[stextbox id=”info” caption=”குப்பை கூளச் சூழலில் கொடுமுடி நோக்கிய யாத்திரைகள்”]
ஒவ்வொரு வருடமும் 30,000 நபர்கள் ப்ளாங்க் மலைச் சிகரத்தை எட்டி விட முயல்கிறார்களாம். அதுவும் தெரிந்த, பழகிய பாதைகளை விடுத்து மேன்மேலும் கடினமான பக்கங்கள், வழிகளில் ஏற முயல்கிறார்களாம். இதனால் வருடா வருடம் இறப்பவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. இந்த மலைச் சிகரம் ஃப்ரான்ஸில் உள்ளது என்றாலும் இந்த மலைத் தொடர்கள் மூன்று நாடுகளில் உள்ளன. இத்தலி, ஃப்ரான்ஸ் மேலும் ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகள் இந்த மலைத் தொடர்களைச் சொந்தம் கொண்டாடுபவை. ஆக சிகரத்துக்குப் பாதை மூன்று நாடுகளிலிருந்தும் வந்தாலும் முக்கியமான பாதை ஃப்ரான்ஸில் உள்ளது.
ஒரு சிகரத்திற்கு ஏன் இத்தனை ஆகர்ஷணம்? ஏன் சாவைக் கூட மதியாமல், வெறும் சிகரத்தை ஏறிப் பிடிப்பதை உயர்வாக மனிதர்கள் கருதுகிறார்கள். அப்படியே ஏறிப் பிடித்துத் தான் விட்டார்கள் என்றாலும், இதொன்றும் யாரும் ஏறாத சிகரமும் இல்லை, ஆயிரக்கணக்கானோர் ஏற்கனவே எட்டிப் பிடித்த சிகரம்தான். இருந்தும் ஏன் இத்தனை ஆயிரம் மலை ஏறிகள் இதைத் தொடர்ந்து முயல்கின்றனர்? இதில் மனித இனத்தின் குணாதிசயங்கள் சிலவற்றுக்காவது ஏதும் துப்புக் கிட்டுமா? ஜெர்மன் சஞ்சிகை டெர் ஷ்பீகல் இந்த வினோதமான விஷயம் பற்றி இந்தச் செய்தி அறிக்கையைக் கொடுக்கிறது.
[stextbox id=”info” caption=”நிற நாயகத்தின் முன் தோற்ற ஜன நாயகம்”]
ஜன நாயகம் என்ற சொல்லுக்குப் புது அர்த்தங்கள் உருவாகிக் கொண்டே இருக்கும், இது வரலாற்றுப் பாடம்.
சந்தேகம் உள்ளவர்கள் ரேமண்ட் வில்லியம்ஸின் ‘கீ வோர்ட்ஸ்’ புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கலாம். அவர் ஓரளவு மேலை நிலங்களின் வரலாற்றையும், பண்பாட்டையும் மனதில் கொண்டு ஜன நாயகம் என்பது எப்படி பற்பல வடிவுகளில் வரையறுக்கப்பட்டிருக்கிறது, அதன் அர்த்தங்கள் எப்படி மாறிக் கொண்டே இருக்கின்றன என்றும் விளக்கி இருப்பார்.
ஆம், அவர் மார்க்சியர்தான், ஆனாலும் வரலாற்றை அனேகமாக முறையாகக் கொடுத்திருப்பார். தமிழக இடது சாரிகளின் தனிச் சிறப்பான ‘வசதிக்குத் திரித்தலே வரலாறு; என்ற கோணல் அணுகல் அவரிடம் மிகக் குறைவாகவே காணப்படும். எல்லா நிலப்பரப்புகளையும் சேர்த்துப் பார்த்து இச்சொல்லை அணுக வேண்டும் என்ற அவதி அவருக்கில்லை, அவர் ‘டெமாக்ரஸி’ என்ற சொல்லைத்தான் அணுகினார், அதன் அர்த்தம் பற்பல சமூகங்களில் எப்படிப் புழங்கியது, புழங்குகிறது என்பதை அல்ல.
அமெரிக்க ஜன நாயகம் எல்லா ஜன நாயகங்களையும் போல பற்பல அர்த்த பேதங்களோடு உலவி வந்திருக்கிறது. அவற்றில் ஒன்று நாடும் அரசும் வெள்ளை கிருஸ்தவருக்கு மட்டுமே உரித்தானவை என்ற அசையா நம்பிக்கை. அதை வலியுறுத்தும் மாநிலங்கள் எல்லாத் திசைகளிலும் உண்டு என்றாலும், பெருவாரியும் அவை தென் மாநிலங்களாக இருக்கும். நியுயார்க் டைம்ஸ் வடகிழக்கு மாநிலத்துச் செய்தித்தாள் என்றாலும் ஏதோ காரணத்தால் மொத்த நாட்டுக்குமான தாள் என்ற பிரமையோடு நடத்தப்படும் பத்திரிகை.
இந்தியாவிலும்தான், தேசத்துக்கு எதிரான கொள்கைகளையும், கருத்தையுமே தொடர்ந்து கடைப்பிடிக்கும் பத்திரிகைகள் பலவும், தொலைக்காட்சி நிறுவனங்கள் பலவும் தாமே தேச பூராவுக்குமான வெளியீடுகள் என்று பிரமையை மக்களிடம் பரப்புவதை அவசியமாகக் கருதுவதில்லையா, அதே போன்றதுதான் நியுயார்க் டைம்ஸின் பிரமையும்.
இந்தச் செய்தித்தாள் கூட, இன்று ஒரு உண்மையைச் சொல்லி இருக்கிறது. அது தென் மா நிலங்கள் பற்றியதா, அதனால் கொஞ்சம் உண்மை வெளி வந்திருக்கிறது. இதுவே வட மா நிலங்கள், வடகிழக்கு மா நிலங்களைப் பற்றிய செய்தியானால் உண்மை சொல்லுமா நியுயார்க் டைம்ஸ் என்றால் .. அட இப்படியும் கேட்குமளவு அப்பாவியா நீங்கள் என்றுதான் கேட்க வேண்டி இருக்கும்.
இந்தச் செய்தி- ஜன நாயகம் பற்றியது. கருப்பின மக்கள் பெரும்பான்மையாக உள்ள பல பெரு நகரங்களில் வெள்ளையரிடமே நகர ஆட்சி உள்ளது இது எப்படி நேர்கிறது என்று 200 வருடங்களின் வரலாற்றை மறந்து டைம்ஸ் ஒரு கேள்வி கேட்கிறது. எப்படி நேர்கிறது என்று அது சொல்வதைப் படித்துப் பாருங்கள், அமெரிக்க ‘ஜன நாயகம்’ எப்படி கட்டமைக்கப்படுகிறது என்பதன் மர்மம் புரியலாம்.
http://www.nytimes.com/2014/09/29/us/mostly-black-cities-mostly-white-city-halls.html
[/stextbox]
[stextbox id=”info” caption=”துருப்பிடித்துப் போனதா ஜெர்மன் ராணுவம்?”]
ஜெர்மனியின் ராணுவம் மிக க்ஷீணிப்பில் இருக்கிறதாம். அதன் தளவாடங்கள் ஓட்டை உடைசல். பல நாட்டுப் போரணியில் கலந்து கொள்ள ஜெர்மனி முன் வந்தாலும் அதால் எதையும் உருப்படியாகக் கொடுக்கவோ, பங்கெடுத்து முன்னிலையில் இருந்து செயலாற்றவோ முடியாதாம்.
URL http://www.spiegel.de/international/germany/ramshackle-army-at-odds-with-berlin-s-global-aspirations-a-994607.html
[/stextbox]
[stextbox id=”info” caption=”கொலைவழி மார்க்கம்?”]
அமைதி மார்க்கமும், உலகிலேயே மிக்க அறிவியல் குணம் உள்ளதுமான ஒரு மதக்குழுவின் ஒரு பிரிவு அதே அறிவியலான மதத்தின் இன்னொரு பிரிவோடு பெரிய யுத்தம் ஒன்றை நடத்தி வருவது பற்றி நமக்குத் தெரியும். ஏற்கனவே பெண்கள் மீது ஒரு போரை இதே மதக்குழுக்கள் உலகெங்கும் நடத்தி வருகின்றனர். அந்த மதம் அல்லாதாரை கிள்ளுக் கீரையாகவோ, கசாப்புக்கடை மிருகங்களாகவோ நடத்தலாம் என்பதற்கு அதன் போதகர்களே அனுமதியும் வழங்கி அப்படிச் செய்வோருக்கு மறு உலகில் அனைத்து போகங்களும் கிட்டும் என்று வேறு போதையூட்டுகின்றார்கள். பின் என்ன, கையில் அகப்பட்டவர்களைப் பலி போடுவதற்கு என்ன தடை இருக்க முடியும். பிரச்சினை எங்கென்றால், அதே மதத்தில் தம் கட்சிதான் உண்மையான கட்சி என்றும் மாற்றுக் கருத்து ஏதும் வைத்திருப்பவர்கள் மதத்தின் எதிரி என்றும் அறிவித்து அன்னாரைக் கொல்லத் துணிவதுதான். ஐசிஸ் எனப்படும் பயங்கரவாதக் கும்பல் ஏற்கனவே பல்லாயிரக் கணக்கானோரைப் பல நாடுகளில் கொன்றிருந்தாலும், தமிழகத்து முற்போக்குகள் வாய் பொத்தி மௌனம் சாதிப்பது ஒரு பயங்கர காமெடி. சிரிப்பு அல்ல, அருவருப்பைக் கொணரும் காமெடி. அதை விட இந்திய நர்ஸ்கள்/ தாதியர் சிலர் மேல் மூச்சுக் காற்று கூடப் படாது இந்தியாவுக்கு அவர்களைத் திருப்பி அனுப்பியதாக அந்தக் கொலைகாரக் கும்பலின் புகழ் பாடக் கூடத் தமிழ் நாட்டில் பல நூறு இல்லை, பல ஆயிரம் பேர்கள் உலவுகின்றனர். அத்தனைக்கு மனித உயிர்கள் மிக மிக மலிவானவை என்று தெரிகிறது. இங்கே ஒரு பிரிவின் கீழ் உள்ள ஒரு நாட்டில், விவிலிய நூலுக்கு முந்தைய பழங்கதையில் யோனா எனப்படும் ஒரு மனிதனை ஒரு பெரிய மீன் விழுங்கிய கதையை நம்பத் தயாரில்லை என்று ஒரு நபர் சொன்னதால் அவரைத் தூக்கில் போட்டிருக்கிறார்கள்.
