பாஸனின் பிரதிமா நாடகம்

தந்தையின் ஆத்ம சாந்திக்கும், திதிக்கும் மிகச் சிறந்தது பொன்மான் தோல் எனச் சந்நியாசி சொன்ன செய்திதான் அவன் மானைத் தொடர்ந்து போகக் காரணமானது என்று நாடக ஆசிரியனின் அணுகுமுறை அமைகிறது.இதுவும் பாத்திரப் படைப்பின் உன்னதம்தான். மானைப் பிடித்துத் தரும்படி சீதை வேண்ட அதை நிறைவேற்றும் வகையில் இராமன் மானைப் பின் தொடர்ந்தான் என்ற சாதாரண வாழ்வுப் பின்னணியில் மனைவி ஆசை, அதை நிறைவேற்ற கணவன் துடிப்பு போன்ற செயல்கள் இங்கில்லை .இராமனின் பாத்திர உயர்வு இப்படித்தான் பாஸனிடமிருந்து வெளிப்படுகிறது.