வாசகர் மறுவினை

திரு அசோகமித்திரன் அவர்களின் சிறப்பிதழில் வெளியான ‘கோட்டை’ சிறுகதை குறித்து:-

கதையைப் படித்து முடித்ததும், அவர் இளமையில் வசித்த ‘லான்சர் பாரக்’ சென்று தற்போதைய நிலையைப் பார்த்து எடுத்த சில புகைபடங்களை சொல்வனத்திற்காகப் பகிர்ந்து கொள்கிறேன். பழைய கட்டிடங்கள் அடுக்கு
மாடிகளாக ஆகியிருந்தன. காலனியிலுள்ள சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிய படி இருந்ததைப் பார்த்ததும் 18 ம் அட்சக்கோடுகளில் அவ்ர் சிறு வயதில் கிரிக்கெட் விளையாடியதைப் படித்தது நினைவில் வந்தது.

கோட்டை சிறுகதையில் அவர் மாட்டைத் தேடி சென்ற இடம் லான்சர் பாரக்கிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் தற்போதைய கிழக்கு மாரட்பள்ளி,ஆனந்த்பாக்,சபில்குடா வழியாக சென்றால் வரும் மௌலா அலி கோட்டையாகத்தான் இருக்கும் என்பது ஊகம்.

சிறப்பிதழில் வெளியான அவரது புகைப்படத்திருந்து, நான் வரைந்த கோட்டோவியம் ஒன்று சொல்வனத்திற்காக இணைத்துள்ளேன்.

அன்புடன்
சேது வேலுமணி
செகந்திராபாத்