இதுதான் உலகிலேயே மிக்க அமைதியான மதம், இதுதான் உலகிலேயே மிகவும் அறிவியல்தன்மை கொண்ட மதம். இதுதான் உலகிலேயே சமத்துவமும், ஜனநாயகமும் கொண்ட மதம். இதுதான் இந்திய முற்போக்குகளின், தமிழகத்து உண்மை கண்டு பிடிக்கவென்று கிராமம் கிராமமாக அலையும் தலை வீங்கிய அறிவாளிகளின் ஆதர்ச மதம். இதுதான் சுஸான்னா ராயால் மிகவும் போற்றப்பட்ட மதமும்.
இந்த உருப்படா அறிவுஜீவிகள்தான் இந்திய ஊடகங்களைக் கடந்த பல பத்தாண்டுகளாகப் பிடித்து வைத்திருக்கிறார்கள். இவர்கள் கண்ட பாதையில்தான் இந்தியா பெரும் விடுதலையைப் பெறப் போகிறது என்று கொக்கரிப்பு வேறு இவர்களின் புத்தகங்களில். இந்துக்களை எதிர்ப்பதற்கென்று ஒரு பெரும் செய்தித்தாளையே நடத்தும் இன்னொரு நிறுவனத்தின் ஆதர்ச எழுத்தாளர்களும் இதே குப்பைக் கூளங்களில் இருந்து உருவப்படுவோர்தான். என்ன ஒரு அற்புதமான கூட்டம்.
[stextbox id=”info” caption=”விமானத் தாக்குதல் செலவுகளும் விஞ்ஞான ஆராய்ச்சி முதலீடுகளும்”]
ஐஸிஸ் பயங்கரவாதக் கும்பலை ஒழிக்கிறோம் என்று கிளம்பியுள்ள அமெரிக்க அரசு முதல் சில தினங்களில் எத்தனை செலவழித்துள்ளது? முதல் நாள் சிரியாவில் வீசிய குண்டுகளுக்கு அமெரிக்க ராணுவத்துக்கு ஆன செலவு இந்தியாவின் சந்திராயன் சாடிலைட்டை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப ஆன பயணச் செலவை விட அதிகமாம். ஒரு நாள் குண்டு வீச்சுக்கு அமெரிக்காவுக்கு ஆன செலவு 79 மிலியன் டாலர்கள். இந்திய செவ்வாய் கிரகப் பயணச் செலவு $74 மிலியன் டாலர்கள்.
இந்தச் செலவைத் தவிர வேறு செலவுகளும் அமெரிக்க விமானப் படைக்கு உண்டு. அவற்றில் அந்த ஏவுகணைகளுக்கு ஆகும் செலவைக் கணக்கிலெடுத்தால் எப்படி இருக்கும்? மொத்தம் 47 ஏவுகணைகளை வீசியதாம் விமானப்படை. ஒவ்வொரு ஏவுகணையின் விலை $1,6 மிலியன் டாலர்கள். அதாவது ஏவுகணைகளுக்கு மட்டும் 72.5 மிலியன் டாலர்கள் செலவு.
அமெரிக்கா கூடிய சீக்கிரமே இந்தியாவைப் போன்ற வறிய நாட்டுப் பட்டியலில் சேரும் என்று நீங்கள் கருதினால் அது அத்தனை தவறான கணிப்பாக இராது. ஆனால் அமெரிக்க மக்கள்தாம் வறுமையில் ஆழ்வார்கள். அந்நாட்டில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களும், பெருநிதிக் கிழார்களும், வங்கித் தலைவர்களும், ராணுவத் தளவாட நிறுவனங்களும் மேன்மேலும் கொழுத்துத் திரிவார்கள். மரத்தில் உயரே அமர்ந்து தாம் இருக்கும் கிளையையே அடியோடு வெட்டும் அபார புத்தி கொண்டவர்கள் இவர்கள். இந்தியாவிலும், சீனாவிலும், பாகிஸ்தானிலும், யூரோப்பிலும் இத்தகையோரே அந்தந்த நாடுகளில் தலைமைப் பதவிகளில் இருக்கிறார்கள். செய்தியை இந்த அமெரிக்கப் பத்திரிகைத் தளத்தில் பார்க்கலாம்.
http://www.thedailybeast.com/articles/2014/09/24/first-u-s-stealth-jet-attack-on-syria-cost-79-million.html
[/stextbox]