உலக சினிமாவில் அவ்வப்போது அந்தக் கலையை முன்னெடுத்துச் செல்லும் சில படங்கள் உருவாக்கப்பட்டு வெளியாகும். அவை பெரும் திரளான மக்களின் அபிமானப் படங்களாக இல்லாமல் போகலாம். ஆனால் துறை வல்லுநர்களால் மிகவும் கவனிக்கப்பட்ட படைப்புகளாகவோ, அல்லது ஏராளமான இளம் கலைஞர்களுக்கு உத்வேகம் கொடுப்பனவாகவோ அமைந்து துறையில் ஒரு புது சக்தியைக் கொணரக் கூடிய படைப்புகளாக அமையும். சில ஒவ்வொரு தலைமுறைக்கும் வேறு வேறு அர்த்தங்களோடு விளங்கிக் கொள்ளப்படக்கூடிய செறிவான அமைப்பைக் கொண்டவையாக இருக்கும்.
அத்தகைய படங்களில் சிலவற்றை இயக்கி அளித்த ஃப்ரெஞ்சு திரை இயக்குநர் ஆலன் ரெனே. இவர் தனது 91ஆம் வயதில் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி காலமானார். அவர் எடுத்த துவக்க கால குறும்படத்தை இங்கே பார்க்கலாம்.
அவருடைய ஒரு சிறு பேட்டி ஒன்றை இங்கே காணலாம்.