சாகித்திய அகாதமியுடன் மொழிபெயர்ப்பாளராக பதிந்து கொள்ள

சாகித்திய அகாதமி, தேசிய மொழிபெயர்ப்பாளர்கள் பட்டியல் ஒன்றை தயார் செய்துகொண்டிருக்கிறது. இந்திய மொழிகளிலிருந்து பிற இந்திய/வேறு மொழிகளுக்கோ இல்லை பிற இந்திய/வேறு மொழிகளிலிருந்து இந்திய மொழிகளுக்கோ மொழிபெயர்ப்பவர்கள், தங்களை சாகித்திய அகாதமியுடன் பதிவு செய்துகொள்ளலாம்.
இப்பட்டியல், பதிப்பாளர்கள், வெளியுறவு அலுவலகங்கள், இலக்கிய அமைப்புகள், அரசு அமைப்புகள், கல்வி /ஆய்வு அமைப்புகள் மேலும் பலராலும் உபயோகப்படுத்தப்படும்.
தங்களை இதில் இணைத்துக்கொள்ள, தங்களுடைய தொடர்பு விபரங்கள், கல்வித் தகுதி, பால், தாய்மொழி, தாங்கள் மொழிபெயர்ப்பு செய்யக்கூடிய மொழிகள் (எதிலிருந்து மற்றும் எதற்கு), 3 மாதிரி மொழிபெயர்ப்புகள் அல்லது தங்களின் தேர்ந்த மூன்று மொழிபெயர்ப்புகளின் சுட்டிகள் அடங்கிய சிறு சுயகுறிப்பை கீழ்கண்ட முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும் : nationalregistertranslators@gmail.com
sahitya academy

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.