணென்று மலைந்து திரிந்ததும் போச்சே
அசையாமல் ஞானஸ்தலத்தி லிருக்கவுமாச்சே
அகங்கார துக்கமசூயை இடும்புகள் போச்சே
தூங்காமல் தூங்கி சுகமாயிருக்கவுமாச்சே
அலையில் துரும்புபோலலைந்து திரிந்ததும் போச்சே
அசையாத பருவதம் போலே யிருக்கவுமாச்சே
தான் பிறரென்கிற தாழ்த்தி யுயர்த்தியும் போச்சே
சாஸ்திர வேதத்திற்கப் புறப்பட்டவனாச்சே
நாமரூபம் நாமென்றபேரெல்லாம் போச்சே
நான்முகனாலே யறியப்படாதவனாச்சே
பசிக்கிரைதேடி பண்ணுமுபாயங்கள் போச்சே
பவ்யங்களுக்குள்ளதும் தானே வருமென்பதாச்சே
என்ன செய்வோமென் றேக்கம்பிடித்ததும் போச்சே
ஏதேது வந்தாலும் எல்லாம் ஸ்வபாவமுமாச்சே
லோகாதி லோகங்க ளெனக்குள்ளிருந்ததும் போச்சே
ஒன்றுமில்லையென்று தானாயிருக்கவு மாச்சே
கோத்திரங்கள் கல்பிதங்குணங்கள் குடிகளும் போச்சே
குணாதீதமான பரபிரம்மம் நானென்பதாச்சே
வேத்துருவமாக பார்த்து இருந்ததும் போச்சே
வேறொன்று மில்லாமல் தானாயிருக்கவுமாச்சே
பொய்யை மெய்யென்றெண்ணி போகம் புசித்ததும் போச்சே
மெய்யை மெய்யென்றேண்ணி மெய்யாயிருக்கவுமாச்சே
யக்ஞ யாகங்களும் ஏற்றவிதிகளும் போச்சே
யக்ஞாதி கர்மங்கள் என்னை பஜிக்கவுமாச்சே
ஜனனமரணம் எனக்குள்ளிருந்ததும் போச்சே
ஜனனமது பொய்யென்று சோதித்திருக்கவு மாச்சே
சந்தைக் கூட்டம் வாழ்வுதானே மதித்ததும் போச்சே
அந்தக் கூட்டம்விட்டு ஆனந்தரூபமு மாச்சே
ஸப்தகோடி மந்திரம் சாஸ்திரங்க ளுள்ளதும் போச்சே
ஸத்துமயமான ஸாஷியே நானென்பதாச்சே
மாயயை உபாஸித்தால் வரு மொக்ஷமென்பதும் போச்சே
மாயைக்கு அதிஷ்டானம் மாயாவி நானென்பதாச்சே
எனக்கெதிராக வெகுவாக பார்த்ததும் போச்சே
ஏகமேகமென்று எங்கும் நிறைந்தவராச்சே.

fancy_poem_article_post_separator

மெய் பொய் விளக்கம்

அண்டபிண்ட பிரம்மாண்டமெல்லாம் அத்தியாஸம் பொய்யடா
ஆதி அந்தமத்யமில்லா அறிவே நீ மெய்யடா
ஜாதி வர்ண குலகோத்திர ஆசிரமாதிகள் பொய்யடா
ஸத்தியஞானானந்த ஸுகஸாகரம் நீ மெயாடா
பொய்யும் மெய்யுமாக தோன்றும் புத்திகல்பித்ம் பொய்யடா
புத்தி விருத்திகளற்ற போதானந்த ஸுகபொத்ம் நீ மெய்யடா

fancy_poem_article_post_separator

ஞான ரஸ கீர்த்தனைகள்

(52) (ராகம் – மோஹனம்) இப்பாடலிலிருந்து சில வரிகள்

பல்லவி
இந்த ரகஸியம் சொன்னீரே யானால்
இருக்கிறேன் நான் உமக்கு ஸொந்தமாய் (இ)
அனுபல்லவி
அம்மையில்லாதொரு செல்லி பிறந்ததும்
அப்பன் முலைகுடித்து அபிவிருத்தியானதும்
யாருக்கும் தோன்றாமல் அகரூபமாய் ஜகத்தைப் படைத்ததும்
அஹோபலர் தயவினால் அதற்கு அர்த்தம் அறிந்ததும் (இ)
கல்பசு கன்றுக்கு இரங்கிப்பால் கொடுத்ததும்
காற்றைப்பிடித்து கண்கலசத்தில் அடைத்ததும்
மலடிமகன் மனோராஜ்யம் ஆண்டதும்
வானத்துமலர்கொய்து நாரில்லசமல் தொடுத்ததும்
மச்சிலுக்கு முயல்கொம்பு தச்சிட்டுச் சமைந்ததும்
மரித்தவன் படை வெட்டி ஜெயித்தவனாண்டதும்
கலத்தில் இடாமல் தீயற்று சமைத்ததும்
கண்டத்தில் நாவில்லாதவன் புஜித்ததும்
காட்டினில் கந்தர்வநகரம் போயடுத்ததும்
கானல்ஜலத்தில் ஸ்நானம் பண்ணி பானம் செய்ததும்
பாருக்குள் நபும்ஸகன் ஸ்திரீபாகம் புஜித்ததும்
பட்டணத்தலங்காரம் பொட்டையம் கண்டதும்
ஏழுலோகத்து புழுதியை யிலக்கிட்டு குறித்ததும்
ஏழுகடல் ஜலத்தையும் எறும்பொன்று குடித்ததும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.