[stextbox id=”info” caption=”முதலாம் இடம் யாருக்கு?”]
சீனா ஒரு வழியாக அமெரிக்காவை மிஞ்சி விட்டது. வருட நாட்டு மொத்த உற்பத்தியில் சீனா 17600 பிலியன் டாலர்களை எட்டி விட்டது. அமெரிக்கா 17400 பிலியன் டாலர்களில் நிற்கிறது. இது அந்தந்த நாட்டின் வாழ்க்கைத் தரம் (cost of living – also known as Purchasing Power parity) என்ற அளவையை வைத்து எடை மாற்றப்பட்ட அளவை. இதன்படி விலைவாசி அதிகம் உள்ள நாடான அமெரிக்கா, விலைவாசி குறைவாக உள்ள சீனாவோடு ஒப்பிட்டால் சற்றுக் குறைவான இடத்தில் அமர்கிறது. விலைவாசியைக் கவனிக்காமல் பார்த்தால் அமெரிக்கா 17, 400 பிலியன் டாலர்களிலேயே இருக்கையில், சீனாவின் மொத்த வருட உற்பத்தி 10,500 பிலியன் டாலர்களில்தான் இருக்கிறது.
ஆனால் மக்கள் தொகை குறைவாக உள்ள அமெரிக்காவில் தலா நபர் வருமானம் அல்லது நபரின் சராசரி வருமானம் சுமார் 55,000 டாலர்கள், சீனாவின் பெரும் மக்கள் தொகையால் நபரின் சராசரி வருமானம் சுமார் 8000 டாலர்கள்தான் (வருடத்துக்கு). பாதிக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் 25,000 டாலர்களோ என்னவோதான் வருடத்துக்குச் சம்பாதிக்கிறார்கள் என்பதையும் நாம் நினைவு கொள்ள வேண்டும். சராசரி மதிப்பு என்பது கொஞ்சம் தவறான பிம்பத்தையே கொடுக்கும்.
http://www.huffingtonpost.com/2014/10/08/china-gdp-tops-us_n_5951374.html
[/stextbox]
[stextbox id=”info” caption=”முதுமையும் தனிமையும்”]
முதியோர்கள் தனியே வாழ்வது இந்தியாவில் அதிகரிtத்திருக்கிறது. இது நம் அனுபவத்திலேயே நமக்கெல்லாம் தெரிந்திருக்கும். இப்படித் தனியே வாழ்வோரிlல் பத்தில் ஏழு பேர் பெண்கள் என்கிறது இந்த இந்தியன் எக்ஸ்ப்ரஸ் பத்திரிகைச் செய்தி. மேலும் தகவல்கள் இந்தியாவின் துரிதமான நகர மயமாதலும், பரவி வரும் கல்வியின் தாக்கமும் குடும்பத்தைச் சிதைக்கின்றன என்பதைச் சுட்டுகின்றன. இது இந்திய இடது சாரிகளின் உள்ளத்தை எத்தனை குளிர்விக்கும் என்பதை நாம் எளிதில் சொல்லி விளக்க முடியாது. தமிழகத்தின் அறிவு சீவிகளில் பெரும்பாலான தற்குறிகளுக்குக் குடும்பம் என்பது ஒரு பிணவாடை அடிக்கும் அமைப்பு என்பதால் இந்தச் செய்தி அவர்களுக்குப் பிடித்தமான எதிர்காலத்தைக் காட்டி இருக்கும். அவர்களுமே முதுமைப் பருவத்தை எட்டும் காலம் தூரமில்லை என்பதால் அப்போதும் இதே போல சிரித்துக் கொண்டிருப்பார்களா என்பதை வரும் தலைமுறையினர்தான் சோதிக்க வேண்டும்.
[stextbox id=”info” caption=”பெண்களுக்கும் கருப்பர்களுக்கும் உரிமை தர வேண்டாமே!”]
