என் காதலை நீ அறிவாயா?
உன்னைக் காணாது,
திசைகளற்று, தடைகளற்று பரந்து விரியும்
என் ஆன்மாவின் தேடலைப் போல் வரைகளற்ற என்
காதலை அறிவாயா?
மானுடத்தின் எல்லை வரை, அவர் தம் மாண்பு வரை
காலமற்று பரவுவதை அறிவாயா?
மாலையின் மயக்கம் காலைக்காக, காலையின் நீட்சி
மாலைக்காக
இந்த தாகத்தைவிட உயர்ந்த என் காதலை அறிவாயா?
மானுட உரிமைப் போராட்டத்தில் தெறிக்கும்
சுதந்தரக் கனல் என் காதல்,
வெற்றி கொண்டோரின் பணிவு என் காதலைவிட
தூய்மையானது அல்ல,
என் இறந்தகால வலிகளை நீக்கும் வலியாக என் காதல்,
என் சிறு பிராயத்தின் நம்பிக்கையில்
தொலைந்த என் கனவு தேவதைகளின் அன்பைவிட
உயர்ந்த என் காதலை அறிவாயா?
என் வாழ் நாள் மூச்சு, சேகரித்த புன்னகை, விடுத்த கண்ணீர்,
இவற்றை முற்றிலுமாக கொண்ட என் காதலை அறிவாயா?
வாழ் நாளில் நீ அறியாத இந்தக் காதலை இறந்த பின்
சிறப்பாக்குவேன் அதுவே இறையருள் ஆனால்.