இந்த மாதிரி செய்தி அலசல்கள் தமிழ் இதழ்களில் இடம்பிடிக்கின்றனவா?
இது ஸ்லேட்டு இதழின் ஒரே ஒரு பக்கம். இதில் பெரிய ஆய்வு என்று எதுவும் இல்லை. ஆங்காங்கே சில அட்டவணைகள் உண்டு. சராசரி வாசகர்களை அச்சுறுத்தாத வரைபடங்கள் உண்டு. நம் இந்திய நாளிதழ்களில் இது போன்ற வரைபடங்களும் விவரங்களைத் தொகுக்கும் செய்திக் குறிப்புகளும் கிடைக்கிறதா?
இந்திய செய்தித்தாள்களில் இந்த மாதிரி செய்தி வந்திருக்கலாம். ஆனால், ஏன் அதிகம் காணப்படுவதில்லை?
1. அமெரிக்காவில் பங்குச்சந்தையும் வருங்கால ஊகச்சந்தை வர்த்தகர்களும் அதிகம். அவர்களுக்கு, இந்தத் தகவல் மூலம், அரிசி விலை எப்படி உயரும் என்பதும் கரும்பு கொள்முதல் எப்படி மாறும் என்பதும் அறிய முடியும். இந்தியாவில் ப்ளூ சிப் தவிர எதிலும் பெரும்பாலான நடுத்தரவர்க்கம் முதலீடு செய்வதில்லை.
2. இந்தச் செய்தியினால் ‘நாளை மழை பெய்யுமா’ என்பது போன்ற உடனடிப் பயன் எதுவும் இல்லை.
3. இந்தக் குறிப்பில் சுவாரசியம் இல்லை. சினிமா, விளையாட்டு, கிசுகிசு போல் படிப்பதற்கு ரசமாக இல்லை.
4. இவ்வளவு அழகான இன்ஃபோகிராபிக்ஸ் போடுபவர்கள், ப்ராக்டர் அன்ட் காம்பிள் போன்ற பெருநிறுவனங்களின் வணிகத்துறையில் சந்தையாக்கத்தில் வேலையில் அமர்வதைத்தான் விரும்புகிறார்கள்.
இந்த வாதங்கள்தான் முக்கியக் காரணங்களா?
சோனாக்ஷி சின்ஹாவின் மெலிந்த தோற்றம் என்று பிரசுரிக்கும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு இக் குறிப்பிற்கும் ஒரு இரண்டு பத்தி கொடுப்பதால் பெரிய நஷ்டம் வருமா?
அல்லது இந்தக் குறிப்பிற்கு ஒரு பெரும் வணிக நோக்கம் உண்டே, விவசாயிகளும், உர விற்பனையாளர்களும் இத்தகைய செய்திகளால் பயனடைய மாட்டார்களா?
உங்கள் எண்ணம் என்ன?