அமெரிக்காவின் மிக ஒழுங்கான மனித நேயம் நிறைந்த சட்ட அமைப்பின்படி, குடும்ப வன்முறைக்கு ஆட்படும் பெண்களுக்குத் தம்மைத் தாக்கும் இதர குடும்பத்தினரை எதிர்த்துத் தாக்கவோ தற்காப்பு நடவடிக்கை எடுக்கவோ உரிமை கிடையாது. ஆனால் தெருவில் போகிற ஒரு கருப்பரை அவர் என்னைத் தாக்கவிருந்தார், எனக்கு அச்சமாக இருந்தது என்று ஒரு வெள்ளையர் காக்காய் குருவி போல அந்தக் கருப்பரைச் சுட்டு விடலாம், நீதிமன்றம் கூட அவரை விடுவிக்கும். பலமுறை போலிஸால் பிடித்துச் செல்லப்பட்டு அகற்றப்பட்ட கணவனைத் தன் வீட்டில் கதவை உடைத்து உள்ளே வந்தவனைப் பார்த்து எச்சரிக்கைக்கு வீட்டுக் கூரை மீது சுட்ட குற்றத்துக்குச் சில ஆண்டு சிறை தண்டனை கொடுத்த மிக மனித நேயம் நிறைந்த நாடு இது. இதில் தென் காரலீனா என்ற மாநிலத்தில் இப்போது மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் வாதிடுகிறார், பெண்களின் உரிமை ஆண்களுக்கிருக்கும் உரிமையை விடக் குறைவானதுதான், அதுதான் சட்டம் என்று நீதிமன்றத்தில் சொல்கிறாராம். என்ன ஒரு மேதமை! இந்த நாடு உலகில் உள்ள மற்ற நாடுகளுக்கெல்லாம் மனித உரிமை பாதுகாப்பு பற்றிப் பாடம் நடத்தத் தனக்கு உரிமை உண்டு என்று வேறு உலகரங்கில் சாதிக்கிறது. அந்த கோரத்தை என்னவென்று சொல்வது?
[stextbox id=”info” caption=”சட்டபூர்வமாகும் அடிமைப்படுத்தல்”]
அமைதி மார்க்கம் உலகெங்கும் குண்டு வெடிப்புகளும், படுகொலைகளும் நடத்தி வந்தபடி மானுட குலத்தின் உய்வே இந்த அமைதி வழியில் தான் இருக்கிறது என்று பிற மானுடர்களை நம்பவைக்கவும் பெருமுயற்சிகள் செய்து வருகிறது. அதனால்தான் மேற்கு வங்கத்தில் சமீபத்தில் ஒரு மார்க்கப் பள்ளியில் ஏராளமான துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் ஆகியன கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றன. தவிர தேச எல்லைகளை எல்லாம் கடந்த அன்பு வழி அல்லவா அது, அதனால் 21 ஆம் நூற்றாண்டின் படு மோசமான நாகரீகத்தை எல்லாம் விட்டு விட்டு, 7 ஆம் நூற்றாண்டின் உன்னத வாழ்வுக்கே திரும்பவும் உத்தேசித்திருக்கின்றனர் இந்த அன்பு வழி, கருணை மார்க்கம், சமத்துவ ஜோதியான மார்க்கத்தினர். உலகெங்கும் ஆளப் போகிற காலிஃபேட் என்ற ஒரு அரசமைப்பைச் சமீபத்தில் துவக்கிப் பல்லாயிரம் பேர்களை மட்டுமே கொன்று குவித்திருக்கிற இந்த அன்பு வழியினர், 7 ஆம் நூற்றாண்டின் இன்னொரு உன்னத சமூகப் பழக்கத்தையும் கடைப்பிடிக்கப் போவதாக அறிவித்திருக்கின்றனராம். இந்திய இடது சாரிகளுக்கும், செகுலரிய வாதிகளுக்கும், திராவிட அறிவுக் கொழுந்துகளுக்கும், தனித்தமிழ் தேசிய மாவீரர்களுக்கும் இந்த புது அறிவிப்பு மிகவுமே உவப்பாக இருக்கும். அவர்கள் இனி உடனே அன்பு மார்க்கத்தையே தழுவுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். அடுத்த சில மாதங்களில் தமிழகம் அனேகமாக 80 சதவீதம் அமைதி, அன்பு, கருணை, சம்த்துவ மார்க்கத்தினர் மட்டுமே வாழும் நிலப்பகுதியாகி விடும் என்றும் நாம் எதிர்பார்க்கலாம்.
