சொல்வனம் இணைய இதழில் வந்திருக்கும் அனுக்ரஹாவின் அற்புதமான கவிதைக்கு வாழ்த்துக்கள்…
அருவாமணை எனக்கு எனது பாட்டியை நினைவுபடுத்துவது…
அவள் அதை வைத்துக் கொண்டு காய்கறிகள் மட்டுமா நறுக்குவாள்,
தான் யார் யாரோடு என்ன பேச வேண்டுமென்று நினைக்கிறாளோ அந்தந்த மனிதர்கள் அந்த அருவாமணையாக உருவெடுத்து அவள் அன்பை, வசவுகளை, எரிச்சலை, சில வேளைகளில் அபூர்வமாக மன்னிப்பைத் தலை குனிந்து நின்று கேட்டுக் கொள்வதை அருகே இருந்து பார்த்திருக்கிறோம் இளவயதில்…
அருவாமணை ஒரு பேச்சுத் துணை, புறக்கணிக்கப்பட்ட வீட்டுப் பெண்களுக்கு..
நல்ல கவிதைக்கு மீண்டும் வாழ்த்துக்கள்…
எஸ் வி வேணுகோபாலன்