இது சொல்வனத்தின் நூறாவது இதழ். இம்மகிழ்ச்சித் தருணத்தில் இதைச் சாத்தியமாக்கிய வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், நண்பர்களுக்கும், நலம் விரும்புவோருக்கும் எங்கள் இதயப் பூர்வமான நன்றி.
தமிழ் செம்மொழியாய் இருப்பதற்கு அடிப்படையில் இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று அநாதி காலமாக இம்மொழியில் சிந்தித்து, பேசி, எழுதி வரும் கோடிக் கணக்கான சாமான்ய மக்கள். இன்னொன்று இதன் செழுமையையும், வளமையையும், சீரிளமைத் திறனையும் தம் எழுத்துகளின் மூலம் தொடர்ந்து கட்டிக் காத்து வரும் இலக்கிய கர்த்தாக்கள். பாரதியுடன் துவங்கிய நவீன கால தமிழ் இலக்கியத்தின் முதன்மை இடத்தில் இருக்கும் சிகரங்களில் ஒருவரான திரு. அசோகமித்திரன் அவர்களின் சிறப்பிதழாக இந்த நூறாவது இதழை வெளிக் கொணர்வதில் பேருவகையும், பெருமிதமும் கொள்கிறோம்.
அசோகமித்திரனின் புகைப்படங்களை கொடுத்துதவிய ‘காலம்’ சிற்றிதழ் ஆசிரியர் குழுவுக்கு நன்றி
– ஆசிரியர் குழு.