இந்த அறிவிப்பின் படி, அமைதி மார்க்கத்தில் இல்லாதவர்கள் எல்லாம் பாகன் மதத்தினர், இன்ஃபிடல்கள். அதனால் அவர்களை அடிமைகளாக்க பச்சைப்புத்தகமும் உலகுக்கே என்றென்றைக்குமான ஒரே புனித நூலும் முழு உரிமை கொடுத்திருப்பதால், அந்த அமைதி மார்க்கத்தின் அன்பான போராளிகள் போரில் சிறைப்பிடித்த ஆயிரக்கணக்கான பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாக்கத் தீர்மானித்திருப்பதாகத் தெரிகிறது. என்ன ஒரு கருணை? மூச்சுக் காற்று கூடப்படாது கேரளத்து செவிலியரைத் திருப்பி அனுப்பிய காருண்யத்தைத் தமிழக அறிவுக்கொழுந்துகள் வியந்து பாராட்டிக் கொண்டிருந்தனர் என்று நாம் அறிவோம். இந்தச் செய்தி கேட்டு அவர்களுக்கு மேலும் உடலெல்லாம் புல் அரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
http://www.slate.com/blogs/the_slatest/2014/10/13/isis_yazidi_slavery_group_s_english_language_publication_defends_practice.html
அமைதி மார்க்கத்தின் அன்பான போராளிகளின் கையில் சிக்கிய ஆயிரக்கணக்கான யாஸ்தி மதத்தைச் சார்ந்த பெண்களின் கதி என்ன? தப்பித்த ஒரு பெண்ணைப் பற்றிய செய்தி இங்கே.
[stextbox id=”info” caption=”ஆப்கானிஸ்தானில் இருக்கும் பெண் ராணுவத் தலைவர்”]
ஆப்கானிஸ்தானில் வசிக்கும் பெண்கள் என்றவுடன் இரண்டு சம்பவங்கள் நினைவிற்கு வருகிறது. போதைப் பொருள் வாங்க நகையை அடமானத்திற்கு தர மாட்டேன் என்று சொன்னதால் புருஷனால் மூக்கும் உதடுகளும் அறுபட்டவர் ஒருவர்; காவல்துறையில் பணியாற்றுவதால் சுட்டுக் கொல்லப்பட்ட நெகர் இன்னொருவர். அந்த மாதிரி சம்பவங்களே, கேட்டும் படித்தும் அலுத்த காலத்தில் கமாண்டர் புறாவை ஆபகானிஸ்தானுக்கே சென்று சந்தித்த ஜென் பெர்சி அறிமுகம் செய்கிறார். ருஷியாவிற்கு எதிராக 150க்கும் மேற்பட்ட போராளிகளை ஒன்றிணைத்து சண்டை போட்டவர். இப்பொழுதும் தாலிபானுக்கு எதிராக தன்னுடைய குறுநிலத்தை இரட்சிப்பவர். அறுபது வயதானாலும் மூட்டு வலி இருந்தாலும் ஏகே 47 பிடிப்பவர். எவ்வாறு உள்ளூர் மக்களுக்கு நாயகியாக வழிகாட்டுகிறார் என்பதன் நேரடி அனுபவத்தை பதிந்திருக்கிறார்.
http://www.newrepublic.com/article/119772/my-night-afghanistans-only-female-warlord-commander-pigeon
[/stextbox]
சட்டபூர்வமாகும் அடிமைப்படுத்தல் என்ற குறிப்புரையை வாசித்தேன்.
தீண்டாமை , தேவதாசி முறை , நரபலி , பிணத்தை பிரசாதமாக உண்ணும் தாந்த்ரீக வழிபாடு , கபால பூஜை போன்றவற்றிற்காக இந்திய தத்துவ மரபை ஒதுக்கி விட முடியாது. மேற்சொன்னவை தவறான புரிதல்களால் காலப்போக்கில் ஏற்பட்ட விலகல்கள் அல்லது திரிபுகள் என்றே கொள்ள வேண்டும்.
அது போலவே இன்று அய்.எஸ். அய்.எஸ் , அல்காயிதா , போகோஹராம் , அல்ஷபாப் , தலிபான் போன்றவற்றை ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாகவும் வல்லாதிக்க வெறி கொண்ட விலகல் மன நிலை கொண்ட குறுங்குழுக்களாகவுமே பார்க்க வேண்டும்.
அதை விட்டு விட்டு இந்த வெறிப்போக்கை இஸ்லாமிய ஞான மரபின் மீது ஏற்றிச்சொல்வது சொல்வனம் இணைய இதழுக்கு அழகல்ல. இது போன்ற பரப்புரைகளின் மூலம் சனாதன மதத்தின் மீதான கண் மூடித்தனமான தாக்குதல்களை நீங்களே நியாயப்படுத்துவதில்தான் வந்து முடியும் .