கோடீஸ்வர கணிதயியலாளர்
ஜேம்ஸ் எச் சிமன்ஸ் வைத்திருக்கும் சொத்து $ 12.5 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. அறிவியல் ஆராய்ச்சிக்கான ஒதுக்கீட்டை அமெரிக்க நடுவண் அரசு குறைத்து வரும் காலகட்டத்தில் தன்னுடைய சொந்த கைக்காசை விஞ்ஞானத்திலும் கணிதத்துறையிலும் பல்வேறு வகையில் செலவிடுகிறார் டாக்டர் ஜேம்ஸ். கணித ஆசிரியர்களுக்கு உதவித் தொகை அளிப்பது மட்டுமல்லாமல், அவருக்கு பிடித்த தலைப்புகளான மரபணு புதிர்கள், வாழ்க்கை தோற்றம், மன இறுக்கத்தின் வேர்கள், கணித மற்றும் கணினி எல்லைகளை விரிவாக்குதல், அடிப்படை இயற்பியல் மற்றும் அகிலத்தின் துவக்க அமைப்பு என நிதிநல்கை நீள்கிறது. அவருக்கு மறதி இருந்தது. பதவி இறக்கம் செய்யப்பட்டார். அவரின் கணினி நிரலாக்கங்கள் பயனில்லாதது. கணிக் குறியீடுகளை மறக்கிறார். அதனால் வேலையை விட்டு நீக்கப்பட்டார். தனது வாழ்க்கை தோல்விகளுக்கு பின் அவரால் இதை செய்ய முடியும் என்றால், இன்றைய இளைஞர்கள் என்ன சாதிக்கலாம் என்னும் செய்தி தெளிவாக உள்ளதை விவரிக்கும் கட்டுரை.
oOo
என் தகவல் – எனக்கு மட்டும்
நீங்கள் ஏற்கனவே என்ன வகை இசையை கேட்டீர்கள் என்பதை வைத்து பாண்டோரா.காம், உங்களுக்கான அடுத்த பரிந்துரைகளைத் தரும். என்ன இசைத்தட்டு கேட்டீர்கள் என்பதை மட்டும் தெரிந்து கொண்டால் போதும் என நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால், இன்றைய நிலையில், உங்களின் இடம், பொருள், ஏவல் என அனைத்தையும் அனைத்து நிரலிகளும் பெற்றுக் கொள்கின்றன. காலாகாலத்திற்கும் சேமித்து வைக்கின்றன. இந்தத் தகவல் திரட்டை கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்த எம்.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் புதிய திட்டத்தை செயல்படுத்தி முன்வைக்கிறார்கள்.
http://newsoffice.mit.edu/2014/own-your-own-data-0709
oOo
கொலம்பஸியம்: நாடு விட்டு நாடு
கொலம்பஸியம் என்றால் ஏற்கனவே இருந்த அமெரிக்காவை கொல்பஸ் கண்டுபிடித்தது போல் அயல் கலாச்சாரத்தை உள்ளூர்வசமாக்குவது. பீட்சாவைக் கொண்டுவந்தது இத்தாலி; பன்னீர் டிக்கா பீட்சாவை கண்டுபிடித்தது யார்? உலகமயமாக்கலின் ஒரு ஆரோக்கியமான இலவச இணைப்பாக இதைச் சொல்லலாம். அமெரிக்காவில் இளநீர் புகழடைய ஆரம்பித்திருக்கிறது. சென்னையில் ஸ்டார்பக்ஸ் துவங்குகிறது. உணவு இறக்குமதியை ருசிப்பது போல் உலகப் பண்பாட்டையும் பிரச்சினைகளையும் ருசிக்க விழைகிறோமா என்பதை அலசும் பதிவு.
oOo
தலைசிறந்த விஞ்ஞானிகள் அதிகம் உள்ள நாடுகள்
அறிவியல் என்பது முக்கியமானது; வியாபாரமும் கூட. உலகளாவிய அளவில் எந்த எந்த நாடுகளின் அரசுகளும் நிறுவனங்களும் தொண்டு அமைப்புகளும் ஆராய்ச்சிக்காக நூற்றுக்கணக்கான பில்லியன்களை முதலீடு செய்கிறார்கள்? அதன் ஆய பயனாக, அறிவூட்டம் அதிகரித்து, அதனால் பொருளாதார வளர்ச்சி ஓங்கி, அதன் விளைவாக வாழ்க்கையை மேம்படுத்தி எதிர்காலத்தில் மக்களுக்கான புதிய சாத்தியங்களை உருவாக்குவதில் எவர் முன்னிற்கிறார்கள்? தாம்சன் ராய்ட்டர்ஸ் என்னும் தரவு மற்றும் ஊடக நிறுவனத்தினால் தொகுக்கப்பட்ட உலகின் தலையாய ஆராய்ச்சியாளர்கள் பட்டியலை இங்கு பார்க்கலாம். முதல் பதினைந்து இடங்களில் சீனாவும் சவுதி அரேபியாவும் இடம்பிடித்திருக்கிறார்கள்.
oOo
புகழ்பெற்ற வினைச்சரங்கள்
வினைச்சரம் என்றால் என்ன? உங்களின் ஃபேஸ்புக் முகப்புப் பக்கத்தில் எவருடைய எந்தப் பதிவு எப்பொழுது வரும் என்று தீர்மானிப்பது வினைச்சரம். மொட்டை மாடித் தொட்டியில் தண்ணீர் தீரப் போகிறது என்றறிந்தவுடன் தானியங்கியாக மோட்டார் போட்டுக் கொண்டால் வினைச்சரம். அரிசியில் இருந்து இட்லி உண்டாக்கினால் – அது கூட வினைச்சரம்தான். கூட்டல், கழித்தல், பெருக்குதல் – இவையும் வினைச்சரங்களே. கணினி நிரலி எழுதுவதில் அத்தியாவசியமான வினைச்சரங்களின் பட்டியலை இந்தப் பதிவுத் தொகுக்கிறது.
https://medium.com/@_marcos_otero/the-real-10-algorithms-that-dominate-our-world-e95fa9f16c04
oOo