கடுமையான வறுமையையும் உலகின் எல்லாவிடங்களில் இருந்தும் பட்டினியை நீக்கவும் கேட்ஸ் ஃபவுண்டேஷன் முயல்கிறது. அதற்கான பொதுமக்களின் உரையாடலை பொதுப்பரப்பில் பரவலாக்க சண்டான்ஸ் நிறுவனமும் குறும்படங்களைக் வெளியிடுகிறது.. ஆவணப்படங்களைப் பரவலாகப் பலரிடமும் கொண்டு செல்வதிலும் சண்டான்ஸ் தீவிரமாக இயங்குகிறது. அப்படி எடுக்கப்பட்ட படங்களை இங்கு பார்க்கலாம். மேற்கு வங்காளத்தில் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் குறுவிவசாயிகளாக்கும் திட்டத்தின் கீழ் செயல்படுபவரைக் குறித்த படம் கீழே: