மொழிபெயர்ப்பு: நம்பி கிருஷ்ணன்
கருப்புக் கோழி
– ஏ கே ராமானுஜன்
மரத்திற்கு
இலைகள் வருவது போல்
அது வர வேண்டும்
இல்லையேல்
வரவே வேண்டாம்
எனினும் சிலசமயம் அது வருகிறது
கருப்புக் கோழியாக
உருண்ட சிகப்புக் கண்ணுடன்
தையல் வேலைப்பாட்டில்
இழை இழையாக
தொலைந்தும் மீண்டும் கண்டுபிடிக்கப் பட்டும்
எல்லாம் கைகூடி
தன் உருண்ட சிகப்புக் கண்ணுடன்
கருப்புக் கோழி முறைக்கையில்
பயமாக இருக்கிறது.
oOo
மேஜையின் மீதிருக்கும் ஆரஞ்சுப் பழங்கள்
பெற்றுவிடுகின்றன
சீமை நூக்கின்
நுட்பமான தனித்தன்மையை
இனியும்
வசந்தகால
மரத்தின் ஒரு எண்ணமாக
இல்லாமல்
பச்சையின்
நிர்வாணத்தாலான
அதன் உடல்
ஓர் கோடைக் கரம்.
மஞ்சளாக, மெல்ல
பெண்களின் நெருக்கத்துடன்
ஆரஞ்சு வானின்
இறுதி விதிமுறையாக அல்லாது
கோணம் நாடும்
இச்சையாய்
நதியோட்டம்
தடுக்கும்
கல்.
– ஸ்ரீனிவாஸ் ராயப்ரல்