கரிம உமிழ்வுகளினால் நிகழ்ந்து வரும் காலநிலை மாற்றத்திற்கு எந்த நாடுகள் பொறுப்பு? தி கார்டியன் கொடுக்கும் வரைபடத்தைக் கொண்டு மாசுபடுத்தும் சர்வதேச சக்திகள் யார் என்று கண்டுபிடிக்கலாம். சீனாவின் பசுமை இல்ல வாயு வெளிப்பாட்டை மற்ற நாடுகளோடு ஒப்பிடலாம். புவி வெப்பமடைதலின் தாக்கத்தினால் மிகவும் பாதிக்கப்படும் நாடுகளைக் கண்டறியலாம்.
தட்பவெப்ப மாற்றத்தினால் மிக மோசமான பின்விளைவுகளை சந்திக்கும் மக்களை கீழே இருக்கும் ஆவணப்படத்தில் காணலாம். அதே சமயம், நமது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க புதிய அணுகுமுறைகளை கண்டுபிடிக்கும் தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் விஞ்ஞானிகளின் திட்டத்தையும் பார்த்து பார்வையாளர்கள் தங்கள் சமூகங்களில் எளிமையான ஆக்கபூர்வமான மாற்றங்களை உருவாக்கவும் பல்வேறு வழிகளை வழங்குகிறது.